மீண்டும் எழுந்து நடக்க முடியாத நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த மரண அடி இதுதான்...

ஜாவா கொடுத்த மரண அடி காரணமாக, மீண்டும் எழுந்து நடக்க முடியாத நிலைக்கு ராயல் என்பீல்டு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

ஜாவா கொடுத்த மரண அடி காரணமாக, மீண்டும் எழுந்து நடக்க முடியாத நிலைக்கு ராயல் என்பீல்டு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

1970, 80 கால கட்டங்களில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய ஜாவா மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி இடையில் நிறுத்தப்பட்டது. இருந்தாலும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி நடைபெற்ற விழாவில், ஜாவா, ஜாவா 42 மற்றும் பெராக் ஆகிய மூன்று மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

இதில், ஜாவா மோட்டார் சைக்கிளின் விலை 1.64 லட்ச ரூபாய். அதே சமயம் ஜாவா 42 மோட்டார் சைக்கிளுக்கு 1.55 லட்ச ரூபாயும், ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளுக்கு 1.89 லட்ச ரூபாயும் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடக்கத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனெனில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு முன்பதிவு முடிவடைந்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

பாரம்பரியம் மிக்க ஜாவா மோட்டார் சைக்கிள்களை சொந்தமாக்கி விட வேண்டும் என வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வருவதை இந்த தகவல்கள் உறுதி செய்கின்றன. இதனால் ஜாவா மோட்டார் சைக்கிள்களின் நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு அதிர்ச்சியடைந்துள்ளது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

மீண்டும் விற்பனைக்கு அறிமுகமானது முதலே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஜாவா வரிசையாக பல்வேறு அதிர்ச்சிகளை கொடுத்து கொண்டுள்ளது. ஆரம்பத்தில் ராயல் என்பீல்டு ஷோரூம்களுக்கு அருகிலேயே ஜாவா டீலர்ஷிப்களும் திறக்கப்படும் என தகவல்கள் வெளியானது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

இதன்படி புனே நகரில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஜாவா டீலர்ஷிப், ராயல் என்பீல்டு ஷோரூமிற்கு அருகேதான் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி வரிசையாக பல்வேறு அடிகளை ஜாவா சரமாரியாக கொடுத்து கொண்டே வருவதால், ராயல் என்பீல்டு கதிகலங்கி போயுள்ளது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

2018ம் ஆண்டின் ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் இருந்தது. ஆனால் இது எல்லாம் ஜாவா மீண்டும் களத்திற்கு வந்த நவம்பர் மாதம் வரைதான். அதன்பின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிபோனது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

இந்த சூழலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் டிசம்பர் மாத சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் (இந்தியாவில்) மொத்தம் 56,026 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

ஆனால் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் 65,367 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கைதான் தற்போது 56,026ஆக சரிந்துள்ளது. இது 14 சதவீத வீழ்ச்சியாகும்.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

என்றாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி வளர்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,601 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே ராயல் என்பீல்டு ஏற்றுமதி செய்திருந்தது. இது கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2,252ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

எனவே ஏற்றுமதியில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 41 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. என்றாலும் ஒட்டுமொத்த விற்பனை (உள்நாடு+ஏற்றுமதி) என்ற வகையில் பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக (உள்நாடு+ஏற்றுமதி) 58,278 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக 66,968 பைக்குளை விற்பனை செய்திருந்தது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையானது 13 சதவீதம் என்கிற அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. முன்னதாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 4 சதவீத சரிவை சந்தித்தது. அந்த மாதத்தில்தான் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

இதன்பின் வந்த டிசம்பர் மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை சரிவானது 4 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜாவா பைக்குகளுக்கான முன்பதிவு 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை முடிந்து விட்ட சூழலில், ராயல் என்பீல்டு அடுத்தடுத்து சரிவை சந்தித்து வருகிறது.

மீண்டும் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்த ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த அடி இதுதான்...

ஜாவாவிற்கு கடும் சவால் அளிக்கும் வகையிலான திட்டங்களை உடனடியாக செயல்படுத்தாவிட்டால், வருங்காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Jawa Motorcycles Effect? Royal Enfield Sales Drop By 13 Per Cent In December 2018. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X