ரூ.1.72 லட்சம் விலையில் லிமிடேட் எடிசன் பைக்கை அறிமுகம் செய்தது ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம்...

இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் நிறுவப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தனது கிளாசிக் 300 பைக்கின் லிமிடேட் எடிசனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக்கின் விலை ரூபாய் 1.72 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் வெறும் 90 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

ரூ.1.72 லட்சம் விலையில் லிமிடேட் எடிசன் பைக்கை அறிமுகம் செய்தது ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம்...

டூயல்-சேனல் ஏபிஎஸ் வெர்சனை அடிப்படையாக கொண்ட இந்த பைக்கின் விலை ஜாவா மோட்டார்ஸின் நிலையான வேரியண்ட்களின் விலைக்கு இணையாக உள்ளது. ஆனால் இப்பைக்கில் உள்ள சில சிறப்பம்சங்களே இந்த அதிகமான விலைக்கு முக்கிய காரணம்.

ரூ.1.72 லட்சம் விலையில் லிமிடேட் எடிசன் பைக்கை அறிமுகம் செய்தது ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம்...

இந்த லிமிடேட் பைக்கின் சிவப்பு மற்றும் யானை தந்தந்தின் நிறம் கலந்த பெயிண்ட் அமைப்பு. இந்த பெயிண்ட் அமைப்பு ஜாவா மோட்டார்ஸின் முதல் மோட்டார்சைக்கிளான ஜாவா 500 ஓஎச்வி-ல் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.

ரூ.1.72 லட்சம் விலையில் லிமிடேட் எடிசன் பைக்கை அறிமுகம் செய்தது ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம்...

அதற்கு அடுத்ததாக இப்பைக்கின் எரிபொருள் டேங்கில் 90 வருடங்கள் நிறைவு என்கிற முத்திரை. இவையே இந்த லிமிடேட் எடிசனின் அதிகப்படியான விலைக்கு காரணம். இதன் என்ஜின் உள்ளிட்ட பைக்கை இயக்கும் பாகங்களின் முழு தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

ரூ.1.72 லட்சம் விலையில் லிமிடேட் எடிசன் பைக்கை அறிமுகம் செய்தது ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம்...

இதையெல்லாம் விட சுவாரஸ்யமாக இப்பைக்கின் முன்பதிவு ஜாவா மோட்டார்ஸின் அனைத்து ஷோரூம்களிலும் தொடங்கப்பட்டுவிட்டன. இதனால் பல வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தாங்கள் புக் செய்திருந்த ஜாவா மாடல் பைக்கிற்கு பதிலாக இந்த ஸ்பெஷல் எடிசனிற்கு தங்களது முன்பதிவை மாற்றி வருகின்றனர்.

ரூ.1.72 லட்சம் விலையில் லிமிடேட் எடிசன் பைக்கை அறிமுகம் செய்தது ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம்...

ஆனால் ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம் குலுக்கல் முறையிலேயே பைக்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. இதனால் பைக்கை யார் முதலில் முன்பதிவு செய்தார் என்பது முக்கியமல்ல. இந்த லிமிடேட் எடிசன் பைக்கை பெற போகும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

ரூ.1.72 லட்சம் விலையில் லிமிடேட் எடிசன் பைக்கை அறிமுகம் செய்தது ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம்...

ஜாவா நிறுவனம் கடந்த ஒரு வருடத்திற்கும் முன்பாகவே ஜாவா, ஜாவா42 என்ற இரு மாடல் பைக்குகளை அறிமுகம் செய்திருந்தது. இதற்காக பல வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு பைக் சென்றடையவில்லை.

ரூ.1.72 லட்சம் விலையில் லிமிடேட் எடிசன் பைக்கை அறிமுகம் செய்தது ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம்...

இதற்கிடையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த லிமிடேட் எடிசன் பைக்கை ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் மட்டுமே பெற முடியம். இல்லையெனில் வரும் 22ந் தேதி நள்ளிரவுக்குள் ரூ.5,000 முன்பணத்துடன் புக் செய்தவர்கள் பெயர் குலுக்கலில் சேர்க்கப்படும். மேலும், மிக விரைவிலேயே பைக் தங்களிடம் வந்து சேர்ந்துவிடும் என்பது தான் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.

Most Read Articles
English summary
New Jawa 90th Anniversary Edition Model Launched In India: Priced At Rs 1.73 Lakh
Story first published: Thursday, October 10, 2019, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X