ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் இதுதான்!

ஒருவழியாக ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் இதுதான்!

ராயல் என்ஃபீல்டு, ஜாவா போன்ற மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களிடம் மைலேஜ் பற்றி கேட்கக்கூடாது என்ற எழுதப்படாத விதி உண்டு. மைலேஜை எல்லாம் பார்த்தால் இந்த வண்டியே வாங்கக்கூடாது என்பதுதான் அவர்களது கருத்தாக இருக்கும்.

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் இதுதான்!

இந்த நிலையில், புதிய தலைமுறை ஜாவா மோட்டார்சைக்கிள்கள் கடந்த ஆண்டு நவம்பர் 15ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அனைத்து தொழில்நுட்ப விபரங்களும் வெளியிடப்பட்ட நிலையில், மைலேஜ் விபரம் குறித்த தகவல் இல்லை.

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் இதுதான்!

இந்தநிலையில், பெட்ரோல் விலை எக்கச்சக்கமாக போய்விட்ட இந்த காலத்தில் மைலேஜ் என்பது வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் முக்கிய விஷயமாகி இருக்கிறது. இதற்கு ஜாவா மோட்டார்சைக்கிள்களும் இப்போது விதிவிலக்கல்ல.

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் இதுதான்!

இதுதொடர்பாக, சமூக வலைதளங்கள் மற்றும் டீலர்கள் வாயிலாக வாடிக்கையாளர்களும், ஜாவா பைக் பிரியர்களுக்கும் தொடர்ந்து எழுப்பிய கேள்விக்கு ஒருவழியாக ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

ஆம். ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களின் மைலேஜ் விபரங்களை ட்விட்டர் மூலமாக வெளியிட்டுள்ளது ஜாவா நிறுவனம். ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களும் லிட்டருக்கு 37.5 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்றளித்துள்ளதாக ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் இதுதான்!

இந்த நிலையில், இந்த இரண்டு ஜாவா மோட்டார்சைக்கிள்களும் நடைமுறையில் 30 முதல் 33 கிமீ மைலேஜ் வரை செல்லும் என்று நம்பலாம். ஜாவா மோட்டார்சைக்கிள்களின் மைலேஜ் விபரம் வெளியிடப்பட்டுள்ளதற்கு பலரும் மகிழ்ச்சி தெரிவித்திருப்பதுடன், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் இதுதான்!

ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களிலும் 293சிசி லிக்யூடு கூல்டு டிஓஎச்சி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் இதுதான்!

இந்த எஞ்சின் நடுத்தர நிலைகளில் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், பழைய ஜாவா பைக்குகளை போன்றே தனித்துவமான புகைப்போக்கி சப்தத்தை பெற்றிருக்கிறது.

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் இதுதான்!

கடந்த 30ந் தேதி ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கின. ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மோட்டார்சைக்கிள்கள் டெலிவிரி கொடுக்கப்பட்ட நிலையில், முன்பதிவு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விரைந்து டெலிவிரி கொடுக்கும் முயற்சிகளில் ஜாவா ஈடுபட்டுள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் இதுதான்!

ஜாவா மோட்டார்சைக்கிள் ரூ.1.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ரூ.1.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Jawa Motorcycle company has revealed Jawa 300 and Jawa 42 motorcycles mileage details officially
Story first published: Friday, April 5, 2019, 9:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X