இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான ஜாவா பைக்!

உண்மையான உருவத்தை இழந்து, புதிய தோற்றத்தைப் பெற்ற பிரபல நிறுவனத்தின் பைக். கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

வாகன ஓட்டிகள் தங்களின் ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்வது போல், அவர்களில் சிலர் தங்களின் வாகனங்களையும் விருப்பத்திற்கேற்பவாறு மாடிஃபை செய்துகொள்கின்றனர். அந்தவகையில், விலையுயர்ந்த பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், ஸ்டைலிலும், சிறப்பம்சத்திலும் கூடுதல் சிறப்பு கொண்ட பைக்குகளாக, அவை மாடிஃபிகேஷனைப் பெறுகின்றன.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

இதனால், பல சமயங்களில் அந்த வாகனங்கள், அதன் உண்மைத் தோற்றத்தை இழந்து, புதிய தோற்றத்தைப் பெறுகின்றன. அவ்வாறான, ஓர் புதிய உருவத்தைத்தான் பிரபல நிறுவனம் ஒன்றின் புகழ்வாய்ந்த மாடல் பைக் பெற்றுள்ளது. இந்த ஸ்பெஷ் தோற்றத்தை ஆட்டோலோக் டிசைன் என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

மேலும், அந்த மாடிஃபை செய்யப்பட்ட பைக்கின் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. அதேசமயம், அது வாகன உலகின் டாப்10 செய்திகளில் இடம்பெற்று முன்னிலை வகித்து வருகின்றது.

அத்தகையை தோற்றத்தை, கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான ஜாவா நிறுவனத்தின் ஜாவா 42 மாடல் பைக்தான் பெற்றிருக்கின்றது. ரூ. 1.5 லட்சம் செலவில் இந்த புதிய தோற்றத்தை ஜாவா 42 பைக் பெற்றிருக்கின்றது.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

இந்த பைக்கை, பெங்களூருவில் நடைபெற்ற 17வது சர்வதேச ஜாவா தினத்தில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும், கண்காட்சியில் ஜாவா மற்றும் யெஸ்டி நிறுவனத்தின் வின்டேஜ் பைக்குகளும் காட்சிப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, கூடுதலாக மேலும் சில கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஜாவா பைக்குகளும் இடம்பெற்றிருந்தன.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஆனால், அவையனைத்திலும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஜாவா ஸ்கிராம்பிளர் 42 என்ற பைக் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த பிரத்யேக நடவடிக்கையை புனே நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஆட்டோலோக் டிசைன் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

மாடிஃபிகேஷனானது, ஸ்கிராம்பிளர் ரகத்தில் செய்யப்பட்டிருப்பதால், ஜாவா 42 என்ற பெயர் மாற்றப்பட்டு ஸ்கிராம்பிளர் 42 என வைக்கப்பட்டுள்ளது.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

இத்துடன், கடந்த 1970ம் ஆண்டுகளில் இந்தியாவில் புரட்சி செய்த ஜாவா நிறுவனத்தின் மோட்டோகிரா்ஸ் பைக்கின் கூறுகளைக் கொண்டு, புதிய ஜாவா 42 பைக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த பைக்கின் பெயருக்கேற்பாற்போல, அதன் ஸ்டைல் மற்றும் வண்ண அலங்கரிப்பு மிகவும் பிரத்யேகமாக செய்யப்பட்டுள்ளது.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

அந்தவகையில், பைக்கிற்கு ரேஸ் மற்றும் ஸ்போர்டி லுக்கினை வழங்கும் வகையில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் அதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்கள் கடந்த கால ஜாவா மோட்டோகிராஸ் பைக்குகளை நினைவூட்டும் வகையில் இருக்கின்றது.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

அதேசமயம், ஜாவா 42 பைக்கின் மையப்பகுதி மட்டும் அப்படியே தக்கவைக்கப்பட்டநிலையில், மோட்டார் சைக்கிளுக்கு ஒரு சுறுசுறுப்பான சுயவிவரத்தை வழங்குவதற்காக வெளிப்புறங்கள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

இத்துடன், மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக, ஜாவா 42 பைக்கிற்கு ஸ்கிராம்பிளர் ரகத்திலான எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது, பள்ளம், மேடுகள் நிறைந்த சாலையில் பயணிக்க உதவும் வகையில், மேலெழும்பிய நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த எக்சாஸ்ட் சிஸ்டத்தைத் தாங்கி பிடிக்கும் வகையில், அதன் பக்கவாட்டு பேனல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

இந்த பக்கவாட்டு பேனலின் சிறப்பான தோற்றத்திற்காக, பேனலுக்கு மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்துடன்கூடிய, 42 என்ற எண் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பைக்கின் பின் பக்க ஃபென்டர் நீக்கப்பட்டு இருக்கையின், பின் அமைப்புடன் கூடிய குட்டையான ஃபென்டர் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, முன் பக்கத்திற்கும் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏதுவான மட்குவார்ட் வழங்கப்பட்டுள்ளது.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

ஃபோர்க் கெய்டர்கள் சிவப்பு நிறத்தில் செய்யப்பட்டுள்ளன, இது ஜாவா மோட்டோகிராஸ் பைக்குகளுடன் தொடர்புடைய மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

இதைத்தொடர்ந்து, ஜாவா 42 பைக்கின் ஒரிஜினல் ஹேண்டில் பார்கள் மாற்றப்பட்டு, பரந்த அலகுடன் கூடிய புதிய ஹேண்டில் பார்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், ஆஃப் ரோட் பயணத்திற்கு ஏதுவான லிவர்களும் இதில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

எஞ்ஜினின் பாதுகாப்பிற்காக மெட்டல் பேஷ் பிளேட், அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. கல் மற்றும் சாலை மோதல்களில் இருந்து எஞ்ஜினை இது பாதுகாக்கும். தொடர்ந்து, ஆஃப்ரோடு பயணத்திற்கு ஏதுவான க்னாப்பி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய பிரத்யேக மாற்றங்களால், ஜாவா 42 பைக், ஸ்கிராம்பிளர் 42-வாக மாறியுள்ளது.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

ஜாவா 42 பைக்கை மாடிஃபிகேஷனுக்காக, ஜாவா நிறுவனமே வழங்கியதாக கூறப்படுகின்றது. இந்த புதுமையான மாற்றத்திற்காக ரூ. 1.5 லட்சம் ஜாவா நிறுவனம், அட்டோலோகிற்கு வழங்கியுள்ளது. இந்த வடிவமைப்பு, அதன் ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளநிலையில், ஆட்டோலோக் நிறுவனம், அதனை கிட்டாக விற்பனைச் செய்ய முன்வரலாம் என கூறப்படுகின்றது.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

அவ்வாறு, அந்நிறுவனம் மாடிஃபிகேஷனை கிட்டாக வழங்குமேயானால், அதனை ரூ. 50 ஆயிரம் அல்லது அதற்கு குறைவான விலையில் விற்பனைக்குக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

கடந்த வருடம் ஜாவா நிறுவனம், ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு மாடல் மோட்டார்சைக்கிள்களை இந்தியச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த இரு பைக்குகளும் டிசைனில் மாறுபட்டு காணப்படுகின்றன. இருப்பினும், எஞ்ஜின் திறனில் அவை ஒரே மாதிரியானதாக இருக்கின்றன.

இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா...? ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...!!

அந்தவகையில், ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு பைக்குகளிலும் 293 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், லிக்யூடு கூல்ட், டிஓஎச்சி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

Image Courtesy: Autologuedesign/Instagram

Most Read Articles
English summary
Jawa 42 Modified To Look Like A Scrambler — Autologue Design Has Set The Bar Really High. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X