இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

ஜாவாவின் சூழ்நிலை அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஓர் சம்பவத்தை செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

கடந்த 1970ம் ஆண்டுகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜாவா நிறுவனம், மீண்டும் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, அதன் மூன்று கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள்களை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் களமிறக்கியது. ஜாவா நிறுவனம் இம்முறை மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகிறது.

இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

அந்த வகையில், ஜாவா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி ஜாவா, ஜாவா42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல் மோட்டார்சைக்கிள்களை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்தது. இதில், முதல்கட்டமாக ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய மாடல்களுக்கான விற்பனை மட்டும் ஆன்லைன் மற்றும் ஆப்ஃலைனில் துவங்கின.

இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

இந்த புதிய தலைமுறை ஜாவா மோட்டார்சைக்கிளின் அழகில் மெய்மறந்த இந்திய இளைஞர்கள் அந்த நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை அளித்தனர். அவ்வாறு, ஆன்லைனில் போட்டிக்கொண்டு புக்கிங்குகளை குவித்தனர். வாடிக்கையாளர்களின் இந்த செய்கையால், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான புக்கிங்கள் இரண்டே மாதங்களில் முடிவடைந்ததாக ஜாவா அறிவித்தது.

இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

இதையடுத்து, ஜாவா நிறுவனம் குறிப்பிட்ட நாளைக் கடந்து சற்று கால தாமாக அதன் வாடிக்கையாளர்களுக்கு, மோட்டார்சைக்கிள்களை டெலிவரியைச் செய்ய தொடங்கியது. இவ்வாறு அனைத்தும் சிறப்பாக சென்றுக்கொண்டிருக்க இவையனைத்தையும் தலைகீழாக மாற்றும் விதத்தில் ஜாவாவின் நிலைமை மாறியுள்ளது.

இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

ஆம், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு, மோட்டார்சைக்கிள் குறிப்பிட்ட நாளுக்குள் டெலிவரி செய்ய முடியாமல் ஜாவா நிறுவனம் தவித்து வருகிறது. மேலும், கூடுதலாக 5 மாதங்கள் கால அவகாசமும் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே நீண்ட நாட்களாக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஜாவாவின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளனர். அத்துடன், செலுத்திய முன் பணத்தை திரும்ப தரும்படியும் கேட்டு வருகின்றனர்.

இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

இவ்வாறு ஜாவா நிறுவனம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் இந்த சூழ்நிலையில், இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஓர் செயலை ஜாவா நிறுவனம் செய்துள்ளது. அந்தவகையில், ஜாவா நிறுவனம் விற்பனைச் செய்த முதல் 13 மோட்டார்சைக்கிள்களின் தொகையையும் இந்திய ராணுவப் படையின் கொடி தினத்திற்கா நிதியாக வழங்கியுள்ளது.

இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

ஜாவா நிறுவனம், சிக்னேட்சர் எடிசன் என்ற பெயரில் 13 மோட்டார் சைக்கிள்களை சிறப்பான சேஸிஸ் எண்களுடன் விற்பனைச் செய்தது. அவை அனைத்துமே கணிசமான விலையுயர்வைப் பெற்று விற்பனையாகின.

இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

ஆகையால், இந்த 13 மோட்டார்சைக்கிள்களையும் விற்பனைச் செய்ததில் ஜாவா நிறுவனத்திற்கு ரூ. 1.43 கேடி வருமானம் கிடைத்தது. இத்துடன் மேலும் கூடுதலாக பணத்தைச் சேர்த்த ஜாவா நிறுவனம், மொத்தமாக ரூ. 1.49 கோடியாக இந்திய ராணுவத்திற்கு நிதி வழங்கியுள்ளது.

இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

இந்த தொகையினை கேந்திரியா சைனிக் அமைப்பின் செயலாளர் எஸ்.எம். ரிஜேந்திர குமாரிடம் ஜாவா நிறுவனம் வழங்கியது. இந்நிகழ்வின்போது, கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் இருந்தனர். இவர்களுடன் பாலிவுட் திரைப்பட நடிகையான குல் பனாக் இடம் பெற்றிருந்தார். இவரும் ஜாவா நிறுவனத்தின் சிக்னேட்சர் எடிசனில் ஓர் மோட்டார்சைக்கிளை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து குல் பனாக் அவரது டுவிட்டர் டுவிட் ஒன்றை செய்துள்ளார். அதில், "ஜாவா நிறுவனத்துடன் இணைந்து கொடி தினத்திற்கான நிதியை வழங்குவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த 13 மோட்டார்சைக்கிளில் நானும் ஒன்றை வாங்கியிருக்கிறேன். ஆகையால் எனது பங்கும் இதில் இருப்பதை நான் கௌரவமாக எடுத்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

ஜாவா நிறுவனத்தின் இந்த கொடையளிப்பானது நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஜாவா மீது ஏற்பட்டுள்ள களங்கம், இந்த நிதியுதவி செயலினால் சற்று களையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Jawa Donates Rs. 1.49 Cr To Armed Forces Flag Day Fund. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X