ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

9 ஆயிரம் ரூபாய் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை வாடிக்கையாளர் ஒருவர் கதற விட்டுள்ளார். டீலர்ஷிப்பில் எப்படி ஏமாற்றுகின்றனர்? என்பதை தெரிந்து கொள்வது உங்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கும்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்திய மார்க்கெட்டிற்கு மீண்டும் வந்தன. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் மனதிற்கு நெருக்கமான மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மீண்டும் களமிறங்கியதால், ஏராளமான வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்தனர்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும், தற்போது ஜாவா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஜாவா பைக்குகளை உரிய நேரத்தில் டெலிவரி செய்யாததே இதற்கு காரணம். இதனால் ஆத்திரமடைந்த பலர் ஜாவா மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவை ரத்து செய்து விட்டு, மீண்டும் ராயல் என்பீல்டு ஷோரூம்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

இப்படிப்பட்ட சூழலில் ஜாவா தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி கொண்டுள்ளது. ஜாவா நிறுவன டீலர்ஷிப் ஒன்று, வாடிக்கையாளரின் தலையில் நன்றாக மிளகாய் அரைக்க முயன்றுள்ளது. வாடிக்கையாளரிடம் இருந்து கிட்டத்தட்ட 9 ஆயிரம் ரூபாயை கூடுதலாக சுருட்ட அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அந்த வாடிக்கையாளர் அடுத்து என்ன செய்தார் தெரியுமா? அதுதான் ஹைலைட்டே.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

பல்வேறு மாநில நீதிமன்ற தீர்ப்புகளில் ''ஹேண்டிலிங் சார்ஜ்கள்'' சட்ட விரோதம் என கூறப்பட்டுள்ளது. இது தவிர சுப்ரீம் கோர்ட்டும் கூட இதுபோன்ற கட்டணங்களை வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கூட கார் மற்றும் பைக் டீலர்கள் தொடர்ந்து இத்தகைய கட்டணங்களை வசூலித்து கொண்டேதான் உள்ளனர்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

இதையேதான் சம்பந்தப்பட்ட ஜாவா நிறுவன டீலர்ஷிப்பும் செய்ய முயன்றுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் ஜாவா கிளாசிக் ட்யூயல் ஏபிஎஸ் வேரியண்ட்டை வாங்குவதற்காக, அதன் டீலர்ஷிப் ஒன்றில் கொட்டோஷன் கேட்டுள்ளார். இதன் பேரில் அவர்கள் கொடுத்த கொட்டேஷனில் விலை எவ்வளவு குறிப்பிடப்பட்டிருந்தது தெரியுமா? 2,16,142 ரூபாய்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

இதில், எக்ஸ் ஷோரூம் விலை 1,76,242 ரூபாய், லைட் பார் மற்றும் மற்றவை ஆகியவற்றுக்கு 20 ஆயிரம் ரூபாய், இன்சூரன்ஸ் 14 ஆயிரம் ரூபாய், பிடிஐ (PDI - Pre Delivery Inspection) 900 ரூபாய், சென்டர் ஸ்டாண்ட் 800 ரூபாய், ஹேண்டிலிங் மற்றும் ஃபிட்டிங் ஆகியவற்றுக்கு முறையே ரூ.1,700 மற்றும் ரூ.500 மற்றும் டீடெய்லிங்கிற்கு 2,000 ரூபாய் அடக்கம்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

ஆக மொத்தம் 2,16,142 ரூபாய்க்கு டீலர்ஷிப்பில் கொட்டேஷன் கொடுக்கப்பட்டது. அத்துடன் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் டெலிவரி கொடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் டீலர்ஷிப்பில் தரப்பட்ட கொட்டேஷனை பார்த்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்து விட்டார். இது அநியாயமான விலை என அவர் நினைத்தார்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

எனவே நியாயமான விலை அல்ல என அவர் நினைத்தை எல்லாம் சிகப்பு குறியிட்டார். அந்த படத்தை நீங்கள் மேலே காணலாம். ஹைலைட் செய்யப்பட்டவை எல்லாம் விலையை உயர்த்துவதற்காக டீலர்ஷிப் அளவில் செய்யப்படும் தந்திரங்கள் என அவர் கருதினார். எனவே டீலர்ஷிப்பில் இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

இதில், ‘Others' என குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டணங்கள் எதற்காக? என்ற கேள்விக்கு, அவை ஆர்டிஓ ஏஜெண்ட் கட்டணம் என்ற பதில் அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் டீலர்ஷிப் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்களால் அவர் மனம் சமாதானம் அடையவில்லை. இந்த தேவையற்ற கட்டணங்கள் குறித்து அவர் ஜாவாவிற்கு எழுதினார்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

அத்துடன் அந்நிறுவனத்தின் சிஇஓவிற்கும் டிவிட்டர் மூலம் அவர் இதனை தெரியப்படுத்தினார். இதனால் தென் இந்தியா ஜாவா ஆர்ஜிஎம்-மிடம் இருந்து அவருக்கு உடனடியாக செல்போன் அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் டீலர்ஷிப்பின் எம்டி-யும் கான்ஃபரன்ஸ் காலில் இருந்தார். இதன்பின் கூடுதல் ஹேண்டிலிங் மற்றும் ‘Others' என குறிப்பிடப்பட்டிருந்த கட்டணங்கள் நீக்கப்பட்டன.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

இதன் மூலம் 2,07,336 ரூபாய் என கொட்டேஷன் குறைக்கப்பட்டது. அதாவது ஆன் ரோடு விலையில் சுமார் 9 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைந்திருப்பார் என நினைக்கலாம். இந்த வாடிக்கையாளரை போலவே நீங்கள் டீலர்ஷிப்களில் உஷாராக இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

Source: Rushlane

Most Read Articles
English summary
Jawa Dealer Adds Handling Charges RS.9000: Customer Complains To CEO. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X