சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

ஜாவா நிறுவனம் எந்த அளவுக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் தூண்டியதோ, அதற்கு நேர் மாறாக தற்போது கெட்டப் பெயரையும் சம்பாதித்து வருகிறது.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு பைக்குகளை மஹிந்திராவின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. பாபர் வகை மாடலான பெராக் விலை அறிவிக்கப்பட்டாலும், இன்னும் சந்தைக்கு கொண்டு வரப்படவில்லை.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட உடனேயே, ஜாவா பிராண்டு பைக்குகள் எதிர்பார்ப்பை மிஞ்சிய அளவில் வாடிக்கையாளர் மத்தியில் பேராதரவை பெற்றது. புக்கிங்குகள் குவிந்ததால், கிளாசிக் லெஜென்ட்ஸ் பெரும் உற்சாகத்துடன் அடுத்தக்கட்ட பணிகளில் ஈடுபட்டது.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

கடந்த மார்ச் முதல் ஜாவா பைக்குகளின் டெலிவிரி பணிகள் துவங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி டெலிவிரி பணிகள் துவங்கப்பட்டாலும், முழு வீச்சில் இல்லை. இதனால், முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பல மாதங்களாக காத்திருப்பிலும், கடுப்பிலும் உள்ளனர்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

உற்பத்தி திறன் குறைவாக இருப்பதன் காரணமாக, ஜாவா பைக்குகள் குறித்த நேரத்தில் டெலிவிரி கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஜாவா நிறுவனம் சிக்கலில் தவித்து வருகிறது. உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் அனுபம் தரேஜா தொடர்ந்து வாடிக்கையாளர்களை ட்விட்டர் மூலமாக சமாதானப்படுத்தி வருகிறார்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஜாவா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களிலும் சென்று கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் கொட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஏமாற்றத்தின் உச்சத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை ஜாவா நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

அதன்படி, முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எவ்வளவு நாட்கள் அல்லது மாதங்களில் தங்களது பைக்கை டெலிவிரி எடுக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக, "டெலிவிரி எஸ்டிமேட்டர்" என்ற வசதியை ஆன்லைன் மூலமாக ஏற்படுத்திக் கொடுத்தது.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

இந்த டெலிவிரி எஸ்டிமேட்டர் பக்கத்தில், வாடிக்கையாளர்கள் முன்பதிவு எண்ணையும், மொபைல் எண்ணையும் குறிப்பிட்டு லாக் இன் செய்தால், எவ்வளவு காலத்தில் பைக் டெலிவிரி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த டெலிவிரி எஸ்டிமேட்டர் விஷயமே, இப்போது ஜாவா நிறுவனத்திற்கு சொந்த காசில் சூன்யம் வைத்தது போல ஆகிவிட்டது.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டெலிவிரி எஸ்டிமேட்டர் தொழில்நுட்ப பிரச்னையால் வேலை செய்யவில்லை. இந்த நிலையில், தொழில்நுட்ப பிரச்னை சரிசெய்யப்பட்டு சற்றுமுன்னர் மீண்டும் செயல்பட துவங்கியது. ஆன்லைன் மற்றும் ஜாவா ஷோரூம்கள் மூலமாக புக்கிங் செய்தவர்கள் விபரங்களை பெற முடியும்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

ஆனால், இந்த டெலிவிரி எஸ்டிமேட்டரில் தங்களது புக்கிங் நம்பரை கொடுத்து பார்த்தவர்களுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பல ஜாவா வாடிக்கையாளர்களுக்கு பல மாதங்கள் காத்திருப்பு காலம் தெரிவிக்கப்படுவதால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

ஏற்கனவே, பல மாதங்கள் காத்திருந்தவர்களுக்கு, மேலும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அத்துடன், சிலருக்கு 8 மாதங்கள் வரை காட்டுகிறதாம். இதனை ஜாவா உரிமையாளர் சமூக வலைத்தள பக்கங்களில் பல வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனால், பலர் தங்களது முன்பதிவை ரத்து செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இது ஜாவா நிறுவனத்திற்கு புது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

ஜாவா பிராாண்டு மீது அதிக நன்மதிப்பு இருந்த நிலையில், அதனை கெடுத்துக் கொள்ளும் விதமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.அண்மையில் ஜாவா மோட்டார்சைக்கிளை டெலிவிரி பெற்ற மும்பையை சேர்ந்த சைலேஷ் சுவர்ணா என்ற வாடிக்கையாளர் கோபத்தின் உச்சத்தில் உள்ளார். அவரது கோபம் நியாயமானதாகவே தெரிகிறது.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

முன்பதிவு செய்து, பல மாத காத்திருப்புக்கு பின்னர் கடந்த 2ந் தேதிதான் தனது ஜாவா மோட்டார்சைக்கிளை சைலேஷ் சுவர்ணா டெலிவிரி எடுத்துள்ளார். மோட்டார்சைக்கிள் கையில் கிடைத்த மகிழ்ச்சியில் அடாத மழையிலும் தனது புதிய ஜாவா மோட்டார்சைக்கிளில் வலம் வந்துள்ளார்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

டெலிலிரி எடுத்த 20 நாட்களிலேயே அவரது ஜாவா மோட்டார்சைக்கிள் பல் இளிக்க ஆரம்பித்து விட்டது. அதாவது, அந்த மோட்டார்சைக்கிளின் பல பாகங்களில் துருப்பிடித்துவிட்டது. க்ரோம் பூச்சுடைய சைலென்சர் குழாய் உள்ளிட்ட பல பாகங்களிலும் துருப்பிடித்துள்ளதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

அத்துடன், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரிலும் நீர் உள்ளே புகுந்து பாழாக்கியுள்ளது. இதுதொடர்பான படங்களை அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெலிவிரி எடுக்கும்போது பார்த்து எடுத்திருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

இருப்பினும், டெலிவிரி எடுத்து 20 நாட்களுக்குள் புத்தம் புதிய பைக் இவ்வாறு துருப்பிடித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகள் பயன்படுத்திய நிலையில், இவ்வாறு ஆகியிருந்தால் கூட வாடிக்கையாளர் சரியாக பராமரிக்கவில்லை என்ற காரணத்தை கூற முடியும்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

இதுதொடர்பாக, டெலிவிரி பெற்ற ஜாவா டீலரிலும் காட்டி புகார் செய்துள்ளார் சைலேஷ் சுவர்ணா. டெலிவிரி எடுத்து பயன்படுத்திவிட்டதால் இனி எதுவும் செய்ய முடியாது என்று டீலரில் கைவிரித்து விட்டதாக தெரிகிறது. மேலும், துருப்பிடித்த பாகங்களை பெயிண்ட் செய்து சரிசெய்து தருவதாக உறுதி அளித்துள்ளனராம். மோசமாக துருப்பிடித்த பாகங்களை மாற்றித் தருவதாகவும் கூறி இருக்கின்றனராம்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

ராயல்் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் இதுபோன்ற பிரச்னைகளை வாடிக்கையாளர்கள் தெரிவிப்பதுண்டு. தரம் தொடர்பாக கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று தங்களது வருத்தத்தையும், கோரிக்கையையும் பதிவு செய்வர். ஆனால், அதே வரிசையில் தற்போது ஜாவா பைக்கில் துருப்பிரச்னை குறித்து உரிமையாளர் பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

சைலேஷ் சுவர்ணாவின் பைக் துருப்பிடித்த விஷயம் ஜாவா பைக்குகளின் தரம் குறித்த சந்தேகத்தை வாடிக்கையாளர் மத்தியில் கிளப்பி நிலையில், அடுத்து ஒரு வாடிக்கையாளரும் இதே பிரச்னையை ஃபேஸ்புக் மூலமாக அம்பலப்படுத்தி உள்ளார்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

சைலேஷ் சுவர்ணா போன்றே, அடுத்து ஒரு ஜாவா பைக் உரிமையாளரும் துருப் பிடித்த பிரச்னையை ஃபேஸ்புக் மூலமாக வெளியுலகத்திற்கு பட்டவர்த்தனமாக்கி இருக்கிறார். ஆதர்ஷ் குப்தா என்பவர் கடந்த 12ந் தேதிதான் தனது ஜாவா பைக்கை டெலிவிரி எடுத்துள்ளார்.அடுத்து ஒரு ஜாவா பைக் உரிமையாளரும் துருப் பிடித்த பிரச்னையை ஃபேஸ்புக் மூலமாக வெளியுலகத்திற்கு பட்டவர்த்தனமாக்கி இருக்கிறார். ஆதர்ஷ் குப்தா என்பவர் கடந்த 12ந் தேதிதான் தனது ஜாவா பைக்கை டெலிவிரி எடுத்துள்ளார்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

டெலிவிரி எடுத்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், எஞ்சின் ஹெட் உள்ளிட்ட பல பகுதிகளில் துரு ஏறி இருப்பது குறித்த படங்களை பதிவு செய்துள்ளார். அதாவது, மிக மட்டரகமான தரத்திலான பெயிண்ட் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

இதனால், வாங்கி இரு வாரங்களுக்குள்ளாகவே அந்த பைக்கில் துரு ஏறிவிட்டது. இது ஜாவா வாடிக்கையாளர்களை மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் ஜாவா பைக்கை வாங்கலமா? வேண்டாமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

துருப்பிடிக்கும் பிரச்னைகள் ஒருபுறம் என்றால், ஜாவா டீலர்களின் தில்லுமுல்லு விவகாரமும் வாடிக்கையாளர்களை ஒரு பக்கம் அதிர்ச்சியை தந்துள்ளது. ஆம், ஜாவா ஆசையில் கண்மண் தெரியாமல் வரும் வாடிக்கையாளர்கள் தலையில் ஜாவா டீலர் ஒன்று நன்றாக மிளகாய் அரைத்தது தெரிய வந்துள்ளது.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

அந்த ஜாவா டீலர்ஷிப் நிர்வாகம், வாடிக்கையாளரிடம் இருந்து கிட்டத்தட்ட 9 ஆயிரம் ரூபாயை கூடுதலாக சுருட்ட அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அந்த வாடிக்கையாளர் அடுத்து என்ன செய்தார் தெரியுமா? அதுதான் ஹைலைட்டே.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

பல்வேறு மாநில நீதிமன்ற தீர்ப்புகளில் ''ஹேண்டிலிங் சார்ஜ்கள்'' சட்ட விரோதம் என கூறப்பட்டுள்ளது. இது தவிர சுப்ரீம் கோர்ட்டும் கூட இதுபோன்ற கட்டணங்களை வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கூட கார் மற்றும் பைக் டீலர்கள் தொடர்ந்து இத்தகைய கட்டணங்களை வசூலித்து கொண்டேதான் உள்ளனர்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

இதையேதான் சம்பந்தப்பட்ட ஜாவா நிறுவன டீலர்ஷிப்பும் செய்ய முயன்றுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் ஜாவா கிளாசிக் ட்யூயல் ஏபிஎஸ் வேரியண்ட்டை வாங்குவதற்காக, அதன் டீலர்ஷிப் ஒன்றில் கொட்டோஷன் கேட்டுள்ளார். இதன் பேரில் அவர்கள் கொடுத்த கொட்டேஷனில் விலை எவ்வளவு குறிப்பிடப்பட்டிருந்தது தெரியுமா? 2,16,142 ரூபாய்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

இதில், எக்ஸ் ஷோரூம் விலை 1,76,242 ரூபாய், லைட் பார் மற்றும் மற்றவை ஆகியவற்றுக்கு 20 ஆயிரம் ரூபாய், இன்சூரன்ஸ் 14 ஆயிரம் ரூபாய், பிடிஐ (PDI - Pre Delivery Inspection) 900 ரூபாய், சென்டர் ஸ்டாண்ட் 800 ரூபாய், ஹேண்டிலிங் மற்றும் ஃபிட்டிங் ஆகியவற்றுக்கு முறையே ரூ.1,700 மற்றும் ரூ.500 மற்றும் டீடெய்லிங்கிற்கு 2,000 ரூபாய் அடக்கம்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

ஆக மொத்தம் 2,16,142 ரூபாய்க்கு டீலர்ஷிப்பில் கொட்டேஷன் கொடுக்கப்பட்டது. அத்துடன் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் டெலிவரி கொடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் டீலர்ஷிப்பில் தரப்பட்ட கொட்டேஷனை பார்த்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்து விட்டார். இது அநியாயமான விலை என அவர் நினைத்தார்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

எனவே நியாயமான விலை அல்ல என அவர் நினைத்தை எல்லாம் சிகப்பு குறியிட்டார். அந்த படத்தை நீங்கள் மேலே காணலாம். ஹைலைட் செய்யப்பட்டவை எல்லாம் விலையை உயர்த்துவதற்காக டீலர்ஷிப் அளவில் செய்யப்படும் தந்திரங்கள் என அவர் கருதினார். எனவே டீலர்ஷிப்பில் இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

இதில், ‘Others' என குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டணங்கள் எதற்காக? என்ற கேள்விக்கு, அவை ஆர்டிஓ ஏஜெண்ட் கட்டணம் என்ற பதில் அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் டீலர்ஷிப் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்களால் அவர் மனம் சமாதானம் அடையவில்லை. இந்த தேவையற்ற கட்டணங்கள் குறித்து அவர் ஜாவாவிற்கு எழுதினார்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

அத்துடன் அந்நிறுவனத்தின் சிஇஓவிற்கும் டிவிட்டர் மூலம் அவர் இதனை தெரியப்படுத்தினார். இதனால் தென் இந்தியா ஜாவா ஆர்ஜிஎம்-மிடம் இருந்து அவருக்கு உடனடியாக செல்போன் அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் டீலர்ஷிப்பின் எம்டி-யும் கான்ஃபரன்ஸ் காலில் இருந்தார். இதன்பின் கூடுதல் ஹேண்டிலிங் மற்றும் ‘Others' என குறிப்பிடப்பட்டிருந்த கட்டணங்கள் நீக்கப்பட்டன.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

அனுபம் தரேஜா புண்ணியத்தில், ரூ.9,000 ஹேண்ட்லிங் சார்ஜ் நீக்கப்பட்டது. ஆனால், ஜாவா பைக்குகளில் துருப்பிடிப்பது குறித்த பிரச்னையும், வெயிட்டிங் பீரியட் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என்று வாடிக்கையாளர்கள் கடும் ஏமாற்றத்துடன் உள்ளனர்.

சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்!

மேலும், டெலிவிரி எஸ்டிமேட்டரில் பல மாதங்கள் காத்திருப்பு காலம் நிலவுவதையடுத்து, பலர் தங்களது முன்பதிவை ரத்து செய்வது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர். இவர்களை தக்க வைப்பதற்கு ஜாவா நிர்வாகம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பல மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்.

Most Read Articles
English summary
Jawa owners have begun cancelling bookings after the company's online delivery estimator showed an increased waiting period. The delivery estimator went live today but it seems to have had a negative impact on buyers. Jawa deliveries are now scheduled for as late as March 2020 according to the delivery estimator.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X