நிஞ்சா 300 பைக்கின் தயாரிப்பு& விற்பனை நிறுத்தம்... கவாஸாகி அதிரடி முடிவு..

கவாஸாகி இந்தியா நிறுவனம் நிஞ்சா 300 பைக்கின் தயாரிப்பு மற்றும் விற்பனையை கடந்த நவம்பர் மாதமே நிறுத்தியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள தகவலில் இந்த பைக்கின் தயாரிப்பு கடந்த அக்டோபர் மாதமே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் ஸ்டாக்கில் இருந்து நிஞ்சா 300 பைக்குகள் மட்டும் கடந்த மாதத்தில் டீலர்ஷிப்களிடம் விற்பனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

நிஞ்சா 300 பைக்கின் தயாரிப்பு& விற்பனை நிறுத்தம்... கவாஸாகி அதிரடி முடிவு..

கவாஸாகி நிறுவனம் நிஞ்சா 300 பைக்கை எண்ட்ரீ-லெவல் மாடலாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. ரூ.2.98 லட்ச விலையுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக்கை அடிப்படையாக கொண்டு நிஞ்சா 400 பைக்கும் பிறகு வெளியானது. இந்த நிஞ்சா 400 இந்திய எக்ஸ்ஷோரூமில் நிஞ்சா 300 மாடலின் விலையை விட சுமார் 2 லட்ச ரூபாய் அதிகமாக விற்கப்பட்டது.

நிஞ்சா 300 பைக்கின் தயாரிப்பு& விற்பனை நிறுத்தம்... கவாஸாகி அதிரடி முடிவு..

நிஞ்சா 300 மாடல் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவுள்ளதாக கவாஸாகி நிறுவனம் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் இந்த பைக் தான் கவாஸாகி நிறுவனத்தின் சிறந்த இந்திய விற்பனை மாடலாக உள்ளது. இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் வரும் மாதங்களில் கவாஸாகி நிறுவனத்தின் விற்பனை சரிவை காணும் என்பது உறுதி.

நிஞ்சா 300 பைக்கின் தயாரிப்பு& விற்பனை நிறுத்தம்... கவாஸாகி அதிரடி முடிவு..

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கில் 296சிசி லிக்யூடு கூல்டு ட்வின்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 39 பிஎச்பி பவரையும் 28 என்எம் டார்க் திறனை 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்துகிறது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச், பின் சக்கரத்திற்கு சஸ்பென்ஷன் அமைப்பாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக், டிஸ்க் ப்ரேக்காக இரு சக்கரங்களிலும் நிலையாக ட்யூல்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் மற்றும் மாடர்ன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களை இந்த பைக்கில் கவாஸாகி நிறுவனம் பொருத்தியுள்ளது.

நிஞ்சா 300 பைக்கின் தயாரிப்பு& விற்பனை நிறுத்தம்... கவாஸாகி அதிரடி முடிவு..

நிஞ்சா 400 பைக்கில் லிக்யூடு-கூல்டு இரட்டை சிலிண்டர் அமைப்பை கொண்ட 399சிசி என்ஜினை கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த என்ஜின் 47.5 பிஎச்பி பவரையும் 38 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்புகளை கொண்டுள்ள இந்த பைக் அதிகப்படியான விலையினால் பல சிறப்பம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.

நிஞ்சா 300 பைக்கின் தயாரிப்பு& விற்பனை நிறுத்தம்... கவாஸாகி அதிரடி முடிவு..

நிஞ்சா 400 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள தொழிற்நுட்பம் மற்றும் டிசைன் அமைப்பு முற்றிலும் இதன் முந்தைய மாடல் பைக்கான இசட்எஸ்-10ஆர்-ல் இருந்து பெறப்பட்டுள்ளது. புத்துணர்ச்சியான உடல் அமைப்பை பெற்றுள்ள இந்த நிஞ்சா 400 பைக் எபோனி ப்ளாக் மற்றும் லைம் க்ரீன் என்ற இரு நிற தேர்வுகளில் விற்பனையாகி வருகிறது.

நிஞ்சா 300 பைக்கின் தயாரிப்பு& விற்பனை நிறுத்தம்... கவாஸாகி அதிரடி முடிவு..

மேலும் இந்நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு இசட்900 பைக்கை பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. ரூ.8.50 லட்ச (எக்ஸ்ஷோரூம்) விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக்கில் புதியதாக வழங்கப்பட்டுள்ள அப்டேட்கள் குறித்து அறிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

நிஞ்சா 300 பைக்கின் தயாரிப்பு& விற்பனை நிறுத்தம்... கவாஸாகி அதிரடி முடிவு..

ஏற்கனவே கூறியதுபோல், நிஞ்சா 300 பைக் கவாஸாகி நிறுவனத்தில் இருந்து மிக சிறப்பாக விற்பனையாகி வரும் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாகும். பிரிவில் உள்ள மற்ற பைக்குகளுடன் விலையில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இந்த 300 மாடல் பைக், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310, கேடிஎம் ஆர்சி390 மற்றும் யமஹா ஆர்3 பைக்குகளுடன் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Ninja 300 Discontinued In India: Here Are All The Details!
Story first published: Friday, December 27, 2019, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X