இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் ஹேமந்த் சோரன் இந்தியர்கள் தவம் கொண்டு காத்திருக்கும் பைக்கை இயக்கிச் செல்வதுபோன்ற வீடியோக் காட்சிகள் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

ஜார்கண்ட் மாநிலத்தின் 81 சட்டமன்ற தொகுதிக்களுக்கான தேர்தல் கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில், ஜார்கண்ட் முக்தி மோர்சா (JMM) கட்சி காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்து வெற்றியைப் பெற்றது.

ஆகையால், கட்சியின் சார்பாக தற்போது ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஜமுமோ கட்சியின் தலைவரான ஹெமந்த் சோரன் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

இவர், தேர்தலில் வெற்றிக் கனியைப் பெற்றபோது மகிழ்ச்சி களிப்பில் மிதி வண்டியில் வளம் வந்தவாறு இருந்தார். இந்த காட்சியையே தேர்தல் ரிசல்ட் வெளிவந்தபோது ஹேமந்த் சோரனை காட்சிப்படுத்த ஊடகங்கள் பயன்படுத்தின.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் களமிறங்கியுள்ள ஜாவா பைக்கை அவர் இயக்குவதுபோன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

இந்த வீடியோவை, ராஹுல் கன்வால் என்ற டுவிட்டர் பயனர் அவரது பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவின்கீழ் பாஜக-வினரை வம்பிற்கு இழுக்கும் வகையில் கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, "முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நக்சல்வாதிகளை எவ்வாறு எதிர்ப்பார், அவரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை இந்த வீடியோ விளக்கும். பாஜக கட்சியினரின் குண்டு, புல்லட் ஆகியவற்றில் இருந்து மாறுபட்டு காணப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஹேமந்த் சோரனே ஜார்கண்டின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

ராஹூல் கன்வாலின் இந்த டுவிட்டர் பதிவு தற்போதே வைரலாக ஆரம்பித்துள்ளது. இது, இப்போது 13.3 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

பொதுவாக, ஜார்கண்ட் மாநிலம் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் அதிகம் நிறைந்த மாநிலங்களில் ஒன்று. ஆகையால், அம்மாநிலத்தில் எந்தவொரு அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் வெளியில் செல்லும்போது குறைந்தபட்ச பாதுகாப்புடன் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், ஹேமந்த் சோரன் நக்சலைட்டுகள்மீது சற்றும் பயமின்றி செயல்படுவதாக கூறப்படுகின்றது. இதனை வெளிக்காட்டும் வகையிலேயே இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

அதேசமயம், இந்த வீடியோ தேர்தல் பிரச்சார பரப்புரையின்போது இந்தியா டுடே நிரூபரால் செய்யப்பட்ட நேர்காணலின்போது எடுக்கப்பட்டதாகும். இந்த வீடியோ, ஹேமந்த் சோரன் விரைவில் முதலமைச்சராக உள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

ஹேமந்த் சோரன் ஒரு பைக் பிரியர் என கூறப்படுகின்றது. இதனை உறுதிச் செய்யும் வகையில் அவரிடம் பல்வேறு இருசக்கர வாகனங்கள் காணப்படுகின்றன. மேலும், தற்போது இவர் ஜாவா பைக்கில் வலம் வருவதைப் போன்றே முன்னதாக ராயல் என்பீல்டு பைக்கில் சுற்றி வருவதைப் போன்ற வீடியோவும் வெளியாகியிருந்தது.

டிசைனிங் ஸ்டுடியோ நடத்தி வந்த இவர், சகோதரர் துர்கா இறந்ததன் காரணமாக அரசியலில் களமிறங்கினார். தற்போது, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

இந்திய இருசக்கர வாகன சந்தையில் மிகவும் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆகையால், பெரும்பாலான இளைஞர்களின் மனதில் நீங்க இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

இந்த பைக்குகள் தற்போது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது. ஜாவாவின் வருகையால் இந்நிறுவனம் சற்றே ஆட்டத்தைக் கண்டுள்ளது. இதற்கு, ஜாவா பைக்குகள் 90'ஸ்களில் இருந்ததைப் போன்றே பழைமையான தோற்றத்தில் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு களமிறங்கியதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

ஜாவா பைக்குகளுக்கு சக்தி அளிக்கும் மஹிந்திரா மோஜோவின் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 293 சிசி, ஒற்றை சிலிண்டர் எஞ்சின் ஆகும். இது அதிகபட்சமாக 27 பிஹெச்பி சக்தியையும், 28 என்எம் உச்சபட்ச டார்க்கையும் உருவாக்கும்.

இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

மேலும், இந்த எரிபொருள் உட்செலுத்துதல் அமைப்பு, திரவ-குளிரூட்டல், நான்கு வால்வு தலை, இரட்டை-வெளியேற்ற குழல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த இயந்திரம் பெறுகிறது. இதனை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலுடன் ஒப்பிடுகையில், ​​ஜாவா கிளாசிக் 300 மிகவும் மென்மையானதாகவும், குறைந்த அதிர்வுகளையும் வெளிப்படுத்தும் கொண்டிருக்கின்றது.

இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

இதுபோன்ற பல காரணங்களால் ஜாவா பைக்கிற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆனால், இந்த பைக்கைப் பெறுவதற்கான காத்திருப்பு காலம் அதிகமாகக் காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

Image Courestey: India Today/YouTube

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Jharkhand New CM Ride With Jawa Classic. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X