நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கை அடுத்த ஆண்டில் மட்டுமே வாங்க முடியும்... இதுதான் காரணம்

அடுத்த ஆண்டு 2020ல் இருந்து கவாஸாகி தனது பிரபல மாடல்களுள் ஒன்றான நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கின் தயாரிப்பை நிறுவுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கை அடுத்த ஆண்டில் மட்டுமே வாங்க முடியும்... இதுதான் காரணம்

நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர், கவாஸாகி நிறுவனத்தின் பெரிய அளவிலான மற்றும் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்ட பைக்காகும். 2005ல் டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக் 2006ஆம் ஆண்டில் சுசுகியின் ஹயபுஸா மாடலுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்தது. அறிமுகமான புதியதில் இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருந்த 1,352சிசி என்ஜினால் நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக் தான் உலகிலேயே பெரிய என்ஜினை கொண்ட பைக்காக கருதப்பட்டது.

நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கை அடுத்த ஆண்டில் மட்டுமே வாங்க முடியும்... இதுதான் காரணம்

பெரிய என்ஜினை கொண்ட பைக்காக மட்டுமில்லாமல் உலகிலேயே அதிக வேகமாக இயங்கக்கூடிய மோட்டார்சைக்கிளாக, வெறும் 2.5 வினாடிகளில் 0-100 kmph வேகத்தை எட்டக்கூடியது. 2012ல் இந்த பைக்கில் சில அப்டேட்களை கொண்டுவந்தது, கவாஸாகி நிறுவனம்.

நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கை அடுத்த ஆண்டில் மட்டுமே வாங்க முடியும்... இதுதான் காரணம்

நமக்கு தெரிந்த வரை நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கின் தயாரிப்பு நிறுத்தப்படவுள்ளதற்கு சில காரணங்கள் உள்ளன. அதாவது, உலகம் முழுவதும் வாகனங்களின் மாசு உமிழ்வை குறைக்க பல நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 1,441சிசி என்ஜின் ஆனது குஸ்ஸ்லேர் என்கிற எரிவாயுவை எரிபொருளாக கொண்டது. இந்த எரிபொருள் முற்றிலும் பசுமையான சூற்றுச்சூழலுக்கு எதிரானதாகும். இது ஒரு காரணமாக இருக்கலாம்.

நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கை அடுத்த ஆண்டில் மட்டுமே வாங்க முடியும்... இதுதான் காரணம்

அல்லது, கவாஸாகி நிறுவனத்தால் இந்த பைக்கிற்கு மாற்றாக கடந்த 2018ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட நிஞ்சா எச்2 எஸ்எக்ஸ் பைக்கும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் எச்2 வரிசை பைக்குகளில் ஹைபர்-டூரிங் வேரியண்ட்டாக இந்த எச்2 எஸ்எக்ஸ் பைக் விளங்குகிறது.

998சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர், சூப்பர்சார்ஜ்டு என்ஜினை கொண்ட இந்த கவாஸாகி எச்2 எஸ்எக்ஸ் பைக் அதிகப்பட்சமாக 199 பிஎச்பி பவரையும் 136 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் என்ஜின் குறைந்த வலிமையில் மிட்-ரேஞ்சில் தயாரிக்கப்பட்டுள்ளதால் ஹைபர்-டூரிங் வேரியண்ட்டிற்கு கணக்கச்சிதமாக பொருந்துகிறது.

நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கை அடுத்த ஆண்டில் மட்டுமே வாங்க முடியும்... இதுதான் காரணம்

இந்த பைக், 209 பிஎச்பி மற்றும் 153 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கை விட எடை குறைவாக, எல்லா விதத்திலும் சிறந்ததாக கருதப்படுகிறது. இதனால் தான், அந்த பைக்கிற்கு மாற்றாக கவாஸாகி நிறுவனம் இந்த எச்2 எஸ்எக்ஸ் பைக்கை கொண்டு வந்துள்ளது.

இவை மட்டுமில்லாமல் ஏற்கனவே கூறியதுபோல் நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கின் விற்பனை மிகவும் மோசமாக சரிவடைந்து வருவதும் இந்த தயாரிப்பு நிறுத்தத்திற்கு காரணம். தயாரிப்பு நிறுத்தப்படவுள்ள போதிலும் 2020ஆம் ஆண்டு முழுவதும் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.

நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கை அடுத்த ஆண்டில் மட்டுமே வாங்க முடியும்... இதுதான் காரணம்

இதன் தயாரிப்பு நிறுத்தப்படும் இதே வேளையில், இதன் போட்டி மாடலான ஹயபுஸா பைக்கை சுசுகி நிறுவனம் சில அப்டேட்களுடன் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் மிக பெரிய என்ஜின் அமைப்பை கொண்ட மோட்டார்சைக்கிளாக சுசுகி ஹயபுஸா பைக் விளங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கை அடுத்த ஆண்டில் மட்டுமே வாங்க முடியும்... இதுதான் காரணம்

கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ் 14-ஆர் பைக்கின் தயாரிப்பு நிறுத்தம் ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த பைக்கை அவ்வளவாக சாலையில் பார்க்க முடியாவிட்டாலும், இதன் வலிமையான மற்றும் வேகமான என்ஜினிற்கு ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Ninja ZX-14R To Be Discontinued After 2020: The Big Ninja To Be Taken Off The Shelves!
Story first published: Tuesday, November 26, 2019, 11:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X