அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது ஜாவா!

ஸ்க்ராம்ப்ளர், ஆஃப்ரோடு உள்ளிட்ட வகைகளில் 3 புதிய மோட்டார்சைக்கிள்களை மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது ஜாவா நிறுவனம். விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்கும் ஜாவா!

கடந்த ஆண்டு நவம்பரில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதித்தது ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம். மஹிந்திராவின் துணை நிறுவனமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம்தான் ஜாவா மோட்டார்சைக்கிள் வர்த்தகத்தை இந்தியாவில் பொறுப்பேற்றுள்ளது.

 அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்கும் ஜாவா!

இந்தியாவில் முதலாவதாக கொண்டு வரப்பட்ட ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களின் விற்பனை உடனடியாக துவங்கப்பட்டது. ஆனால், பெராக் என்ற உயர்வைக மாடலின் விற்பனை உடனடியாக துவங்கப்படவில்லை. ஜாவா மற்றும் ஜாவா 422 மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்தும், உற்பத்தி பிரச்னை காரணமாக, நீண்ட காத்திருப்பு நிலவுகிறது.

 அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்கும் ஜாவா!

இதனால், பெராக் மாடலின் விற்பனையை தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம். இந்த நிலையில், தி ஹிந்து பத்திரிக்கைக்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆசிஷ் ஜோஷி பேட்டி அளித்துள்ளார். அதில், 3 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்கும் ஜாவா!

இந்த மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களும் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், வடிவமைப்பு மற்றும் வெவ்வேறு சிசி திறன் கொண்ட எஞ்சின் ரகங்களில் வர இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

 அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்கும் ஜாவா!

இந்த மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களும் அடுத்த 18 மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 15ந் தேதி ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டு இந்தியாவில் காலடி வைத்து ஓர் ஆண்டு நிறைவை கொண்டாட இருக்கிறது.

 அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்கும் ஜாவா!

இதற்காக, நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், இந்த புதிய மோட்டார்சைக்கிள்கள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் புதிய பெராக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவும், விற்பனையும் துவங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

 அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்கும் ஜாவா!

இதுதவிர்த்து, ஆஃப்ரோடு மற்றும் ஸ்க்ராம்ப்ளர் வகை மோட்டார்சைக்கிள்களையும் ஜாவா அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய தகவல்கள் ஜாவா பிரியர்களின் ஆவலை வெகுவாக அதிகரித்துள்ளது.

 அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்கும் ஜாவா!

தற்போது ஜாவா 42 மற்றும் ஜாவா க்ளாசிக் 300 மோட்டார்சைக்கிள்களில் 300 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 27 எச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெராக் மோட்டார்சைக்கிளில் இருக்கும் 334 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 30 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

 அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்கும் ஜாவா!

இந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்பட இருக்கும் எஞ்சின் குறித்தும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது. ஜாவா அடிப்பபடையிலான மாடல்களாக இவை வர இருக்கின்றன. எனவே, 300 சிசி எஞ்சின் புதிய ஆஃப்ரோடு மற்றும் ஸ்க்ராம்ப்ளர் மாடல்களில் பயன்படுத்தபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: The Hindu

Most Read Articles
மேலும்... #ஜாவா
English summary
Jawa is planning to launch 3 new motorcycles in India by next one and half year timeline.
Story first published: Monday, October 7, 2019, 9:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X