மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

ஜாவா நிறுவனம் அதன் ரசிகர்களை மீண்டும் அதிர்ச்சியில் உரைய வைக்கும் வகையில் புதிய தகவலை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் 1970ம் ஆண்டு ஜாவா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. களமிறக்கப்பட்ட சில நாட்களிலேயே ஜாவா பைக்குகளுக்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சில காரணங்களால், ஜாவா நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது.

மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

இந்நிலையில், ஜாவா நிறுவனம் தற்போது மீண்டும் தனது புத்தம் புதிய மோட்டார்சைக்கிள்களை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் களமிறக்கியுள்ளது. அந்தவகையில், தனது புதிய தலைமுறை மோட்டார்சைக்கிள்களின் மூன்று மாடல்களை இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி அறிமுகம் செய்தது.

மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

மேலும், ஜாவா நிறுவனம் இம்முறை மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல்களை அறிமுகம் செய்தது. ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் உருவத்தில் வேற்றுமைக் கொண்டிருந்தாலும், அதன் எஞ்ஜின்கள் ஒரே மாதிரியாகதான் உள்ளன.

மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

ராயல் என்பீல்டு பைக்கிற்கு போட்டியாக இந்த மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டிருப்பதால், அந்த பைக்கில் உள்ள அதே கெபாசிட்டி கொண்ட எஞ்ஜின்கள்தான் இந்த பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு, ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிளில் 293சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட லிக்யூடு கூல்டு டிஓஎச்சி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது, அதிகபட்சமாக 27பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் பாரத் ஸ்டேஜ்-6 மாசு உமிழ்வு கட்டுப்பாட்டிற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் முக்கிய அம்சமாக இரட்டை குழல் கொண்ட லைசென்சர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

இந்த இரு மோட்டார்சைக்கிள்களின் அறிமுகத்தின்போதே, ஜாவா நிறுவனத்தின் மூன்றாம் மாடலான ஜாவா பெராக் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்கும் 334சிசி கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 30 பிஎச்பி பவரையும் 31என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

இந்த நிலையில், முதற்கட்டமாக ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களுக்கான விற்பனை மட்டும் ஆன்லைனில் தொடங்கப்பட்டது. மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்த புக்கிங்கில், பலர் போட்டிப்போட்டுக் கொண்டு முன் பணம் செலுத்தினார்கள். இவ்வாறு வாடிக்கையாளர்கள் போட்டிப்போட்டு புக் செய்ததால், தயாரிக்கப்பட்ட யூனிட்கள் அனைத்தும் மிக விரைவாகவே புக்காகியதாக ஜாவா அறிவித்தித்து.

மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

மேலும், 2019ம் ஆண்டு செப்டம்பர் வரை இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங்கும் நிறுத்தப்படுவதாகவும் அறிவித்தது. இதையடுத்து, பைக்கை புக்கிங் செய்தவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் டெலிவரி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் டெலிவரி செய்வதில் இழுபறி நீடித்தது.

மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

தொடர்ந்து, ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார் சைக்கிள்களை ஏப்ரல் மாதத்திற்குள் டெலிவரி செய்வதாக ஜாவா அறிவித்தது. இதையடுத்து, நீண்ட இழுபறிக்கு பின்னர் முதற்கட்டமாக ஜாவா நிறுவனம் அதன் டெலிவரியை மார்ச் 30ம் தேதி தொடங்கியது. அவ்வாறு, ஜாவா நிறுவனம் அதன் முதல் மோட்டார்சைக்கிளை, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள வீரேந்தர் சிங் என்பவருக்கு டெலிவரி செய்ததாக தகவல்கள் பரவின.

மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பின்னரே டெலிவரி தொடங்கப்பட்டது. இது, அதன் ரசிகர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தினாலும், அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. இந்த நிலையில், இந்த மகிழ்ச்சியை அழிக்கும் விதமாக தற்போது புதிய தகவல் பரவி வருகிறது.

மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

அந்த வகையில், ஜாவா மோட்டார்சைக்கிள்களை டெலிவரி செய்ய மேலும் 5 முதல் 9 மாதங்கள் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் உற்பத்தி குறைவே முக்கிய காரணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உரைய வைத்த ஜாவாவின் புதிய தகவல்... என்ன தெரியுமா...?

அந்த வகையில், பெங்களூரு மற்றும் ஜெய்பூரில் ஆறு மாதங்களும், புது டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் காசியாபாத் ஆகிய நகரங்களில் எட்டு மாதங்களும், புனவில் ஒன்பது மதங்களும் ஃபரிதாபாத்தில் ஐந்து மாதங்களும் வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும் என தகவல்கள் பரவி வருகின்றது. இது சென்னை குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஜாவாவின் இந்த புதிய தகவலால் அதன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். மேலும், பலர் ஜாவா நிறுவனத்தின்மீது செம்மையான கடுப்பில் இருக்கின்றனர்.

source: zigwheels

Most Read Articles
English summary
Jawa Reveals High Waiting Periods. Read In Tamil.
Story first published: Thursday, April 18, 2019, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X