கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்.. 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்!

கவாஸாகி நிறுவனம், அதன் பிரபல நிஞ்சா 300 பைக்கின் 1,358 யூனிட் பைக்கினை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான காரணத்தை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

ஜப்பான் நாட்டை தலைமையமாகக் கொண்டு இயங்கும் பிரபல கவாஸாகி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த நிஞ்சா 300 மாடலை, திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

அந்தவகையில், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் நடப்பாண்டின் மார்ச் மாதம் 12ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட கவாஸாகி நிஞ்சா300 பைக்குகளை அந்நிறுவனம் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில் அந்நிறுவனம், 1,358 யூனிட் நிஞ்சா 300 மாடல் பைக்குகளைத் தயாரித்ததாகக் கூறப்படுகின்றது.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

இந்த பைக்குகளை அந்நிறுவனம் திரும்ப அழைக்க சில முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், மிக முக்கியமாக முன்பக்க வீலில் இடம்பெற்றிருக்கும் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக அவை திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

அந்தவகையில், முன் பக்க வீலில் இருக்கும் பிரேக்கின் பிரைமரி லிப் சீல் போதுமான கடினதன்மை பெறாத காரணத்தால் அவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது கடினத் தன்மையைப் பெறாத காரணத்தால், பிரேக் பிடிக்கும்போது எளிதில் கிழிந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது பைக்கருக்கு பேராபத்தை விளைவிக்கலாம்.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஆகையால், கவாஸாகி நிறுவனம், நிஞ்சா 300 மாடல் பைக்குகளில், இவற்றை அப்டேட் செய்ய திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

தற்போது, பிரச்னையைச் சந்தித்திருக்கும் நிஞ்சா 300 மாடல் பைக், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்தே உள்நாட்டு மூலப் பொருட்கள்மூலம், இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

இந்நிலையிலேயே கவாஸாகி நிஞ்சா 300 பைக், பிரேக் தோல்வி பிரச்னையைச் சந்தித்துள்ளது. ஆகையால், கவாஸாகி நிறுவனத்தின் டீலர்கள், குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரான பைக்குகளை, இலவச அப்டேட் செய்துகொள்ள அதன் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

இந்த அப்கிரேஷனில், மாஸ்டர் சிலிண்டர் ரீபிளேஸ் செய்யப்பட்டு தரப்பட உள்ளது. அதேசமயம், இந்த கவாஸாகி நிறுவனத்தன் இலவச அப்டேட்டிற்கு, உங்களது பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள பிரத்யேக வலைதள பக்கத்தை அந்நிறுவனம் தயார் செய்துள்ளது. https://kawasaki-india.com/recalls/

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

கவாஸாகி நிறுவனத்தின் இந்த நிஞ்சா 300 மாடல் பைக், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்காக இருக்கின்றது. இது, அறிமுகம் செய்யப்பட்ட அப்போதிலிருந்து, தற்போது வரை கணிசமான வரவேற்பை இந்தியர்கள் மத்தியில் பெற்று வருகின்றது.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

அதேசமயம், இந்த பைக் இந்தியாவில் ரூ. 3.6 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அறிமுகம் செய்யப்பட்ட விரைவிலேயே அதன் விலையில் ரூ. 1 லட்சம் வரை குறைக்கப்பட்டது.

ஆகையால், தற்போது இந்த பைக் ரூ. 2.98 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

இந்த விலை குறைப்புடன், கவாஸாகி நிறுவனம், நிஞ்சா 300 பைக்கில் கூடுதலாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியைஅறிமுகம் செய்தது.

கவாஸாகியின் இந்த நடவடிக்கையால், விலை மதிப்பிற்கேற்ற மாடலாக நிஞ்சா 300 பைக் உருவாகியது.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

அதேசமயம், கவாஸாகி நிஞ்ஜா 300 பைக்கிற்கான வரவேற்பு கணிசமாக உயரும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டது. அதற்கேற்ப வகையில், போட்டியாளர்களுக்கும் இது மிக சவாலான மாடலாக அமைந்துள்ளது. ஏனெனில், முக்கிய போட்டியாளர்கள் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான விலையில், இதற்கு ஈடான பைக்குகளை விற்பனைச் செய்து வருகின்றனர்.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்... 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்...

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கில் 296 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 39 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது. இத்துடன், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Ninja 300 Recalled In India. Read In Tamil.
Story first published: Tuesday, July 23, 2019, 19:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X