நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக் அறிமுக நிகழ்விலிருந்து பிரத்யேக படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

கோவாவில் நடந்து வரும் இந்திய பைக் வீக் திருவிழாவில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகமானது. மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பைக் ஒருவழியாக பொது பார்வைக்கு வந்து இந்தியர்களின் கண்களை நேரடியாக குளிர்வித்தது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் அடிப்படையிலான அட்வென்ச்சர் டூரர் ரக மாடலாக இந்த பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் டிசைன் சாகச பிரியர்களை கவரும் அத்துனை அம்சங்களையும் பெற்றிருக்கிறது. தோற்றத்தில் மிரட்டலாக இருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

கோப பாவனையுடன் கூடிய ஹெட்லைட் அமைப்பு, கூர்மையான பெட்ரோல் டேங்க் ஸ்கூப் மற்றும் வால் பகுதி ஆகியவ இந்த பைக்கை பிற கேடிஎம் மாடல்களிலிருந்து தனித்துவப்படுத்துகிறது. இந்த பைக்கின் முன்புறத்தில் இன்வெர்டெட் வகை ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சாபர்பரும் உள்ளன.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

முன்புற ஃபோர்க்குகள் 170 மிமீ அளவுக்கு மேலும், கீழுமாக நகரும் அமைப்புடனும், பின்புற சஸ்பென்ஷன் 178 மிமீ வரை நகரும் அமைப்பையும் பெற்றிருக்கின்றன. இதனால், ஆஃப்ரோடு பயன்பாட்டின்போது மிகச் சிறப்பானதாக இருக்கும்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

அதேபோன்று, இந்த பைக்கின் முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், 130/80 டயரும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும், 100/90 டயரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் இருக்கும் அதே 373 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் இந்த பைக்கிலும் உள்ளது. இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 42 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், அட்வென்ச்சர் டூரர் வகை பைக் என்பதற்காக, எஞ்சின் செயல்திறனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், சுவிட்சபிள் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் ஆஃப்ரோடு ரைடிங் மோடுகள் என பல்வேறு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களை பெற்றிருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

கேடிஎம் 390 ட்யூக் பைக்கைவிட இந்த பைக் இருக்கை உயரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, தரையிலிருந்து இருக்கை 855 மிமீ உயரத்தில் இருக்கிறது. இந்த பைக்கில் 14.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த பைக்கின் வீல் பேஸ் 1,430 மிமீ ஆகவும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 200 மிமீ ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, நீளத்திலும் சற்று இந்த பைக் கூடுதலாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாக கூறலாம்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

வரும் ஜனவரியில் இந்த பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுவதுடன், பிஎஸ்-6 எஞ்சினுடன் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இந்த புதிதய பைக் மாடலுக்கு விரைவில் முன்பதிவு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
KTM India has unveiled the 390 Adventure in the Indian market. The 2020 KTM 390 Adventure was first showcased at EICMA earlier this year and has finally made its much-awaited India debut at India Bike Week, held in Goa.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X