ஜாவா 42 பைக்கை சிங்கிள் இருக்கைக்கு மாற்றிய உரிமையாளர்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதாம்...

ஜாவா 42 பைக்கின் உரிமையாளர் ஒருவர் தனது பைக்கை முழுவதும் மாற்றியமைத்து ஜாவா நிறுவனத்தின் பெராக் மாடலின் தோற்றத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதற்கு அவர் செலவழித்துள்ள தொகை வெறும் ரூ.1,000 தானாம்.

ஜாவா 42 பைக்கை சிங்கிள் இருக்கைக்கு மாற்றிய உரிமையாளர்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதாம்...

இந்த மாற்றத்தால் ஜாவா 42 பைக் கிட்டத்தட்ட பெராக் பைக்கின் தோற்றத்தை பெற்றாலும், சாலையில் செல்லும்போது இரண்டிற்கும் இடையே வித்தியாசம் இருக்கும். இந்த மாற்றத்தில் கவனிக்கத்தக்க விஷயமாக ஜாவா 42 பைக் வழக்கமாக கொண்டிருக்கும் இருக்கை அமைப்பிற்கு பதிலாக பெராக் பைக்கில் உள்ளதை போன்று ஒற்றை இருக்கை பொருத்தப்பட்டுள்ளது.

ஜாவா 42 பைக்கை சிங்கிள் இருக்கைக்கு மாற்றிய உரிமையாளர்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதாம்...

இதுதவிர பெராக் மாடலிலும் இல்லாத முக்கோண வடிவிலான பக்கவாட்டு பேனல்கள் மற்றும் அகலமான பின்புற டயர் உள்ளிட்டவற்றை ஜாவா 42 மாடல் இந்த கஸ்டமைஸ்ட் மாற்றத்தால் பெற்றுள்ளது. சிறிய அளவில் தான் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் பைக்கானது கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. மற்றப்படி இயந்திர பாகங்களில் எந்த மாற்றத்தையும் உரிமையாளர் தனது ஜாவா 42 பைக்கில் ஏற்படுத்தவில்லை.

ஜாவா 42 பைக்கை சிங்கிள் இருக்கைக்கு மாற்றிய உரிமையாளர்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதாம்...

ஜாவா 42 பைக்கானது 293சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 27 பிஎச்பி பவரையும் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஜாவா 42 பைக்கின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.55 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜாவா 42 பைக்கை சிங்கிள் இருக்கைக்கு மாற்றிய உரிமையாளர்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதாம்...

ஜாவா பெராக் பைக் மாடலானது 334சிசி என்ஜினுடன் அதிகப்பட்சமாக 30 பிஎச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக வழங்கப்பட்டுள்ளது. பின்புற சஸ்பென்ஷனாக மோனோ-ஷாக் மற்றும் பெரிய டயர் அமைப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட இந்த பைக்கானது ரூ.1.95 லட்சத்தில் எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஜாவா 42 பைக்கை சிங்கிள் இருக்கைக்கு மாற்றிய உரிமையாளர்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதாம்...

பெராக் பைக்கிற்கான முன்பதிவை வருகிற 1ஆம் தேதி முதல் துவங்கவுள்ள ஜாவா நிறுவனம், இந்த பைக்கின் டெலிவரிகளை 2020 ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. முன்பதிவை மீண்டும் துவங்குவதற்கு முன்னதாகவே இந்த பைக்கின் முன்பதிவு மற்றும் டெலிவரிக்கான வேலைகளை தீவிரமாக செய்து முடிக்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஜாவா 42 பைக்கை சிங்கிள் இருக்கைக்கு மாற்றிய உரிமையாளர்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதாம்...

ஜாவா ப்ராண்ட்டை நிர்வகித்து வருகின்ற கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம், தனது மற்றொரு எஸ்ட்டி ப்ராண்ட்டில் இருந்து இரண்டாவது மோட்டார்சைக்கிள் தொகுப்பை வெளியிடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய பைக்குகளின் அறிமுகம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியாகாத நிலையில், இந்த பைக்குகள் 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகமாகும் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஜாவா 42 பைக்கை சிங்கிள் இருக்கைக்கு மாற்றிய உரிமையாளர்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதாம்...

மீண்டும் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட ஜாவா 42 பைக்கிற்கு வருவோம். வெறும் 1000 ரூபாயில் இவ்வாறு பைக் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை தான் ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஜாவா 42 பைக்கின் தோற்றம் முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. இவ்வளவு ஏன், விற்பனை மாடலை விட இந்த கஸ்டமைஸ்ட் பைக் சிறந்த தோற்றத்தை கொண்டுள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

Source: Rushlane

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

ஒரு சிலர் தங்கள் பைக்கில் கூடுதல் கவர்ச்சியை சேர்ப்பதற்காக இவ்வாறு மாடிபிகேஷன்களை செய்து வருகின்றனர். அதே சமயம் வேறு சிலரோ, மிகவும் உபயோகமான ஒரு சில மாடிபிகேஷன்களை தங்கள் பைக்கில் செய்கின்றனர்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இந்த வகையில் பெட்ரோலில் இயங்க கூடிய ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இளைஞர் ஒருவர் ஹைப்ரிட் பைக்காக மாற்றம் செய்துள்ளார். இதன் மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விஷயங்கள் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்குவது உறுதி. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பொதுமக்களிடம் அதிகம் கொண்டு சென்று சேர்க்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம், சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லை என்பது போன்ற ஒரு சில நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இருந்தபோதும் அவற்றை களைய மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது அதற்கு ஓர் உதாரணம். இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறைய தொடங்கியுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

அத்துடன் நாடு முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் கட்டமைக்க தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு படிப்படியாக எடுத்து கொண்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளால் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கவனமும் தற்போது மின்சார வாகனங்களின் மீது திரும்பி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கமே இதற்கு காரணம். இதுதவிர வாகன மாடிபிகேஷன்களில் ஆர்வம் கொண்டுள்ள தனி நபர்கள் சிலரும் கூட, பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றம் செய்து வருகின்றனர்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இந்த வரிசையில் பெட்ரோலில் இயங்க கூடிய ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ரோ (Hero Splendor Pro) பைக் ஒன்று ஹைப்ரிட் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாடிபிகேஷன் செய்யப்பட்ட இந்த பைக் பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இயங்கும். இது தொடர்பான வீடியோ யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

க்ரியேடிவ் சயின்ஸ் என்ற யூ-டியூப் சேனல்தான் இந்த வீடியோவை அப்லோட் செய்துள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ரோ பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்ற பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் பார்வையாளர்களுக்கு அதன் படிநிலைகளும் தெளிவாக விளக்கி கூறப்பட்டுள்ளன.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இதன்படி பெரும்பாலான மாடிபிகேஷன்கள் பைக்கின் பின் பகுதி மற்றும் இருக்கைக்கு அடியில்தான் செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு பின் பக்க வீல் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய 17 இன்ச் ஆஃப்டர் மார்க்கெட் வீல் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாக் யூனிட்டை காட்டிலும் இந்த வீல் அகலமாக காணப்படுகிறது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

அதேபோல் ரியர் ஃபோர்க்கும் மாற்றப்பட்டு, அகலமான ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இது ஹோண்டா ஷைன் பைக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைசேஷன் ப்ராஜெக்டில், பேட்டரியை இன்ஸ்டால் செய்வதுதான் மிகவும் சிக்கலான காரியமாக இருந்திருக்கலாம். எனினும் ஸ்டாக் சீட் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு, ஃப்ரேமுக்கு அடியில் சில மாடிபிகேஷன்களை செய்து பேட்டரியை தஞ்சமடைய செய்துள்ளனர்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

அதே சமயம் ஸ்டாக் ரியர் சஸ்பென்ஸன் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக நீளமான யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி கனகச்சிதமாக பொருந்த இது கூடுதல் இட வசதியை வழங்கியுள்ளது. இதில், 72v, 30 amp லித்தியம் இயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால், 90-100 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

பாதுகாப்பை முன்னிட்டு, ஸ்டீல் பாக்ஸில் பேட்டரி உறையிடப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்டாக் ஏர் ஃபில்டர் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் எலெக்ட்ரிக் இன்ஜினிற்கான கண்ட்ரோலர் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பைக் ஆஃப்டர் மார்க்கெட் எச்பி ஏர் ஃபில்டரையும் பெற்றுள்ளது. அதே சமயம் வலது ஹேண்டில்பாரில், எலெக்ட்ரிக் மோட்டாருக்கு என தனியே ஆன்/ஆஃப் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இந்த பைக்கில் மற்றொரு முக்கியமான சிறப்பம்சமும் அடங்கியுள்ளது. அதாவது பெட்ரோல் இன்ஜின் ரன்னிங்கில் இருக்கும்போது, இதன் லித்தியம் இயான் பேட்டரி ஆட்டோமெட்டிக்காக ரீசார்ஜ் செய்து கொள்ளும். இது மிகவும் பயனுள்ள வசதியாக இருக்கும். இது தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அரசு ஊக்குவித்தால், இருக்கும் ஒரு சில குறைகளையும் களைந்து, அவர்களால் சிறப்பான ஒரு தயாரிப்பை வெளிக்கொணர முடியும். ஆனால் அரசின் பார்வை படாததால் இதுபோன்ற நபர்கள் பலர் காணாமல் போய் விடுகின்றனர் என்பதே உண்மை.

Source: Creative Science/YouTube

Most Read Articles

English summary
Jawa 42 Single Seat Modification Costs Rs 1,000: Perak Inspired Styling
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X