ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளில் பவர்ஃபுல்லான புதிய பிஎஸ்-6 எஞ்சின்!

ஜாவா ஸ்டான்டர்டு மற்றும் ஜாவா 42 பைக்குகளில் விரைவில் சக்திவாய்ந்த பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளில் பவர்ஃபுல்லான புதிய பிஎஸ்-6 எஞ்சின்!

கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக் மாடல்களில் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 293 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வர இருக்கும் புதிய பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக எஞ்சினை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளில் பவர்ஃபுல்லான புதிய பிஎஸ்-6 எஞ்சின்!

எனவே, ஜாவா 300 மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு பைக் மாடல்களிலும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான கூடுதல் சக்திவாய்ந்த எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளில் பவர்ஃபுல்லான புதிய பிஎஸ்-6 எஞ்சின்!

அதாவது, சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா பெராக் பைக்கில் பயன்படுத்தப்படும் பிஎஸ்-6 எஞ்சின்தான் ஜாவா 300 மற்றும் ஜாவா 42 ஆகிய பைக் மாடல்களிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளில் பவர்ஃபுல்லான புதிய பிஎஸ்-6 எஞ்சின்!

ஜாவா 300 மற்றும் ஜாவா 42 மாடல்களில் பயன்படுத்தப்படும் 293 சிசி எஞ்சினின் போர் அளவு அதிகரிக்கப்பட்டு பெராக் பைக்கில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, பெராக் பைக்கில் 334 சிசி எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரானது.

ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளில் பவர்ஃபுல்லான புதிய பிஎஸ்-6 எஞ்சின்!

இந்த எஞ்சினையே ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளில் பயன்படுத்தப்படும். தற்போதுள்ள 293 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளில் பவர்ஃபுல்லான புதிய பிஎஸ்-6 எஞ்சின்!

ஆனால், பெராக் பைக்கில் உள்ள புதிய 334சிசி பிஎஸ்-6 எஞ்சின் 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இதிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது.

ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளில் பவர்ஃபுல்லான புதிய பிஎஸ்-6 எஞ்சின்!

அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது, பெராக் பைக்கின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. அதேபோன்று, ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடலானது அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளில் பவர்ஃபுல்லான புதிய பிஎஸ்-6 எஞ்சின்!

தற்போது ஜாவா 300 பைக் ரூ.1.55 லட்சத்திலும், ஜாவா 42 பைக் ரூ.1.64 லட்சத்திலும், ஜாவா பெராக் பைக் ரூ.1.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைகளிலும் கிடைக்கிறது. இதில், ஜாவா பெராக் பைக் பிஎஸ்-6 மாடலாக உள்ளது. இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சினுடன் ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகள் வரும்போது விலை ரூ.15,000 வரை அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa Motorcycles is planning to offer BS-VI compliant engines on the Jawa 300 and the Jawa Forty Two. The company says that while it will upgrade the engines that are currently featured on the motorcycles, it will mount the BS-VI compliant engine from the recently launched Perak.
Story first published: Tuesday, November 19, 2019, 10:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X