விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!

மாடிஃபிகேஷன் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி மும்பை நகரத்தின் எம்எல்ஏ, சுஸுகி பர்க்மேனை ஸ்கூட்டரை மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!

சுஸுகி நிறுவனம், மேக்ஸி ரகத்திலான பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை கடந்த சில மாதங்களுக்கு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பிரமாண்டமான தோற்றத்தில் களமிறங்கிய இந்த ஸ்கூட்டருக்கு இந்தியாவில் கணிசமான வரவேற்பு நிலவி வருகிறது. இந்த ரகத்திலான ஸ்கூட்டருக்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!

இந்நிலையில், இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டரை மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டிரைக் ரக வாகனமாக மாற்றியமைத்துள்ளார். அந்த இளைஞர் வேறும் யாருமில்லை மும்பை நகரத்தின் எம்எல்ஏ வரிஸ் பதான்-தான் இவ்வாறு செய்துள்ளார். இந்த ஸ்கூட்டரை அவர் மும்பையின் சாலையில் வைத்து இயக்கும் வீடியோக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!

ஆல் இந்தியா மஜிலிஸ்-இ-இட்டெஹாதுல் முசுலிமீன் (AIMIM) என்ற கட்சியைச் சார்ந்த இவர், மும்பையை பூர்வீகமாகக் கொண்டு வசித்து வருகிறார். தற்போது மும்பை நகரத்தின் எம்எல்ஏ-வாக இருக்கும் இவர்தான், 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பு வழக்கில் சிறைச் சென்ற நடிகர் சல்மான் கானுக்கு வழக்குரைஞராக வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!

இவர்தான் தற்போது உச்சநீதிமன்ற விதியை மீறும்வகையிலான காரியத்தை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில், இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் பர்க்மேன் ஸ்கூட்டரை, மூவர் அமர்ந்து செல்லும் வகையில் அவர் மாற்றியமைத்துள்ளார். இதற்காக அந்த ஸ்கூட்டரின் பின்பக்க கட்டுமானம் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிசெய்யும் விதமாக, அந்த வீடியோக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அந்தவகையில், பர்க்மேனின் முன்பகுதி, அதன் உண்மையான தோற்றத்திலேயும், பின் பகுதி டிசைன் மட்டும் முழுவதுமாக மாற்றயமைக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக, ஸ்கூட்டரின் அகலத்தில் மட்டும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், நீளத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!

பர்க்மேனின் இந்த மாற்றத்திற்காக, ஸ்கூட்டரின் அடிப்பகுதி மற்றும் பாடி அமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, பின்பக்கத்தில் இருவர் அமரும் வகையில் பென்ச் போன்ற இருக்கை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய தோற்றத்தால், பர்க்மேன் சாரட்டு எனப்படும் பயணிகள் வாகனத்தைப் போன்று காட்சியளிக்கின்றது.

MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!

பின் இருக்கையைத் தொடர்ந்து ரைடரின் இருக்கையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ரைடருக்கு நாற்காலியைப் போன்ற இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பர்க்மேன் பல்வேறு மாற்றங்களப் பெற்று புதிய அவதாரத்தில் காட்சியளிக்கிறது. இதற்காக மும்பையின் எம்எல்ஏ வரிஸ் பதான் எவ்வளவு செலவு செய்துள்ளார் என்ற தகவல் கிடைக்கவில்லை.

விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!

தற்போது, இவர் பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டிருப்பது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக, அந்த பைக்கில் அமர்ந்து செல்லும் ஒருவர்கூட உயிர் கவசமான ஹெல்மெட்டை அணியவில்லை. தொடர்ந்து, வாகனங்களை மாடிஃபை செய்து இயக்கக்கூடாது என்று விதித்திருக்கும் உச்சநீதிமன்ற உத்தரவையும் அவர்கள் மீறியுள்ளனர். இவ்வாறு அவர் பல்வேறு விதிமுறை மீறல்களை மும்பை எம்எல்ஏ மேற்கொண்டுள்ளார்.

விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!

அண்மைக் காலங்களாக, ஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீஸார்கள், இதுபோன்ற மாடிஃபிகேஷன் வாகனங்களை தீவிரமாக செயல்பட்டு சிறைபிடித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பொதுமக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய எம்எல்ஏ இவ்வாறு செயல்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!

மேலும், இதுபோன்ற சிறிய ரகத்திலான திறனைக் கொண்ட எஞ்ஜினில் பெரியளவில் மாற்றங்களை மேற்கொள்வது அதன் எஞ்ஜினை முடக்குவதற்கான வாய்ப்பின ஏற்படுத்தும். ஏனென்றால், ஸ்கூட்டர்களின் எஞ்ஜினின் இழுவை விசையானது, அதன் பாடி மற்றும் வாகனத்தில் அமர்பவர்களுக்கு ஏற்றவாறு பொருத்தப்படுகின்றன. இவையனைத்தும் மாறும்பட்சத்தில் ஸ்கூட்டரின் எஞ்ஜினுக்கு அதிகப்படியான வேலைப் பலு ஏற்படும். இதனால், அதன் எஞ்ஜின் திறன் முடங்குவதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது.

விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் 124சிசி திறனை வெளிப்படுத்தும் வகையிலான லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.6 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது. மேலும், இந்த எஞ்ஜின் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனில் இயங்குகிறது.

Source: F3news

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India’s First Modified Suzuki Burgman. Read In Tamil.
Story first published: Thursday, May 30, 2019, 13:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X