பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

எஸ்ஐஏஎம் அமைப்பு வெளியிட்டுள்ள விற்பனை நிலவரத்தில், மஹிந்திரா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் தனது மோஜோ மாடல் பைக்கின் விற்பனை சதவீதத்தை வெளிப்படையாக கூறியுள்ளது. அதேநேரம் அதனுடன் கூட்டணியில் உள்ள ஜாவாவின் விற்பனையான பைக் குறித்த தகவல்களை ரகசியமாகவே வைத்துள்ளது.

பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

இந்த நிலை நடைபெற்று வருகின்ற பொருளாதார ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்- செப்டம்பர் 2019) தான். மற்றப்படி சென்ற நவம்பர் 2018- மார்ச் 2019 அரையாண்டிற்கான ஜாவா நிறுவனத்தின் விற்பனை நிலவரத்தை எஸ்ஐஏஎம் நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டது.

பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

பகிர்ந்து கொண்ட அந்த விற்பனை நிலவரத்தில் 255 மோட்டர்சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தது. இதிலும் பெரும்பாலான பைக்குகள் டீலர்ஷிப்களுக்கு பயிற்சிக்காகவும் விளம்பர காட்சிக்காகவும் தான் அனுப்பப்பட்டுள்ளது.

பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

முன்னதாக, ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அனைத்தும் 2019 செப்டம்பர் மாதத்திற்குள் விற்கப்பட்டுவிடும் என கிளாசிக் லெஜண்ட்ஸ் தரப்பில் அறிக்கை விடப்பட்டது. ஆனால் தற்போது ஜாவா நிறுவனத்தின் விற்பனை நிலவரம் வெளியாகவில்லை, ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

ஜாவாவின் விற்பனை நிலவரம் வெளியாகாததற்கு காரணம், விற்பனையான பைக்குகளின் எண்ணிக்கையை வெளியிட அந்நிறுவனம் விரும்பாமல் இருக்க வேண்டும் அல்லது ஜாவா நிறுவனம் எதிர்பார்த்த எண்ணிக்கையில் பைக்குகள் விற்பனையாகாமல் இருந்திருக்க வேண்டும்.

பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

விற்பனையாளர்களிடம் இருந்து, தயாரிப்பில் இருந்து, டெலிவிரியில் இருந்து, விற்பனை சதவீதத்தை கணிக்கும் மதிப்பீட்டாளரிடம் இருந்து என இந்த அரையாண்டில் ஜாவா நிறுவனத்தை அதிகளவிலான பிரச்சனைகள் சூழ்ந்திருந்தன. இந்நிறுவன பைக்குகளின் முன்பதிவுகள் பல, வாடிக்கையாளர்களால் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஜாவா நிறுவனத்தின் விற்பனை பைக்கின் எண்ணிக்கை குறைந்தது. இந்த பைக்குகளையும் சாலையில் அவ்வளவாக பார்க்க முடியவில்லை.

பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

ஜாவா நிறுவனம் சமீபத்தில் 90ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வெறும் 90 யூனிட்களில் லிமிட்டேட் எடிசனை அறிமுகப்படுத்தியது. உடனடியாக டெலிவிரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த பைக்குகள் மூலம் மீண்டும் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடலாம் என ஜாவா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

மேலும் இந்த நிறுவனம் இந்த பைக்கை அக்டோபர் 22ஆம் தேதிக்கு முன்னதாக முன்பதிவு செய்தவர்களில் 90 பேருக்கு குலுக்கல் முறையிலேயே வழங்கவுள்ளது. இதனால் யார் முதலில் முன்பதிவு செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இந்த லிமிட்டேட் எடிசன் பைக் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

ஜாவா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து மேலும் 3 பைக்குகள் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இந்த பைக்குகளின் விபரங்களை, இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் காலடி எடுத்து வைத்த நாளான நவம்பர் 15ஆம் தேதி வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

இந்த அரையாண்டு மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து ஜாவா மோட்டார் பைக்களின் எண்ணிக்கை குறைவதற்கு இந்நிறுவனத்தின் நீண்ட வருட பயணமும் காரணங்களுள் ஒன்று. 70, 80களில் ஜாவா மோட்டார்ஸ் மிக பெரிய பிராண்ட் நிறுவனமாக விளங்கியது. தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு கூட இந்த நிறுவனத்தின் பைக்குகள் கனவு வாகனமாக இருந்ததாக கூறுவர்.

பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

ஆனால் அதன்பின் இந்நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளும் ஜாவாவை விட பல அம்சங்களை கொண்ட பைக்குகள் இந்திய சந்தையில் நுழைந்ததும் ஜாவா பைக்குகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

Most Read Articles
English summary
Jawa Sales Report: No Numbers Available Says SIAM
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X