கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

ஜாவா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகளை தயாரித்திருப்பதாகவும், அதனை இம்மாதமே டெலிவரி வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

1970ம் ஆண்டுகளில் செய்த புரட்சியை, மீண்டும் ஏற்படுத்தும் விதமாக சில வருட இடைவெளிக்கு பின்னர், ஜாவா நிறுவனம் மீண்டும் இந்தியச் சந்தை பக்கம் சமீபத்தில் திரும்பியது. அதற்கான முதல் நடவடிக்கையாக, அதன் மூன்று மாடல் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்காக கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமகும் செய்யப்பட்டன.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

ஜாவா நிறுவனம், மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும், கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அதன் தயாரிப்புகளை களமிறக்கி வருகின்றது. அவ்வாறு, ஜாவா, ஜாவா42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல் பைக்குகள் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஜாவா மற்றும் ஜாவா42 ஆகிய இரண்டு பைக்குகள் மட்டுமே முதலில் விற்பனைக்கு களமிறங்கின.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

இந்த பைக்குகள் கிளாசிக் ரகத்தில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பைக்குகளாக இரந்ததால், இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவியது. ஆனால், உற்பத்தியில் ஏற்பட்ட சிறு பிரச்னை காரணமாக, புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு பைக்குகளை டெலிவரி சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து டெலிவரி தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

ஜாவா நிறுவனம் இதுவரை எத்தனை பைக்குகளை புக்கிங் பெற்றுள்ளது. எத்தனை பைக்குகளை டெலிவரி செய்துள்ளது என்ற எந்த தகவலையும் இதுவரை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், 2018 நவம்பர் முதல் 2019 மார்ச் வரை 255 யூனிட் பைக்குகள் தயாரிக்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

இந்நிலையில், ஜாவா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலர், ஜாவா பைக்குகளை ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டதாக விற்பனைச் செய்யுமாறு கோரிக்கை வைத்திருந்தனர். முன்னதாக களமிறக்கப்பட்ட இந்த பைக்குகள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட டிஸ்க் பிரேக்குகள் இருந்தன. இதன்காரணமாகவே, வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

ஆகையால், வாடிக்கையாளர்களின் இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஜாவா நிறுவனம், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த வாக்குறுதியை உறுதி செய்யும் விதமாக, ட்யூவல் சேனல் கொண்ட ஏபிஎஸ் மாடல் ஜாவா பைக்குகளை இம்மாதமே டெலிவரி செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

இதில், ஜாவா பைக் மெரூம், க்ரே மற்றும் கருப்பு வண்ணத்திலும், ஜாவா 42 மாடல் பைக் கோமட் சிவப்பு, நெபுளா நீளம், ஸ்டார் லைட் நீளம், லூமஸ் லைம், கேலடிக் க்ரீன் மற்றும் ஹேல்லிஸ் டீல் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கின்றன.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு பைக்கும் டிசைனில் மாறுபட்டு காணப்பட்டாலும், எஞ்ஜின் திறனில் இரண்டும் ஒரே மாதிரியாக தான் இருக்கின்றன. அந்தவகையில், இரு பைக்குகளிலும் 293சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், லிக்யூடு கூல்ட், டிஓஎச்சி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைப் பெற்றுள்ளது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழியாக இயங்குகின்றது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

அதேசமயம், இந்த இரு பைக்கும் லிட்டருக்கு 37.5 கிமீ மைலேஜ் தரக்கூடியது என அராய் அமைப்பு சான்று வழங்கியுள்ளது. இந்த் பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் ட்வின் ஷாக் ஹைட்ராலிக் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ட்யூவல் சேனல் ஏபிஎஸ் மாடல் ஜாவா பைக் ரூ. 1.72 லட்சத்திலும், ஜாவா 42 பைக் ரூ. 1.64 லட்சத்திலும் விற்பனைச் செய்யப்ட உள்ளன. இந்த மாடல்களின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடல் ரூ. 1.64 லட்சம் மற்றும் ரூ. 1.55 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

இந்த இரு பைக்குகளைத் தொடர்ந்து, ஜாவா நிறுவனம் ஜாவா பெராக் மாடலை இந்த வருடத்தின் இறுதிக்குள் விற்பனை களமிறக்க இருக்கின்றது. பாபர் ஸ்டைலில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த சிங்கிள் இருக்கை கொண்ட மாடலில் களமிறங்க இருக்கின்றது. இந்த பைக் கருப்பு வண்ணத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. அதேபோன்று, ஸ்போக் வீல், லோவ் செட் ஹேண்டில் பார் மற்றும் ஹேண்டில் பாரின் முனையில் கண்ணாடி உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை இது பெறவிருக்கின்றது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

பெராக் பைக்கில் 334சிசி கொண்ட லிக்யூடு கூல்டு DOHC எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 30 பிஎச்பி பவரையும் 31என்எம் டார்க்யூவையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் பாதுகாப்பு வசதியாக இரு வீல்களிலும் ஏபிஎஸ் வசதியுடன் கூடிய டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், சிறப்பான பயண அனுபவத்திற்காக பைரெல்லி டயர்கள் இரு வீலுக்கும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் விலை ரூ. 1.89 லட்சத்தில் இருந்து துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Jawa Dual ABS Deliveries To Start This Month. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X