இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

ஜாவா நிறுவனத்தின் ஜாவா 42 பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் பைக்குடைய கலர் ட்ரீட்மெண்டைப் பெற்று, மாடிஃபிகேஷனுக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

1970ம் கால கட்டத்தில் இந்தியாவில் விற்பனையான புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில், ஜாவா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிளும் ஒன்றாக இருந்தன. இந்த நிறுவனம், மீண்டும் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக இந்தியாவில் கடந்த ஆண்டு களமிறங்கியது.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

முக்கியமாக இந்நிறுவனம், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்கப்பட்டது. அதற்கேற்ப வகையில், முன்னதாக தனிக்காட்டு ராஜாவாக விற்பனையில் கொடிகட்டி பறந்துவந்த, கிளாசிக் பைக்கின் விற்பனை சற்று ஆட்டத்தை கண்டது.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

அந்தவகையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியாக ஜாவா நிறுவனம் மூன்று மாடல் பைக்குகளை களமிறக்கியது குறிப்பிடத்தகுந்து.

இதில், முன்னதாக ஜாவா மாடலும், இதையடுத்து ஜாவா 42 மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், மூன்றாவது மாடலான ஜாவா பெராக் நடப்பாண்டின் இறுதியில்தான் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

அதேசமயம், முன்னதாக விற்பனைக்கு வந்த ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய பைக்குகளின் உற்பத்தி பற்றாக் குறை காரணமாக, புக்கிங் செய்த பலருக்கு பைக்குகளை டெலிவரி செய்ய முடியாமல் ஜாவா நிறுவனம் திக்குமுக்காடி வருகின்றது.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அதில், அதிர்ஷ்டவசமாக ஜாவா 42 பைக்கை ஏற்கனவே டெலிவரிப் பெற்ற பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதனை மிகவும் மிடுக்கான ஸ்டைலில் மாடிஃபை செய்துள்ளார். இதற்காக, அவர் மும்பையைச் சேர்ந்த மாடிஃபை நிறுவனத்தை நாடியள்ளார்.

ஆகையால், இந்த ஜாவா 42 பைக் பாம்பே கஸ்டம் ஒர்க்ஸ் மூலம் புதிய தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

அந்தவகையில், பைக்கிற்கு ஒட்டுமொத்தமாக கஃபே ரேஸர் ட்ரீட்மெண்டிலான கருப்பு நிற ஸ்கீம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஜாவா 42 தொடர்ந்து அதன் ரெட்ரோ ஸ்டைல் நிலைப்பாட்டையே வெளிக் காட்டினாலும், இது ஒரு தனித்துவமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த பிரத்யேக மாற்றத்தால், அது ஜாவா 42 என்ற பெயருக்கு பதிலாக ஜாவா பிளாக் என்ற புனைப் பெயரை அது பெற்றுள்ளது.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

இந்த பைக்கின் தனித்துவமான லுக்கிற்காக, அந்த மாடிஃபை நிறுவனம் பைக்கின் அனைத்து பாகங்களுக்கும் மேட் ஃபினிஸ் கொண்ட கருப்பு வண்ணத்தை வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையால், ஜாவா 42 பைக் துடிப்பான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், பைக்கின் பெட்ரோல் டேங்க் தொடங்கி சைலென்சர், எஞ்ஜின், வீல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

மேலும், ஒரிஜினல் இருக்கை அமைப்பை நீக்கிய மாடிஃபை நிறுவனம், அந்த பைக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட, நீண்ட அமைப்பைக் கொண்ட இருக்கையை வழங்கியுள்ளது. இத்துடன், பஜாஜ் வி மாடல் பைக்கில் இருப்பதைப்போன்று, பயணி அமரும் பகுதியில் கவுல் போன்ற அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

அதேபோன்று, முன்பக்க மட்குவார்ட் சற்று குட்டையானதாக ரிபீளேஸ் செய்யப்பட்டுள்ளது. பைக்கின் ஸ்டைலான லுக்கிற்காக மேற்பட்ட பல மாற்றங்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. தொடர்ந்து, பின்பக்கத்தில் இருந்த மட்குவார்ட் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதன் ரியர் லைட், பின்னிருக்கை பகுதியில் உள்ள கம்பி போன்ற அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

மேலும், பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஹெட்லேம்ப், ஹேண்டில் பார் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, புதிதாக ஸ்போர்ட்டி லுக்கிலான ஹெட்லேம்ப் மற்றும் கிளிப் ஆன் யூனிட்டுகள் அதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன், சிறப்பான ரைடிங் அனுபவத்திற்காக, ஃபூட் பெக்குகள், பிரேக்கிங் லிவர்கள் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களும் டிசைனில் மாறுபட்டு காணப்பட்டாலும், எஞ்ஜின் திறனில் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. அந்தவகையில், 293 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், லிக்யூடு கூல்ட், டிஓஎச்சி எஞ்ஜின் அந்த இரு மாடல் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

மேலும், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை அடுத்து இந்த பைக்கில் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், ட்யூவல் சேனல் கொண்ட, ஜாவா பைக் ரூ. 1.72 லட்சத்திற்கும், ஜாவா 42 பைக் ரூ. 1.64 லட்சத்திற்கும் விற்பனைச் செய்யப்ட உள்ளன. இந்த மாடல்களின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடல் ரூ. 1.64 லட்சத்திலும், ரூ. 1.55 லட்சத்திலும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. மேற்கூறிய அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...

இவ்விரு பைக்குகளைத் தொடர்ந்து, ஜாவா நிறுவனம் ஜாவா பெராக் மாடலை இந்த வருடத்தின் இறுதிக்குள் விற்பனை களமிறக்க இருக்கின்றது. இந்த பெராக் பைக்கில் 334சிசி கொண்ட லிக்யூடு கூல்டு டிஓஎச்சிஎஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 30 பிஎச்பி பவரையும் 31என்எம் டார்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது, ரூ. 1.89 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

Most Read Articles
English summary
Jawa 42 given all black treatment like Royal Enfield Classic. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X