இசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...?

கவாஸாகி நிறுவனம் அதன் இசட் 250 மாடலை இந்திய சந்தையை விட்டு விலக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக இந்த நேக்கட் ரக பைக்கை அந்த நிறுவனம் விலக்கிக் கொண்டது என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

இசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...?

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் கவாஸாகி நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த மோட்டார்சைக்கிள் ஒன்றை சந்தையை விட்டு விலக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், அந்த நிறுவனத்தின் பிரபல மாடலான இசட்250 என்ற மாடலைத் தான் அந்த நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ள இருக்கின்றது.

இசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...?

கவாஸாகி நிறுவனம், இந்த இசட்250 மாடலை நிஞ்சா 250 மற்றும் நிஞ்சா 300 ஆகிய இரண்டு மாடல்களின் நேக்கட் ரக மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. மேலும், 250சிசி ரகத்தில் சந்தையை ஆளும் விதமாகவும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கேற்ப வகையில், அதன் சகோதரர்கள் மாடலான நிஞ்சா பைக்குகளைக் காட்டிலும் அது குறைவான விலையில் களமிறக்கப்பட்டது.

இசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...?

இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால், கவாஸாகி இசட்250 பைக் கணிசமான வரவேற்பைப் பெற்றது. ஆனால், சமீபகாலமாக அந்த பைக்கின் விற்பனை விகிதம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில், கடந்த 2017-18 ஆண்டில் இசட்250 பைக் வெறும் 38 யூனிட்களை மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...?

அதேசமயம், 2018-19ஆம் நிதியாண்டில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகின. அதேபோன்று, 2019ம் ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், 6வது மாதமும் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஆனால், இத்தனை மாதங்களில் ஒரு யூனிட் கவாஸாகி இசட்250 மாடல் விற்பனையாகவில்லை.

இசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...?

இந்த மிகப்பெரிய வீழ்ச்சி கவாஸாகி நிறுவனத்திற்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆகையால், இதுபோன்ற காரணங்களால் கவாஸாகி நிறுவனம் இசட்250 மாடலை இந்தியைச் சந்தையை விட்டு விலக்கிக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இருந்து அதனை தற்போது நீக்கியுள்ளது.

இசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...?

கவாஸாகி நிறுவனம், அதன் இசட் வரிசையில் இசட்300 மற்றும் இசட்400 மாடல்களை சர்வதேச சந்தையில் விற்பனைச் செய்து வருகின்றது. இதுவும் சிங்கிள் சிலிண்டர் வெர்ஷனாக விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. தற்போது, இசட்250 மாடல் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதால், இதில் ஏதேனும் ஒரு மாடலே அல்லது இரண்டு மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...?

கவாஸாகியின் இந்த இசட்250 மாடல் பைக்கில் 249சிசி திறன் கொண்ட பேரல்லல் ட்வின் லிக்யூடு கூல்ட் டிஓஎச்சி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அது, 11,000 ஆர்பிஎம்மில் 32பிஎச்பி பவரையும், 10,000 ஆர்பிஎம்மில் 21 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...?

கவாஸாகி நிறுவனம் டபிள்யூ800 என்ற புதிய மாடல் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய மாடல் மோட்டார்சைக்கிளை, டிரையம்ப் நிறுவனத்தின் போனிவில் பைக்கிற்கு போட்டியாக அந்த நிறுவனம் களமிறக்க இருக்கின்றது.

இசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...?

இந்த புதிய மாடல் பவர்ஃபுல்லான பைக் அடுத்த மாதம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 773 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அது, 48எச்பி பவரையும், 62.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலம் இயங்கும்.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Z250 Discontinued — Officially Removed From Company Website. Read In Tamil.
Story first published: Friday, June 21, 2019, 18:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X