கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகத்தை தொடர்ந்து, 250 அட்வென்ச்சர் பைக் மாடலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு மாடல்களும் அடுத்த மாதம் இந்தியாவில் வர இருக்கின்றன. ஏற்கனவே, 390 அட்வென்ச்சர் தகவல்களை நாம் வழங்கியிருந்த நிலையில், விலை குறைவான இந்த புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் சிறப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலானது இத்தாலியில் நடந்து வரும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சி மூலமாக வெளியிடப்பட்ட நிலையில், இந்த புதிய 250 அட்வென்ச்சர் மாடலான கேடிஎம் இணையதளம் மூலமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் டிசைன் அம்சங்களுடன் இந்த புதிய 250 அட்வென்ச்சர் பைக் மாடலும் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விலை குறைப்புக்காக சில முக்கிய அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகளுக்கு பதிலாக ஹாலஜன் பல்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் இருக்கும் அதே எஞ்சின்தான் இந்த புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் இருக்கும் 249 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 30 எச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் WP நிறுவனத்தின் 43 மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் விசேஷ சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 170 மிமீ லாங் டிராவல் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 177 மிமீ டிராவல் கொண்ட சஸ்பென்ஷனும் உள்ளன.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

சஸ்பென்ஷன் போன்று இந்த பைக்கின் க்ரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் 250 ட்யூக் பைக்கைவிட இந்த 250 அட்வென்ச்சர் மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 15 மிமீ கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இருக்கை உயரம் 855 மிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முன்புறத்தில் பெரிய விட்டமுடைய சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முன்புற ஃபோர்க்குகள் மற்றும் சக்கரம் உள்ளடக்கிய ரேக் ஆங்கிள் எனப்படும் சாய்மான கோணம் 63.5 டிகிரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் 146 கிலோ எடை கெண்டது. 250 ட்யூக் பைக்கைவிட 10 கிலோ கூடுதல் எடை கொண்டது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இறுக்கும். இந்த பைக்கின் இரு சக்கரங்களிலும் எம்ஆர்எஃப் மோக்ரிப் மிட்டியோர் எஃப்எம்-2 டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்சக்கரம் 19 அங்குல விட்டமும், பின்சக்கரம் 17 அங்குல விட்டமும் கொண்டவை.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் இருப்பது போலவே இந்த மாடலிலும் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. புளூடூத் இணைப்பு மூலமாக ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்துக் கொள்ள முடியும். சார்ஜர் பாயிண்ட், அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையில் விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் இருக்கும் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், பெட்டல் டிஸ்க் பிரேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல், பிரிமீயம் டயர்கள் மற்றும் அட்ஜெஸ்ட்டபிள் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த புதிய 250 அட்வென்ச்சர் பைக்கில் இல்லை.

அடுத்த மாதம் 6ந் தேதி கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய பைக் வீக் திருவிழாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் 250 அட்வென்ச்சர் பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த பைக்குகளில் பிஎஸ்-6 எஞ்சின் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் ரூ.3 லட்சத்தில் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புதிய 250 அட்வென்ச்சர் ரூ.2.20 லட்சம் விலையில் வரும் வாய்ப்புகள் உள்ளன. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Via- Zigwheels

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Austrian bike maker, KTM has officially revealed 250 Adventure bike on its website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X