நியூ கேடிஎம் 250 அட்வென்ஜர் சோதனை ஓட்டம்... டிசம்பரில் அறிமுகம்

கேடிஎம் நிறுவனத்தின் 250 அட்வென்ஜர் மாடல் பைக் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை பைக்கின் தோற்றங்கள் மிக தெளிவாக புலப்படுகின்றன.

நியூ கேடிஎம் 250 அட்வென்ஜர் சோதனை ஓட்டம்... டிசம்பரில் அறிமுகம்

இந்த ஸ்பை புகைப்படங்களின் மூலம் கேடிஎம் நிறுவனம் 250 அட்வென்ஜர் மாடலுக்கு 250 ட்யூக்கில் உள்ள அதே ஹாலோஜன் ஹெட்லைட் அமைப்பை கொடுத்துள்ளது தெரிகிறது. மேலும் இந்த ஹெட்லைட்டை சுற்றிலும் மாஸ்க் போன்ற பாகம் ஒன்று 250 ட்யூக்கை விட கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

நியூ கேடிஎம் 250 அட்வென்ஜர் சோதனை ஓட்டம்... டிசம்பரில் அறிமுகம்

இதே ஹெட்லைட் அமைப்பு தான் 390 அட்வென்ஜர் பைக்கிலும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த பைக்கில் காற்றின் வேகம் ஓட்டுபவரின் மீது மோதாமல் இருக்க கண்ணாடி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கண்ணாடி அமைப்பு இந்த சோதனை ஓட்டத்தில் பயன்படுத்தப்படவில்லை.

நியூ கேடிஎம் 250 அட்வென்ஜர் சோதனை ஓட்டம்... டிசம்பரில் அறிமுகம்

19 இன்ச்சில் முன்புற சக்கரம், இதை விட 2 இன்ச் குறைவாக 17 இன்ச்சில் பின்புற சக்கரம், கூடுதல் டிசைனில் எரிபொருள் டேங்க், இரண்டாக பிளவுப்பட்ட இருக்கை போன்றவை இந்த 250 அட்வென்ஜரில் உள்ள சிறப்பம்சங்களாகும்.

விபத்திலிருந்து பாதுகாக்கும் பாகம் மற்றும் பொருட்களை வைத்து செல்ல பயன்படும் பின்புற பெட்டி போன்றவை அப்படியே 390 அட்வென்ஜர் பைக்கில் உள்ள அதே டிசைனில் இந்த பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

முந்தைய சோதனை ஓட்டத்தில், பைக்கில் டிஎஃப்டி ஸ்டைலில் வேகம், பெட்ரோலின் அளவு உள்ளிட்ட தகவல்களை காட்டும் திரை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சோதனை ஓட்டத்தில் 250 ட்யூக்கில் உள்ள எல்சிடி திரை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேடிஎம் நிறுவனம் திரையின் அமைப்பில் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட புதிய மாற்றங்களை கண்டிப்பாக செய்திருக்க கூடும்.

நியூ கேடிஎம் 250 அட்வென்ஜர் சோதனை ஓட்டம்... டிசம்பரில் அறிமுகம்

250 அட்வென்ஜரின் என்ஜினை பொறுத்த வரையில் 250 ட்யூக்கில் உள்ள சிங்கிள் சிலிண்டர் அமைப்பை கொண்ட 248.8சிசி லிக்யூடு-கூல்டு என்ஜினையே கொண்டுள்ளது. ஆனால் என்ன, 250 ட்யூக்கில் பிஎஸ்4 தரத்தில் என்ஜின் உள்ளது. இந்த பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 250 ட்யூக்கின் பிஎஸ்4 என்ஜின், 30 பிஎச்பி பவரையும் 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

250 அட்வென்ஜரில் ப்ரேக்கிங் வேலையை, முன்புற சக்கரத்தில் அதன் ஆரத்துடன் பொருத்தப்பட்ட நான்கு-பிஸ்டன் அமைப்புடன் கூடிய 300 மிமீ சிங்கிள் டிஸ்க்கும் பின்புற சக்கரத்தில், சக்கரத்துடன் சுழலும் விதத்தில் பொருத்தப்பட்ட ஒற்றை பிஸ்டன் அமைப்புடன் கூடிய 230 மிமீ சிங்கிள் டிஸ்க்கும் கவனிக்கின்றன.

நியூ கேடிஎம் 250 அட்வென்ஜர் சோதனை ஓட்டம்... டிசம்பரில் அறிமுகம்

பாதுகாப்பு அமைப்பாக எப்போதும் கொடுக்கப்படும் டுயூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்புடன் 250 அட்வென்ஜரில் புதியதாக சூப்பர்மோட்டோ முறையில் பின்புற சக்கரத்திற்கும் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முன் சக்கரத்திற்கு 43 மிமீ தலைக்கீழான டெலிஸ்கோப் ஃபோர்க்ஸும் பின் சக்கரத்திற்கு அட்ஜெஸ்ட் செய்யம் வகையிலான மோனோ-ஷாக்கும் சஸ்பென்ஷன் பாகங்களாக இந்த பைக்கில் உள்ளன.

390 அட்வென்ஜரை விட குறைவான விலையில் தான் இந்த பைக் விற்கப்படும் என தெரிகிறது. நமக்கு தெரிந்த வரையில் 250 அட்வென்ஜரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.2.8 லட்சம் வரை விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் அறிமுகம் இதன் அட்வான்ஸ் மாடலான 390 அட்வென்ஜருடன் வருகிற டிசம்பர் மாதத்தில் நடைபெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 250 Adventure Spied Testing Ahead Of December Launch: Spy Pics & Details
Story first published: Thursday, October 24, 2019, 15:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X