இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர்வ டெலிவரி தொடங்கப்படும் முன்பாக, ஜாவா பைக்குகள் ஏலம் விடப்படுகின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் பெருமிதப்படுவது உறுதி.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஜாவா (Jawa) பைக்குகள் இந்தியாவில் ரீ லான்ச் செய்யப்பட்டு 4 மாதங்களும் மேல் ஆகி விட்டன. கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி நடைபெற்ற மிக பிரம்மாண்டமான விழாவில், ஜாவா கிளாசிக் (Jawa Classic) மற்றும் ஜாவா 42 (Jawa 42) என்ற பெயர்களில், 2 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 293 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27.3 பிஎஸ் பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. இரண்டு பைக்குகளிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

எனினும் ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி (Delivery) இன்னும் தொடங்கப்படவில்லை. போட்டி போட்டு கொண்டு ஆர்வமாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் அனைவரும் டெலிவரிக்காக காத்து கிடக்கின்றனர். ஆனால் டெலிவரி தொடங்குவது எப்போது? என்பதில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

ஜாவா பைக்குகள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே, அதன் நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஜாவா டெலிவரி தொடங்கப்பட்டால், ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

ஆனால் இன்னமும் ஜாவா பைக்குகளின் டெலிவரி தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் டெலிவரி தொடங்கப்படாததால், புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர். பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

இந்த சூழலில் ஜாவா பைக்குகளின் டெலிவரி இன்று முதல் (மார்ச் 24) தொடங்கப்படும் என ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது. ஆனால் இன்றும் டெலிவரி தொடங்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த சூழலில் ஜாவா மோட்டார் சைக்கிளின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் ஹேண்டிலில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

இதன்படி அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் டெலிவரி தொடங்கப்படுவதற்கு முன்னதாக ஜாவா மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படவுள்ளன. இதற்கென தனியாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. இதில் திரட்டப்படும் நிதியானது, உயிர் தியாகம் செய்த இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது. அவர்களின் கல்வி செலவுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

ஆனால் ஏலம் நடைபெறும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனேகமாக அடுத்த வாரத்தில் ஏலம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் முடிந்த உடன், புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜாவா மோட்டார் சைக்கிள்களை டெலிவரி செய்யும் பணிகள் உடனடியாக தொடங்கப்படவுள்ளது.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

எனவே இம்மாத இறுதிக்குள் டெலிவரி பணிகள் தொடங்கி விடும் என கூறப்படுகிறது. ஆனால் அறிமுக விழாவின்போது காட்சிப்படுத்தப்பட்ட பைக்குகள்தான் ஏலம் விடப்படுமா? அல்லது பாதுகாப்பு படைகளின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் ஏலம் விடப்படுமா? என்பது தெரியவில்லை.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

ஜாவாவின் நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு பாதுகாப்பு படைகளை கௌரவிக்கும் வகையில் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளதை (பெகாசஸ் மற்றும் கிளாசிக் சிக்னல்ஸ்) கடந்த காலங்களில் நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. இதனிடையே முதல் வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 8,000 ஜாவா மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

டிமாண்ட்டிற்கு ஏற்ப இரண்டாம் ஆண்டு முதல் உற்பத்தியில் மாற்றம் செய்யப்படும். தற்போதைய நிலையில் போட்டியாளரான ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை ஒரு மாதத்திற்கு 35,000 யூனிட்கள் என்ற நிலையில் உள்ளது. ஜாவா ஆதிக்கம் செலுத்தினால், கிளாசிக் 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை குறைய கூடும்.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

முன்னதாக நவம்பர் 15ம் தேதியன்று நடைபெற்ற அறிமுக விழாவில், ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 தவிர ஜாவா பெராக் (Jawa Perak) என்ற மோட்டார் சைக்கிளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த பைக் தற்போது வரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. நடப்பாண்டின் இறுதியில்தான் ஜாவா பெராக் முறைப்படி லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்

இதனிடைய உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுடைய கல்வி செலவுக்கு நன்கொடை வழங்குவதற்காக ஜாவா பைக்குகளை ஏலம் விடும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிறுவனம்தான் பாரம்பரியம் மிக்க ஜாவா பைக்குகளை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Jawa Motorcycles Will Be Auctioned Before Deliveries To Support Armed Forces Martyr’s Childrens. Read in Tamil
Story first published: Sunday, March 24, 2019, 17:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X