90ம் ஆண்டு கொண்டாட்டம்... விரைவில் ஸ்பெஷல் ஜாவா பைக் அறிமுகமாகிறது!

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் துவங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், க்ளாசிக் 300 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

90ம் ஆண்டு கொண்டாட்டம்... விரைவில் ஸ்பெஷல் ஜாவா பைக் அறிமுகமாகிறது!

கடந்த 1929ம் ஆண்டு செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஜாவா நிறுவனம் துவங்கப்பட்டது. மிக நீண்ட பாரம்பரியமும், இந்தியர்களின் மனதிற்கு நெருக்கமான ஜாவா நிறுவனம் துவங்கப்பட்டு 90 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறது.

90ம் ஆண்டு கொண்டாட்டம்... விரைவில் ஸ்பெஷல் ஜாவா பைக் அறிமுகமாகிறது!

இதனை கொண்டாடும் வகையில், இந்தியாவில் ஜாவா க்ளாசிக் 300 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வழக்கமான ஜாவா க்ளாசிக் 300 பைக்கைவிட, கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் இந்த பைக் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.

90ம் ஆண்டு கொண்டாட்டம்... விரைவில் ஸ்பெஷல் ஜாவா பைக் அறிமுகமாகிறது!

ஜாவா நிறுவனம் துவங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் விதமாக, மொத்தமாக 90 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இந்த பைக்குகள் அனைத்தும் டெலிவிரி கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயம்.

90ம் ஆண்டு கொண்டாட்டம்... விரைவில் ஸ்பெஷல் ஜாவா பைக் அறிமுகமாகிறது!

ஏனெனில், ஜாவா பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பல மாதங்களாக தங்களது பைக்கை டெலிவிரி பெறுவதற்கு அலுத்து போய் காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையில், ஜாவா பிரியர்களுக்கு உற்சாகம் தரும் செய்தியாக இந்த பைக்குகள் உடனடியாக டெலிவிரி கொடுக்கப்பட உள்ளன.

MOST READ: விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ஓடி வந்து உதவிய முதல்வர்... காரை கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பினார்

90ம் ஆண்டு கொண்டாட்டம்... விரைவில் ஸ்பெஷல் ஜாவா பைக் அறிமுகமாகிறது!

ஏற்கனவே ஜாவா பைக்கை முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அல்லது வரும் 22ந் தேதி நள்ளிரவுக்குள் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே இந்த பைக்கை வாங்க தகுதியுடைய வாடிக்கையாளராக கருதப்படும் என்று ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. தனியாக இந்த பைக்கை முன்பதிவு செய்து வாங்க முடியாது.

MOST READ: கூச்சமே இல்லாமல் காசு பிடுங்கிய தமிழக போலீஸ்காரர்... ரகசியமாக வீடியோ எடுத்து சிக்க வைத்த இளைஞர்கள்

90ம் ஆண்டு கொண்டாட்டம்... விரைவில் ஸ்பெஷல் ஜாவா பைக் அறிமுகமாகிறது!

ஜாவா பைக்குகளுக்கு ரூ.5,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது. ஜாவா நிறுவனத்தின் முதல் பைக் மாடலாக வந்த 500 OHV பைக்கை பிரதிபலிக்கும் விதத்தில், இந்த லிமிடேட் எடிசன் மாடல் அரக்கு மற்றும் வெள்ளை வண்ணத்தில் இருக்கும். பழுப்பு வண்ண இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். பெட்ரோல் டேங்க்கின் மேற்புறத்தில் ஆனிவர்சரி எடிசன் பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கும்.

MOST READ: நான் அந்த பக்கம் போனதே இல்லீங்க... போலீஸ் விதித்த அபராதத்தால் அதிர்ச்சியடைந்த கார் உரிமையாளர்

90ம் ஆண்டு கொண்டாட்டம்... விரைவில் ஸ்பெஷல் ஜாவா பைக் அறிமுகமாகிறது!

இந்த பைக்கிலும் 297 சிசி டிஓஎச்சி எஞ்சின் இடம்பெறுகிறது. இந்த எஞ்சின் 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. விலை விபரம் அறிவிக்கப்படவில்லை. சாதாரண ஜாவா க்ளாசிக் 300 பைக்கின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடல் ரூ.1.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் மாடல் ரூ.1.73 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa has announced a new limited edition of Jawa 300 bike called the Jawa Anniversary edition in India.
Story first published: Tuesday, October 8, 2019, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X