லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

இருசக்கர வாகன ஓட்டிகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வரும் ஜாவா பெராக் பைக்கின் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

1970களில் இருசக்கர வாகன சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜாவா நிறுவனம், மீண்டும் இந்திய வாகனச் சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. அப்போதைய காலகட்டத்தில் விற்பனைச் செய்யப்பட்ட ஜாவா பைக்குகளை, அதன் ரசிகர்கள் தற்போது வரை பாதுகாத்து பராமரித்து வரும் அளவிற்கு அதன்மீது தீராத மோகம் கொண்டுள்ளனர்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

இந்த நிலையில், ஜாவா நிறுவனம் தனது புதிய தலைமுறை மோட்டார்சைக்கிள்களின் மூன்று புத்தம் புதிய மாடல் பைக்குகளை இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி அறிமுகம் செய்தது. மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் மூலம் இந்த நிறுவனம் ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய பைக்குகளை அறிமுகம் செய்தது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

இதைத்தொடர்ந்து, ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு பைக்குகளின் விற்பனை குறித்த தகவலை மட்டும் அப்போது அந்த நிறுவனம் வெளியிட்டது. ஆனால், ஜாவா பெராக் குறித்த எந்த தகவலையும் அந்த நிறுவனம் அறிவிக்கவில்லை.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு மாடல் பைக்குகளின் விற்பனையில் மட்டுமே தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருவதால் பெராக் மாடல் குறித்த தகவலைப் பின்னர் தெரிவிப்பதாக ஜாவா நிறுவனம் அறிவித்தது. தொடர்ந்து, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளுக்கான புக்கிங் ஆன்லைனில் மிகவும் பரபரப்பாக தொடங்கியது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

பைக்கை புக் செய்ய பலர் போட்டிப்போட்டுக் கொண்டு முன் பணம் செலுத்தினார்கள். இவ்வாறு வாடிக்கையாளர்கள் போட்டிப்போட்டு புக் செய்ததால், தயாரிக்கப்பட்ட அத்தனை யூனிட்களும் மிக விரைவாக புக் செய்யப்பட்டன. இதனால், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங்கும் முடிந்துவிட்டதாக ஜாவா நிறுவனம் அறிவித்தது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

பைக்கை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு பிப்ரவரி மாதம் டெலிவரி செய்யப்படும் என முன்னதாக ஜாவா நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் டெலிவரி தேதியை மாற்றி அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதத்திற்குள் பைக்குகளை டெலிவரி செய்ய இருப்பதாக ஜாவா தெரிவித்துள்ளது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

இந்நிலையில், தற்போது ஜாவா பெராக்கின் வெளியீடு குறித்த தகவலை அந்த நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஜாவா பெராக் மாடல் பைக்குகள் எப்போது விற்பனைக்கு வரும் என்ற வாடிக்கையாளர் ஒருவரின் டுவிட்டுக்கு பதிலளிக்கும் விதமாக ஜாவா டுவிட் செய்துள்ளது. இதனால், பெராக் மாடல் பைக்கிற்காக நீண்டா நாட்களாக காத்திருக்கும் அதன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அதன்படி, ஜாவா பெராக் மாடல் பைக்கிற்கான புக்கிங்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கப்படும் என அந்த டுவீட் மூலம் ஜாவா தெரிவித்துள்ளது. கிளாசிக் ஃபேக்டரி கஸ்டம் பாப்பர் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள ஜாவா பெராக் பைக்குகள் அதிக சக்தி வாய்ந்த மற்றும் தொழில்நுட்பம் அடங்கிய மாடலாக உள்ளது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

ரெட்ரோ ஸ்டைலில் களமிறங்கும் பெராக் பைக்கிற்கு கருப்பு நிற மேட் பினிஷிங் பெயிண்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கவர்ச்சியை மேலும் கூட்டும் விதமாக கோல்ட் நிற ஹைலைட்டை பக்கவாட்டு பகுதி மற்றும் பெட்ரோல் டேங்கில் அடிக்கப்பட்டுள்ளது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

ஜாவா பெராக்கில் அதிக சக்தி வாய்ந்த எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அது 27பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க்யூ திறனை தரும் 293சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் கொண்டுள்ள ஜாவா மற்றும் ஜாவா42 பைக்குகளை விட அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. அவ்வாறு, 6 ஸ்பீடு டிரான்மிஷனில் இயங்கும் பெராக் பைக்கில் 334சிசி கொண்ட லிக்யூடு கூல்டு DOHC எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 30 பிஎச்பி பவரையும் 31என்எம் டார்க்யூவையும் வெளிப்படுத்தும்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

ஜாவா பெராக் சக்திக்கேற்ப அதன் விலையும் சற்று அதிகமாக இருக்கிறது. ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு சாலை பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏற்றவாரு ஏபிஎஸ் பிரக்கிங் வசதியுடன் உருவாகியுள்ள இந்த பைக்குகள் இந்திய இருசக்கர வாகன சந்தையில் மீண்டும் ஓர் புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கிறது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்: விற்பனை குறித்த அறிவிப்பு!

ஜாவாவின் இந்த அறிவிப்பால் ராயல்என்பீல்டு பைக் நிறுவனம் சற்று நிலை தடுமாறிப்போய் உள்ளது என்றேக் கூறலாம். ஏனென்றால், ஜாவா புக்கிங் துவங்கிய சில நாட்களிலேயே ராயல் என்பீல்டு பைக்கின் விற்பனைச் சரிவைக் காண ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், பெராக் வருகை ராயல் என்பீல்டு விற்பனையை மேலும் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Jawa Perak Expected Launch End Of 2019. Read In Tamil.
Story first published: Wednesday, February 27, 2019, 10:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X