ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

போட்டி நிறுவனமான ராயல் என்பீல்டு கையிலெடுத்த யுக்தியை ஜாவா நிறுவனமும் கையாண்டுள்ளது. அந்தவகையில், அதன் பைக்குகுளுக்கான அக்ஸசெரீஸ், ஹெல்மெட் மற்றும் ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்டவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

போட்டி நிறுவனமான ராயல் என்பீல்டு கையிலெடுத்த யுக்தியை, ஜாவா நிறுவனமும் கையாண்டுள்ளது. அண்மையில், ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் ட்வின் மாடல் மோட்டார்சைக்கிள்களான கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரு மாடல்களுக்கான அக்ஸசெரீஸ்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து, கிளாசிக் மாடல்களான 350 மற்றும் 500 மோட்டார்சைக்கிள்களுக்கான அக்ஸசெரீஸ்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

இந்த புதிய அக்ஸசெரீஸ்களின் அறிமுகத்தின்மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம், கணிசமான வருமானத்தைப் ஈட்டியதாக கூறப்படுகின்றது. ஆகையால், அதே யுக்தியைக் கையாளும் விதமாக ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம், அதன் பைக்குகளுக்கான அக்ஸசெரீஸ்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில், ரைடருக்கான ஜாக்கெட், ஹெல்மெட், மற்றும் பைக்கிற்கான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் அக்ஸசெரீஸ்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர், அதாவது, 1970ம் ஆண்டிற்கு பிறகு இந்திய இருசக்கர வாகன உலகில் புரட்சி செய்யும் விதமாக, ஜாவா நிறுவனம் அதன் மூன்று மாடல் மோட்டார்சைக்கிள்களை கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டார்சைக்கிள்கள் பாரம்பரியமிக்க தோற்றத்திலும், நியாயமான விலையிலும் களமிறக்கப்பட்டதால் இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

ஆனால், புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் பலருக்கு பைக் இதுவரை முழுமையாக டெலிவரி செய்யப்படவில்லை. இதன்காரணமாக ஜாவா நிறுவனம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. அந்தவகையில், பலர் அவர்களது விமர்சனங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டடு வருகின்றனர். சிலர், தங்களது புக்கிங்கை ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளனர். புக்கிங் செய்து ஆறு மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில், இதுவரை எந்தவொரு அப்டேட்டும் கிடைக்காத காரணத்தாலே பலர் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

இந்த நிலையில், ஜாவா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை உற்சாகம் படுத்தும் வகையில், முன்னதாக அதன் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதாக அறிவித்திருந்தது. அந்தவகையில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியில் அறிமுகம் செய்த ஜாவா அனைத்து மாடல்களிலும், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டது. மேலும், அந்த பைக்குகளை இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகம் செய்ய இருப்பதாகவம் தெரிவித்திருந்தது.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

இந்நிலையில், தரமான நடவடிக்கையாக ஜாவாவின் பைக்குகளுக்கு அக்ஸசெரீஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்து அக்ஸசெரீஸ்களும் இருவிதமான பயன்பாட்டைக் கொண்டதாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக தற்போது விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள அக்ஸசெரீஸ்கள், பைக்கின் லுக்கை எடுப்பாக எடுத்துக்காட்டவும், சிறந்த பயன்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

இதைத்தொடர்ந்து, ஜாவா நிறுவனம் அதன் பாகங்களுக்கு அட்ராக்டிவான பெயர்களை வைத்துள்ளது. அந்தவகையில், மேட் ஃபினிஸிங்கிலான கருப்பு நிற கிளாசிக் கிராப் ரெயிலுக்கு குவார்டியன் ஹாலோ என பெயரிடப்பட்டுள்ளது. இது, ரைடருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும். இதன் விலை ரூ. 749ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, க்ராஷ் குவார்டு இருக்கின்றது. இது, குரோம் மற்றும் மேட் ஃபினிஸ் கருப்பு நிறத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

அதில், குரோம் பினிஸ்ட் யூனிட் ரூ. 1,599 விலையிலும், மேட் ஃபினிஸ்ட் யூனிட் ரூ. 1,499 என்ற விலையிலும் விற்பனைச் செய்ய இருக்கின்றது. அதேபோன்று, மேட் சீட் ஸ்பாய்லர் ரூ. 999 என்ற விலையிலும், விதவிதமான கேரேஜ்கள் ரூ. 399 முதல் ரூ. 999 என்ற விலையிலும் விற்பனைச் செய்யப்பட உள்ளன. இவை, வாகன ஓட்டியின் நீண்ட தூர பயணத்திற்கு உதவியாக இருக்கும். இதைத்தொடர்ந்து, டிரென்டியான ஸ்டைலில் பார் என்ட் மிர்ரர்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு ரூ. 1,499 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

இதைத்தொடர்ந்து, வாகன ஓட்டிகளுக்காக ரைடிங் க்ளோவ்ஸ், டி-சர்ட், ஹெல்மெட் மற்றும் ரைடிங் ஜாக்கெட்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை விலையைக் கொண்டதாக இருக்கின்றன. அந்தவகையில், ஜாவா பிராண்டட் டி-சர்ட்டின் விலை ரூ. 899 ஆக உள்ளது. அதேபோன்று, ஓபன் பேஸ், கொரோனா மற்றும் ஹாலோ ஹெல்மெட்டின் விலை ரூ. 2,349ஆக இருக்கின்றது. ரைடிங் க்ளோவ்ஸ்கள் ரூ. 2,499 என்ற விலையைப் பெற்றிருக்கின்றது.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

ஜாவா அறிமுகம் செய்ததிலேயே அதிகபட்ச விலையாக அதன் ரைடிங் ஜாக்கெட்டின் விலை இருக்கின்றது. அந்தவகையில், அதன் விலை ரூ. 7,499ஆக இருக்கின்றது. இத்தகைய உயர்வான விலைக்கு அந்த ரைடிங் ஜாக்கெட்டில் உள்ள பாதுகாப்பு அம்சமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த ஜாக்கெட் விபத்தின்போது, ரைடரின் தோல்பட்டை, முதுகு பகுதி உள்ளிட்டவற்றிற்கு அதிகளவில் பாதுகாப்பை வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

ஜாவா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிட்டுள்ள இந்த அக்ஸசெரீஸ்கள் தற்போது குறைவாகவே காணப்பட்டாலும், வரும் காலங்களில் அவை அதிகரிக்கக் கூடம் என ஜாவா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு!

ஜாவா பைக்குகள் முழுமையாக டெலிவரி செய்யப்படாத நிலையில், அந்த நிறுவனம் அதற்கான அக்ஸசெரீஸ்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதேசமயம், இந்த மாதத்தின் இறுதியில், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு பைக் டெலிவெரி கொடுக்கப்படும் என அந்த அறிவித்துள்ளது. அதேசமயம், இம்முறையாவது பைக் டெலிவிரி செய்யப்படுமா..? என்ற கேள்வியிலும், ஏக்கத்திலும் அதன் வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles
English summary
Jawa Bike Official Accessories. Read in Tamil.
Story first published: Wednesday, June 26, 2019, 19:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X