புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படம்!

கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் டூரர் பைக் சோதனை ஓட்டத்தின்போது மீண்டும் கேமரா கண்களில் சிக்கி இருக்கிறது.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படம்!

கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் மற்றும் ஆர்சி வகை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்கள் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. ட்யூக் பைக் நேக்கட் என்ற டிசைன் அம்சங்களையும், ஆர்சி வரிசை மாடல்கள் ஸ்போர்ட்ஸ் ரகத்திலும் டிசைன் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படம்!

இந்த நிலையில், அட்வென்ச்சர் டூரர் வகையில் முதல் பைக் மாடலை கேடிஎம் விரைவில் களமிறக்க உள்ளது. கேடிஎம் ட்யூக் 390 அடிப்படையிலான இந்த புதிய மாடல் தற்போது தீவிரமான சாலை சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படம்!

அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வரும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படம் ஒன்றை த்ரஸ்ட்ஸோன் தளம் வெளியிட்டு இருக்கிறது.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படம்!

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகள் இடம்பெற்றுள்ளன. முன்புற ஹெட்லைட் க்ளஸ்ட்டருடன் சேர்ந்த பெரிய விண்ட்ஸ்கிரீன், எஞ்சின் கவர், வசதியான இருக்கை அமைப்பு, கேரியர் என்று இந்த பட்டியல் நீள்கிறது. முன்புறத்தில் லாங் டிராவல் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படம்!

இந்த பைக் சிறந்த ரைடிங் பொசிஷனை வழங்குகிறது. இதனால், நீண்ட தூர பயணங்கள் மற்றும் ஆஃப்ரோடு பயணங்களின்போது எளிதாக இந்த பைக்கை கையாள்வதற்கு இந்த ரைடிங் பொசிஷன் சிறப்பானதாக இருக்கும்.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படம்!

கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 373.3 சிசி எஞ்சின்தான் புதிய அட்வென்ச்சர் டூரர் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகப்டமாக 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படம்!

அதேநேரத்தில், பவரை வெளிப்படுத்தும் விதம் மற்றும் கியர் ரேஷியோவில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப மற்றும் நடுத்தர நிலையில் அதிக டார்க் திறனை வழங்கும் விதத்தில் இருக்கிறது. இதனால், நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக இதன் கியர்பாக்ஸ் இயக்கம் இருக்கிறது.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படம்!

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் உள்ளது.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படம்!

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் டூரர் பைக் கூடிய விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், பிஎம்டபிள்யூ 310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். ரூ.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் என்று தெரிகிறது.

Source: Thrustzone

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Ahead of its expected launch in India, the KTM 390 Adventure has been spied testing multiple times in the country. Now, a fresh spy image from Thrustzone, reveals new details of the upcoming KTM 390 Adventure.
Story first published: Friday, March 22, 2019, 12:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X