புதுப்பொலிவுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா 650 பைக்.. ஸ்பெஷல் அப்டேட் என்ன தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கவாஸாகி நிறுவனம், அதன் பிரபல நிஞ்சா 650 மாடலை அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதுப்பொலிவுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா 650 பைக்.. ஸ்பெஷல் அப்டேட் என்ன தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கவாஸாகி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த நிஞ்சா 650 மாடலுக்கு 2020ஆம் ஆண்டிற்கான மறுசீரமைப்பை (அப்டேட்) வழங்கி அறிமுகம் செய்துள்ளது.

இதில், புதிய அப்டேட்டுகளாக பல்வேறு சிறப்பம்சங்களை கவாஸாகி நிறுவனம் சேர்த்துள்ளது. இதனால், ஏற்கனவே ஸ்போர்ட்டி லுக்கில் காட்சியளித்து வந்த நிஞ்சா 650 தற்போது சூப்பர் ஸ்போர்ட் பைக்காக அவதாரமெடுத்துள்ளது.

புதுப்பொலிவுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா 650 பைக்.. ஸ்பெஷல் அப்டேட் என்ன தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..

அதுமட்டுமின்றி, பல்வேறு அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகள் இந்த பைக்கில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், உயர் தொழில்நுட்ப வசதிகளாக ப்ளூடூத் மூலம் பைக்குடன் செல்போனை இணைக்கும் அம்சம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அம்சம் செல்போனை ஒருபோதும் மிஸ் செய்ய விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

புதுப்பொலிவுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா 650 பைக்.. ஸ்பெஷல் அப்டேட் என்ன தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..

அந்தவகையில், செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றையும் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள டிஎஃப்டி திரை மூலம் அது காட்சிப்படுத்தும். அதேபோன்று, பைக்கில் உள்ள ஒரு சில கருவிகளை கட்டுபடுத்தவும் அது உதவுகின்றது. நிஞ்சா 650 பெற்றிருக்கும் பல அப்டேட்டுகளில் இந்த டிஎஃப்டி வண்ணத் திரையும் ஒன்றாகும்.

புதுப்பொலிவுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா 650 பைக்.. ஸ்பெஷல் அப்டேட் என்ன தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..

அது, 10.9செமீ அளவில் காட்சியளிக்கின்றது. இதில், ப்ளுடூத் வசதி மட்டுமின்றி ஜிபிஎஸ் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பைக் தொலைந்து விட்டாலே, பைக்கினை நிறுத்திய இடம் மறந்துவிட்டாலோ, அதனை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம்.

மேலும், இந்த டிஎஃப்டி திரை மூலம் கியர் பொசிஷன், இன்டிகேட்டர், எரிபொருள் அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ரைடரால் அறிந்துக் கொள்ள முடியும்.

புதுப்பொலிவுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா 650 பைக்.. ஸ்பெஷல் அப்டேட் என்ன தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..

தொடர்ந்து, நிஞ்சா 650 பைக்கிற்கு புத்தம் புதிய ஸ்டைலிலான எல்இடி மின் விளக்குகள் மற்றும் டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த டயர்கள் ஸ்போர்ட்ஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருப்பவைக்கு இணையானதாக காட்சியளிக்கின்றது.

புதுப்பொலிவுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா 650 பைக்.. ஸ்பெஷல் அப்டேட் என்ன தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..

கவாஸாகி நிறுவனம், நிஞ்சா 650 பைக்கிற்கு புதிய ஸ்டைலை வழங்குவதற்காக இசட்எக்ஸ்-6ஆர் மற்றும் நிஞ்சா 400 மாடல்களின் டிசைன் தாத்பரியங்கள் சிலவற்றைப் பயன்படுத்தியுள்ளது.

அந்தவகையில், பின்பக்கத்தில் அமர்ந்து பயணிப்பவர்களுக்காகன இருக்கையை சற்று புதிய ஸ்டைலில் மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய மாற்றத்தால், அது கூடுதல் சொகுசான அனுபவத்தை வழங்குகின்றது.

புதுப்பொலிவுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா 650 பைக்.. ஸ்பெஷல் அப்டேட் என்ன தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..

தொடர்ந்து, இந்த பைக்கின் அதீத வேகத்தை வெளிப்படுத்துவதற்காக 650சிசி திறன் கொண்ட பேரல்லல் ட்வின் மோட்டார் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 67 பிஎச்பி பவரையும், 49 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த எஞ்ஜின் திறனை சற்றும் பாதிக்காத வகையில் டிரெல்லிஸ் ஃபிரேமைக் கொண்டு பைக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

புதுப்பொலிவுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா 650 பைக்.. ஸ்பெஷல் அப்டேட் என்ன தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..

கவாஸாகி 650 பைக்கில் இந்த மாற்றங்களைத் தவிர வேறெந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த பைக் பச்சை மற்றும் கருப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய மூன்று விதமான வண்ண தேர்வில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது.

புதுப்பொலிவுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா 650 பைக்.. ஸ்பெஷல் அப்டேட் என்ன தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..

புதிய அப்டேட்டைப் பெற்றிருக்கும் இந்த பைக்கின் விலை குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், இந்த அறிமுகம் குறித்த தகவலும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், கூடிய விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Unveiled 2020 Ninja 650. Read In Tamil.
Story first published: Tuesday, October 8, 2019, 18:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X