போட்டிக்கு ஆளில்லாத காரணத்தால் தனிக்காட்டு ராஜாவாக மாறும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்...!

போட்டிக்கு ஆளில்லாத காரணத்தால் விற்பனையில் தனிக்காட்டு ராஜாவாக மாறிக்கொண்டுவரும் கவாஸாகி இசட்எக்ஸ் 6ஆர் பைக். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

போட்டிக்கு ஆளில்லாத காரணத்தால் தனிக்காட்டு ராஜவாக மாறும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்...!

ஜப்பானை தலைமையமாகக் கொண்டு இயங்கும் கவாஸாகி நிறுவனம், ஸ்போர்ட்ஸ் ரக இருசக்கர வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் வெளியிட்ட நிஞ்சா உள்ளிட்ட பல்வேறு பைக்குகள் சர்வேதேச அளவில் மிகவும் பிரபலமானவை. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கவாஸாகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த இசட்எக்ஸ்-6ஆர் மாடல் பைக் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

போட்டிக்கு ஆளில்லாத காரணத்தால் தனிக்காட்டு ராஜவாக மாறும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்...!

நடுத்தர எடையில் சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ரகத்தில் இந்த இசட்எக்ஸ்-6ஆர் மாடலை கவாஸாகி நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன் அதிநவீன தொழில்நுட்ப வசதியும், பிரமாண்டமான தோற்றமும், இருசக்கர வாகன ஓட்டிகளை முதல் பார்வையிலேயே தன் வசம் கவரும் அமைந்துள்ளது.

போட்டிக்கு ஆளில்லாத காரணத்தால் தனிக்காட்டு ராஜவாக மாறும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்...!

கவாஸாகியின் இசட்எக்ஸ்-10ஆர் மாடல் பைக்கின் மினி மாடலாக இசட்எக்ஸ்-6ஆர் பைக்கை கவாஸாகி சந்தையில் அறிமுகம் செய்தது. இதற்கான முன்பதிவு கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட நிலையில், இதற்கான வரவேற்பு அமோக அமைந்துள்ளது. மேலும், இது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள ஒரே சூப்பர் ஸ்போர்ட் ரக பைக் மாடல் என்பதால், வாகன ஓட்டிகள் இதன்மீது அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

போட்டிக்கு ஆளில்லாத காரணத்தால் தனிக்காட்டு ராஜவாக மாறும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்...!

அதன்படி, கவாஸாகி பைக்கின் லைன்அப்பில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளில் இரண்டாவது இடத்தை இசட்எக்ஸ்-6ஆர் பைக் பிடித்துள்ளது. இதற்கு காரணம், சூப்பர் ஸ்போர்ட் மாடலில் வெளிவந்துள்ள இந்த பைக்கிற்கு போட்டியாக வேறெந்த பைக்கும் கலத்தில் இல்லாமல் இருப்பதும் ஓர் காரணம். அதுமட்டுமின்றி, இதன் ஸ்டைலான தோற்றம், பவர்ஃபுல் எஞ்ஜின், தொழில்நுட்பங்கள் ஆகியவையும் காரணமாக இருக்கின்றன.

போட்டிக்கு ஆளில்லாத காரணத்தால் தனிக்காட்டு ராஜவாக மாறும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்...!

இசட்எக்ஸ்-6ஆர் பைக் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 47 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. கவாஸாகி நிறுவனம், நிஞ்சா 300 பைக்கை இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்ய கடந்த ஆண்டு திட்டமிட்டது. அதன்படி, உள்ளூரிலேயே வைத்து அசெம்பிள் செய்யப்பட்டதால், நிஞ்சாவின் விலை கணிசமாகக் குறைந்தது. இதனால், அதன் விற்பனையும் சற்று குறைத்து விற்பனைச் செய்யப்பட்டது. இதனால், நிஞ்சா 300 மாடல் 135 யூன்ட்களை இதுவரை விற்பனைச் செய்துள்ளன.

போட்டிக்கு ஆளில்லாத காரணத்தால் தனிக்காட்டு ராஜவாக மாறும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்...!

இதைத்தொடர்ந்து, 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இசட்எக்ஸ்-6ஆர் பைக் அதிகம் விற்பனையாகி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 636 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரையும், 70.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

போட்டிக்கு ஆளில்லாத காரணத்தால் தனிக்காட்டு ராஜவாக மாறும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்...!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்சிடி திரையுடன் கூடிய ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ள்ஸ்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு வசதியாக கவாஸாகியின் இன்டலிஜென்ட் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட இதில் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இசட்எக்ஸ்-6ஆர் பைக்கானது ரூ.10.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki’s ZX-6R Bike Becomes Second Best Selling Motorcycle In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X