எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை உறுதிப்படுத்தியது கவாஸாகி!

இத்தாலியில் நடந்து வரும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் நடந்த நிகழ்ச்சியின்போது, புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை தயாரித்து வருவதாக கவாஸாகி தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை உறுதிப்படுத்தியது கவாஸாகி!

பிரிமீயம் ரக பைக் தயாரிப்பில் ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் உலக அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில், தற்போது மாசு உமிழ்வு பிரச்னையால் மின்சார வாகனங்களுக்கான மவுசு கூடி வருகிறது.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை உறுதிப்படுத்தியது கவாஸாகி!

இந்த சந்தையின் வர்த்தகம் வலுப்பெற துவங்கி இருப்பதையடுத்து, இந்த சந்தையில் வாகன நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. அந்த வகையில், கவாஸாகி நிறுவனமும் புதிய எலெக்ட்ரிக் பைக் தயாரிப்புப் பணிகளை துவங்கி இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை உறுதிப்படுத்தியது கவாஸாகி!

பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், கவாஸாகி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது நின்ஜா 300 பைக்கின் மின்சார மாடலாக உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை உறுதிப்படுத்தியது கவாஸாகி!

இதனை நடைமுறை பயன்பாட்டு அம்சங்களுடன் மேம்படுத்துவதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பைக்கின் முக்கிய விபரங்கள் எதையும் கவாஸாகி வெளியிடவில்லை. ஆனால், இது நடுத்தர எடை பிரிவு பைக் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்படும் என்று தெரிகிறது.

MOST READ: பெட்ரோலை விட செலவு குறைவுதான்... ஆனாலும் பைக்கில் டீசல் இன்ஜின் வழங்க மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

பொதுவாக மின்சார பைக் மாடல்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்துடன் வரும் நிலையில், கவாஸாகியின் எலெக்ட்ரிக் பைக் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கின் மின் மோட்டார் அதிசெயல்திறன் மிக்கதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை உறுதிப்படுத்தியது கவாஸாகி!

இந்த பைக்கில் பயன்படுத்தப்படும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. படிப்படியாக பேட்டரியின் திறன் மேம்படுத்தப்பட்டு கூடுதல் பயண தூரத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

MOST READ: பள்ளி குழந்தைகள் உயிருடன் விளையாடிய ஆட்டோ டிரைவர்களுக்கு ஆப்பு... தமிழக போலீஸ் செய்த அதிரடி இதுதான்

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை உறுதிப்படுத்தியது கவாஸாகி!

இந்த பைக்கை மிக விரைவில் பொது பார்வைக்கு கொண்டு வருவதற்கும் கவாஸாகி திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு வாக்கில் கவாஸாகியின் இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கை பைக் பிரியர்கள் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawaski has confirmed that they are working on with all new electric bike and it will be revealed soon globally.
Story first published: Friday, November 8, 2019, 18:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X