போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு: வேதனையில் உரிமையாளர்...!

நீண்ட இழுத்தடிப்பிற்கு பின்னர் பெற்ற ஜாவா 42 பைக்கை, ஆர்டிஓ அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அவர்கள் கூறிய காரணம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

1970ம் ஆண்டிற்குபின் ஜாவா நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் களமிறங்கியது. அப்போது, அதன் இந்திய ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பாரம்பரியமிக்க கிளாசிக், ரெட்ரோ மற்றும் பாபர் ஸ்டைலிலான மூன்று புதிய மாடல் பைக்குகளை அறிமுகம் செய்தது.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

அதில், முன்னதாக ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளே விற்பனைக்கு களமிறக்கப்பட்டன. பாபர் ஸ்டைலிலான ஜாவா பெராக் மாடல் பைக், நடப்பாண்டின் இறுதியில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஜாவா நிறுவனம், இந்தியாவில் மஹிந்திரா குழுமத்தின் அங்கமாகச் செயல்படும் கிளாசிக் லெஜண்டஸ் நிறுவனத்துடன் இணைந்து, அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

இந்நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, புக்கிங்குகளும் அதிகளவில் கிடைக்கப்பெற்று வந்தன. ஆனால், உற்பத்தி குறைவின் காரணமாக, ஜாவா நிறுவனத்தால், குறிப்பிட்ட நேரத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு பைக்கை டெலிவரி செய்ய முடியாமல் சிக்கலை சந்தித்தது.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

மேலும், நீண்ட இழுபறி நீடித்ததால், செலுத்திய முன் பணத்தை பலர் திரும்ப கேட்க ஆரம்பித்தனர். மேலும் சிலர், ஜாவா நிறுவனத்திற்கு எதிராக போர்க் கொடி தூக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், ஜாவா 42 மாடல் பைக்கை நீண்ட இழுபறிக்கு பின் பெற்ற இளைஞர் ஒருவர், அதனை ஆர்டிஓ-வில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால், பைக்கை பதிவு செய்ய முடியாது என ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மேலும், அதற்கு காரணமாக பைக்கின் பச்சை நிறத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜாவா நிறுவனத்தின் இந்த பச்சை நிறம், இந்திய ராணுவ சீருடையைக் குறிப்பிடுவதால், அதனை பதிவு செய்ய அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஜாவா பைக்கின் உரிமையாளர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

இந்த பைக்கை நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னரே அவர் பெற்றுள்ளார். இந்த சூழ்நிலையில், ஆர்டிஓவின் மறுப்பு அவரை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது.

ஜாவா நிறுவனம், ஜாவா 42 மாடல் பைக்கை ஆறு விதமான வண்ண தேர்வில் விற்பனைச் செய்து வருகின்றது. அதில், கேலக்டிக் க்ரீன் ஷேட் நிறமும் ஒன்று. இந்த நிறத்திலான ஜாவா பைக் அறிமுகமான போது, பலர் இந்த நிறம் சட்டபூர்வமானதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பி வந்தனர்.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

ஏனென்றால், ராணுவ பச்சை (ஆலிவ் பச்சை) நிறத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதை இந்திய அரசு தடைச் செய்துள்ளது. மேலும், அந்த நிறம் ராணுவ வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அது கூறியுள்ளது.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

இதன்காரணமாகவே, கேரளாவைச் சேர்ந்த இளைஞரின் பச்சை நிறத்திலான ஜாவா 42 பைக், ஆர்டிஓ பதிவு செய்வதில் சிக்கலைச் சந்தித்துள்ளது. அந்த பைக், மோட்டார் வாகன சட்ட விதியை மீறியிருப்பதால் அதற்கு பதிவு சான்றிதழ் வழங்க, எர்ணாகுளம் ஆர்டிஓ மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஜாவா 42 பச்சை நிறத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பதிவு செய்ய முடியாது என்றும் ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

இதுகுறித்து எர்ணாகுளம் ஆர்டிஓ அதிகாரி, ஜாவா நிறுவனத்தின் கலமஸேரி பகுதி டீலரான கிளாசிக் மோட்டார்ஸுக்கு கடிதம் ஒன்றை கடந்த 16ம் தேதி எழதியுள்ளார்.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

அதில், "ஆர்டிஓ பதிவிக்கிற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஜாவா 42 பைக்கை பரிசோதித்தபோது, பைக் ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது, தற்போது நடைமுறையில் இருக்கும் மோட்டார் வாகன விதிகளுக்கு எதிரானது. ஆகையால், இந்த கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தனிப்பட்ட விசாரணைக்காக வரவேண்டும்" என அதில் கூறியிருந்தார்.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

இந்த கடிதத்தை ஜாவா டீலர், அதன் உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பைக்கின் உரிமையாளர், அதுகுறித்து கிளாசிக் லெஜண்ட்ஸின் சிஇஓ-ஆன ஆசிஷ் ஜோஷியை தொடர்புகொண்டுள்ளார்.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

அதற்கு, ஆசிஷ் ஜோஷி பதில் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், "நாடு முழுவதிலும் உள்ள ஆர்டிஓ-க்கள் மூலம், இந்த பச்சை நிறத்திலான ஜாவா பைக் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆகையால், விரைவில் நாங்கள் உங்களை சந்திக்க வருவோம்" என கூறியுள்ளார்.

ஆகையால், இந்த ஜாவா 42 பைக் பதிவு செய்யப்படுமா... அல்லது இழுத்தடிக்கப் படுமா... என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களும் டிசைனில் மாறுபட்டு காணப்பட்டாலும், தொழில்நுட்ப அம்சங்களிஸ் ஒரே மாதிரியானதாக காட்சியிளிக்கின்றது. அதேபோன்று, அந்த பைக்குகளின் எஞ்ஜின் திறனும் ஒரே மாதிரியானதாக இடம்பெற்றிருக்கின்றது.

போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

அந்தவகையில், 293 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், லிக்யூடு கூல்ட், டிஓஎச்சி எஞ்ஜின் அந்த இரு மாடல் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Source: Rushlane

Most Read Articles
English summary
Jawa Green Colour Registration Denied By Kerala RTO. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X