ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கை வீட்டிற்கு ஓட்டிசெல்லும் முதல் நபர் இவர்தான்!

ஜாவா நிறுவனம் 90ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வெறும் 90 யூனிட்களில் ஸ்பெஷல் எடிசனை கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தியது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு ஜாவா நிறுவனத்தில் இருந்து பைக் ஒன்று சந்தைக்கு வருவதால் இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவானது.

ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கை வீட்டிற்கு ஓட்டிசெல்லும் முதல் நபர் இவர்தான்!

இதனால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கை முன்பதிவு செய்தனர். இதற்கிடையில், இந்த 90 யூனிட்களும் குலுக்கல் முறையிலேயே வழங்கப்படவுள்ளது. யார் முதலில் முன்பதிவு செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல ஜாவா நிறுவனம் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.

ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கை வீட்டிற்கு ஓட்டிசெல்லும் முதல் நபர் இவர்தான்!

இதற்காக அக்டோபர் 22ஆம் தேதிக்கு முன்னதாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அந்நிறுவனம் கூறியது. இந்திய எக்ஸ்ஷோரூம்களில் இந்த பைக்கின் விலை ரூ.1.73 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கை வீட்டிற்கு ஓட்டிசெல்லும் முதல் நபர் இவர்தான்!

ஜாவாவின் முதல் மாடல் பைக்கான ஜாவா 500 ஓஎச்வி-ன் அதே அரக்கு மற்றும் வெள்ளை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் எரிபொருள் டேங்க்கின் மேற்புறத்தில் ஆனிவர்சரி எடிசன் பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 90 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் எடிசன் பைக்குகளை டெலிவரி செய்ய ஜாவா நிறுவனம் தற்போது ஆரம்பித்துள்ளது.

ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கை வீட்டிற்கு ஓட்டிசெல்லும் முதல் நபர் இவர்தான்!

அதன்படி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வாடிக்கையாளர் ப்ரதீப் யாதவ் இந்த பைக்கை டெலிவரி செய்ததை குறித்து பேசுகையில், இந்தியாவில் ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கின் முதல் உரிமையாளராக நான் தேர்வானதற்கு பெருமையாக உள்ளது. சஹால் ஆட்டோமொபைல்ஸ் (குர்கான், ஹரியானா) நிறுவனத்தின் உரிமையாளர் அவ்தார் சிங் சஹாலுக்கு இந்நேரத்தில் நன்றி கூறி கொள்கிறேன் என்றார்.

ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கை வீட்டிற்கு ஓட்டிசெல்லும் முதல் நபர் இவர்தான்!

ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கை ப்ரதீப் யாதவ் மிக விரைவில் வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். ஏனெனில் ஜாவாவின் மற்ற மோட்டார்சைக்கிள்களை முன்பதிவு செய்த பெரும்பாலானோர் 10 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.

ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கை வீட்டிற்கு ஓட்டிசெல்லும் முதல் நபர் இவர்தான்!

இந்த ஸ்பெஷல் எடிசனை டெலிவரி செய்ததோடு மேலும் மூன்று புதிய மாடல் பைக்குகளை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜாவா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. பேராக், ஆப் ரோடு, ஸ்க்ரம்ப்ளேர் என மூன்று வேரியண்ட்களில் இந்த பைக்குகள் தயாரிக்கப்பட இருக்கின்றன.

ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கை வீட்டிற்கு ஓட்டிசெல்லும் முதல் நபர் இவர்தான்!

இருப்பினும் என்ஜின் ஆனது இந்த மூன்று புதிய பைக்குகளிலும் வித்தியாசமாகவும், இந்திய சந்தையில் வெவ்வேறான பிரிவிலும் இவை விற்கப்படவுள்ளன. இவற்றின் அறிமுகம் அடுத்த 18 மாதங்களில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பைக்குகள் குறித்த வேறெந்த தகவல்களும் இப்போதைக்கு வெளிவரவில்லை. அநேகமாக வருகிற 15ஆம் தேதி நடைபெறவுள்ள ஜாவா 90ஆம் ஆண்டு விழாவில் இந்த பைக்கின் தகவல்கள் அறிவிக்கப்படலாம்.

ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கை வீட்டிற்கு ஓட்டிசெல்லும் முதல் நபர் இவர்தான்!

ஜாவா நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் ஜாவா, ஜாவா 42 என்ற இரு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்திருந்தது. இவற்றிற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகவே டெலிவரியை 2019 செப்டம்பரில் நடத்த அந்நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் தற்போது இந்த வருட இறுதியில் தான் இவற்றின் டெலிவரி நடைபெறும் என தெரிகிறது.

ஜாவா ஸ்பெஷல் எடிசன் பைக்கை வீட்டிற்கு ஓட்டிசெல்லும் முதல் நபர் இவர்தான்!

ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளை விட பேராக் மாடல் பெரிய 334சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜினுடன் வடிவமைக்கப்பட இருக்கிறது. இதன் என்ஜின் 30 பிஎச்பி பவரையும் 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பிஎஸ்6 தரத்தில் ரூ.1.89 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த பேராக் பைக்கின் அறிமுகம் அடுத்த ஆண்டு மத்தியில் நடக்கலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Jawa 90th anniversary edition first owner takes delivery
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X