கேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...?

கேடிஎம் நிறுவனத்தின் 390 அட்வென்சர் வருகின்ற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...?

கேடிஎம் நிறுவனம் அதன் 390 அட்வென்சர் மாடலை வருகின்ற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புத்தம் புதிய மாடல் முதலில் இந்தியச் சந்தையிலேயே விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது. ஆகையால், கேடிஎம்மின் 390 பைக்கைப் பெறும் முதல் நாடாக இந்தியா இருக்கின்றது. இந்திய இளைஞர்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது வைத்துள்ள அதிக ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு கேடிஎம் நிறுவனம் இந்த சிறப்பான சம்பவத்தை நிகழ்த்த உள்ளது.

கேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...?

அதேசமயம், அதன் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் மாதத்தின் விருந்தளிக்கும் விதமாகவும் இதனை களமிறக்க இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, கேடிஎம் 390 மாடலின் உற்பத்தி மாடலை அந்நிறுவனம், வருகின்ற நவம்பர் மாதம் இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கேடிஎம்மின் இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அதற்கு, அதன் துடிப்பான ஸ்டைலும், எஞ்ஜின் திறனும்தான் முக்கிய காரணமாக இருக்கின்றது.

கேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...?

இந்த பைக், இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தகுந்தது. கேடிஎம் நிறுவனத்தின் பைக்குகள் இந்தியச் சந்தையில் பிரபலமடைய அதன் இஞ்ஜினியரிங் வேலைப்பாடும், சிறப்பான தோற்றமுமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த நிறுவனம், இந்தியர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, விலைக்கேற்ற ரகத்தில் அதிக திறன் கொண்ட பைக்குகளைக் களமிறக்குவதும் ஓர் காரணமாக இருக்கின்றது.

கேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...?

கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு இந்தியச் சந்தையில் கிடைத்த வரவேற்பை அடுத்து அந்த நிறுவனம், ட்யூக் 390 பைக்கை களமிறக்கியது. தொடர்ந்து, ஆர்சி200 மற்றும் ஆர்சி390 மாடல்களும் களமிறக்கப்பட்டன. பின்னர், ட்யூக் 250 களமிறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சமீபகாலத்திற்கு முன்னர் 125 சிசி சந்தையையும் கைப்பற்றும்விதமாக, ட்யூக் 125 மற்றும் ஆர்சி 125 மாடல்கள் இந்தியாவில் களமிறக்கப்பட்டன.

கேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...?

தொடர்ச்சியாக களமிறக்கப்பட்ட அனைத்து மாடல் பைக்குகளும் இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதன்காரணமாக, அதன் சந்தையை மேலும் விரிவாக்கம் செய்யும் விதமாக, கேடிஎம் நிறுவனம் அட்வென்சர் ரகத்திலான 390 மாடலையும் இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு வருகின்றது. அதேசமயம், இந்த மோட்டார்சைக்கிளுக்கு கடந்த 2014ம் ஆண்டு முதல் சந்தையில் எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது.

கேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...?

இந்நிலையில்தான், கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்சர் மாடலை வருகின்ற டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக பைக்வேல் ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால், நீண்ட காலமாக இந்த பைக்கை எதிர்பார்த்து வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

கேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...?

இந்த அட்வென்சர் 390 பைக்கில் 373.2 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்படவுள்ளது. இதே எஞ்ஜின்தான் ட்யூக் 390 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது, தற்போது 44 எச்பி பவர் மற்றும் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன்-அப்பைப் பெற்றுள்ளது. ஆனால், 390 அட்வென்சர் பைக்கில் சற்று மாறுதலைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...?

முன்னதாக இந்த கேடிஎம் 390 அட்வென்சர் மாடல் குறித்த ஸ்பை படங்கள் வெளியாகின. இந்த படங்கள், இந்தியாவில் சாலைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்டவையாகும். மேலும், இந்த புகைப்படங்கள் மூலம், பைக்குறித்த சில தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, இந்த பைக்கில் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக மவுண்ட் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆகையால், இந்த பைக் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்பவாறு தயார் செய்யப்பட்டிருப்பது உறுதியாகியது.

கேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...?

இந்த புத்தம் புதிய அட்வென்சர் 390 பைக்கின் பெட்ரோல் டேங்க் ட்யூக் 390 பைக்கைக் காட்டிலும் பெரியதாக இருப்பதைப்போன்று காட்சியை நமக்கு வழங்குகின்றது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளை ஆன்/ஆஃப் செய்யும் ஸ்லாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்குக் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் எக்ஸ்-ஷோரூமில் ரூ.3 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பைக் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மற்றும் கவாஸகி வெர்சிஸ் எக்ஸ்300 ஆகியவற்றுடன் போட்டியிடும்.

Image source: gaadiwaadi

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 390 Adventure To Be Launched In December 2019; India Becomes First Market To Receive It. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X