ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தும் சிக்சர்... விரைவில் சதம் விளாசுகிறது ஜாவா புயல்...

ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தையும் சிக்சருக்கு அனுப்பி வரும் ஜாவா, விரைவில் சதம் விளாசிவுள்ளது.

ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தும் சிக்சர்... விரைவில் சதம் விளாசுகிறது ஜாவா புயல்...

வாடிக்கையாளர்கள் அனைவரும் பேராவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இன்றுடன் (ஏப்ரல் 15) சரியாக 5 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. ஜாவா மோட்டார் சைக்கிள்கள் கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி இந்தியாவில் ரீ லான்ச் செய்யப்பட்டன.

ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தும் சிக்சர்... விரைவில் சதம் விளாசுகிறது ஜாவா புயல்...

அறிமுக விழாவின்போது, முதற்கட்டமாக அடுத்த சில மாதங்களில், இந்தியா முழுவதும் 100 டீலர்ஷிப்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஜாவா மோட்டார் சைக்கிள்களை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வந்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்தது. அந்த இலக்கை நடப்பு வாரத்தில் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் எட்டவுள்ளது.

ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தும் சிக்சர்... விரைவில் சதம் விளாசுகிறது ஜாவா புயல்...

ஆம், ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கான இந்தியாவின் 100வது டீலர்ஷிப் இந்த வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக டிவிட்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி, கர்நாடக மாநிலம் ஹூப்ளி, ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர், அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா உள்ளிட்ட நகரங்களில், புத்தம் புதிய ஜாவா டீலர்ஷிப்கள் நடப்பு வாரத்தில் திறக்கப்படவுள்ளன.

ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தும் சிக்சர்... விரைவில் சதம் விளாசுகிறது ஜாவா புயல்...

இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் ஜாவா டீலர்ஷிப்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 100ஐ கடக்கவுள்ளது. வெறும் 4 மாத காலத்தில் 100 டீலர்ஷிப்கள் என்ற இலக்கு எட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கான முதல் ஷோரூம், கடந்த ஆண்டு டிசம்பர் மாத மத்தியில், மஹாரஷ்டிர மாநிலம் புனேவில் திறக்கப்பட்டது.

ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தும் சிக்சர்... விரைவில் சதம் விளாசுகிறது ஜாவா புயல்...

தற்போது ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விற்பனையில் உள்ளன. இவ்விரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 293 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், டிஓஎச்சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27 எச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தும் சிக்சர்... விரைவில் சதம் விளாசுகிறது ஜாவா புயல்...

ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய மோட்டார் சைக்கிள்களின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்களின் விலை முறையே ரூ.1.64 லட்சம் மற்றும் ரூ.1.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தும் சிக்சர்... விரைவில் சதம் விளாசுகிறது ஜாவா புயல்...

அதே சமயம் ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 பைக்குகளின் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்களின் விலை முறையே ரூ.1.72 லட்சம் மற்றும் ரூ.1.63 லட்சம் ஆகும். இதில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பைக்குகள் ரியர் ட்ரம் பிரேக்கை பெற்றுள்ளனர். ஆனால் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பைக்குகளின் பின் பகுதியில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தும் சிக்சர்... விரைவில் சதம் விளாசுகிறது ஜாவா புயல்...

ஜாவா மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜாவா மோட்டார் சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ் விபரங்களும் கூட சமீபத்தில் வெளியிடப்பட்டன. இது குறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தும் சிக்சர்... விரைவில் சதம் விளாசுகிறது ஜாவா புயல்...

முன்னதாக ஜாவா மோட்டார் சைக்கிள்களின் வருகை எதிரொலியால் அதன் நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது. எனவே ஜாவா அளிக்கும் மிக போட்டியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ராயல் என்பீல்டு நிறுவனமும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ராயல் என்பீல்டு வீசும் ஒவ்வொரு பந்தும் சிக்சர்... விரைவில் சதம் விளாசுகிறது ஜாவா புயல்...

இதனிடையே ஜாவா மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி பணிகள் சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டெலிவரி பணிகள் இன்னும் சுறுசுறுப்பு அடையவில்லை. இதன் காரணமாக மோட்டார் சைக்கிள்களுக்கு முன்பதிவு செய்துள்ள ஜாவா ரசிகர்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர். ஜாவா டெலிவரி விபரங்கள் தொடர்பாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles
English summary
100th Jawa Motorcycle Dealership To Open This Week. Read in Tamil
Story first published: Monday, April 15, 2019, 17:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X