கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....

கேடிஎம் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான தகவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறு, அந்த நிறுவனம் அதிர்ச்சியை ஏற்படுத்துவது, கடந்த மூன்று மாதங்களில் இது மூன்றாவது முறையாகும். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....!

கேடிஎம் நிறுவனம், அதன் 125 ட்யூக் பைக்கின் விலையை ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் விலையை கடந்த மூன்று மாதங்களில் இதுவரை மூன்று முறை உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன்காரணமாக, தற்போது இந்த பைக் டெல்லி எக்ஸ்-ஷோரூமில் ரூ. 1.30 லட்சத்திற்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....!

ஸ்போர்ட் ரக பைக் தயாரிப்பிற்கு பெயர் போன நிறுவனம்தான் கேடிஎம். ஆஸ்திரிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், இந்தியாவில் அதன் ஸ்போர்ட்ஸ் ரக பைக்கின் மூலம் புயலை வீசிக்கொண்டு வருகிறது என்றே கூறலாம்.

கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....!

அந்த வகையில், புரட்சியைச் செய்த மாடலாக ட்யூக் 125 பைக் உள்ளது. இந்த பைக்கினை ட்யூக் வரிசையிலேயே விலை குறைவான மாடலாகவும், அதேசமயம், என்ட்ரி லெவல் மாடலாகவும் 125 ட்யூக் பைக்கினை அந்த நிறுவனம் கடந்த வருடம் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.

கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....!

இதன் எஞ்ஜின் சக்தியானது, மற்ற ட்யூக் பைக்குகளைக் காட்டிலும் குறைவானதாக இருந்தாலும், ஸ்டைல் மற்றும் லுக்கில் படுஜோராக இருக்கின்றது. இதன்காரணமாக, இந்திய இளைஞர்கள் மத்தியில் கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு, இந்த பைக் மலிவான விலையில் களமிறங்கியதும் ஓர் முக்கிய காரணமாகும்.

கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....!

அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 125 ட்யூக் பைக் மட்டுமே 3,014 யூனிட்கள் விற்பனைச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, மார்ச் மாதம் 3,069 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இவ்வாறு, கடந்த மாதங்களிலும் இந்த பைக்கிற்கான வரவேற்பு மிகச் சிறப்பாக கிடைத்துள்ளது.

கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....!

இந்த நிலையில், கேடிஎம் நிறுவனம், 125 ட்யூக் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அதன் விலையைத் தொடர்ச்சியாக உயர்த்தி அறிவித்து வருகின்றது. அவ்வாறு, கடந்த மார்ச் மாதத்தின்போது, ரூ. 6,835 அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 250 உயர்த்தப்பட்டது.

கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....!

இந்நிலையில், மூன்றாவது முறையாக 125 ட்யூக் பைக்கின்மீது கூடுதலாக ரூ. 5,000 மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கை கேடிஎம் நிறுவனம் ரூ. 1.18 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. ஆனால், தற்போது இந்த பைக் ரூ. 1.30 லட்சமாக உயர்வடைந்துள்ளது.

கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....!

கேடிஎம் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கையால் அதன் ரசிகர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிறுவனம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அதன் விலையை உயர்த்தியிருப்பதே அதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....!

இந்த பைக்கில் இருக்கும் 124.7 சிசி எஞ்ஜின் அதிகபட்சமாக 14.3 பிஎச்பி பவரையும், 12என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைப் பெற்றுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் சக்தி குறைவானதாக இருந்தாலும், உருவத்திலும், டிசைனிலும் கேடிஎம் 200 ட்யூக் பைக்கிற்கு ஒத்ததாக இருக்கின்றது.

கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....!

அதற்கேற்ப, இந்த பைக்கில் கவர்ச்சியான ட்ரெல்லிஸ் ஃப்ரேம்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சிறப்பான சஸ்பென்ஷனுக்காக, முன்புறத்தில் இன்வர்டெட் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 10 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளன.

கேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....!

மேலும், பாதுகாப்பு வசதியாக, முன்சக்கரத்தில் 300mm டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230mm டிஸ்க் பிரேக்கும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலையுயர்வானது, கேடிஎம் ட்யூக் 125 பைக்கினை புதிய வரவாக இருக்கும் யமஹா எம்டி15 பைக்கிற்கு கொண்டுச் சென்றுள்ளது. இந்த பைக் ரூ. 1.36 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது.

source: bikewale

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 125 Duke Price Increased Third Time In India. Read In Tamil.
Story first published: Wednesday, June 5, 2019, 9:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X