கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்திய அறிமுக விபரம்!

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் செய்யப்படாது என்று தகவல்கள் வெளியான நிலையில், இந்த புதிய மாடலின் இந்திய வருகை குறித்த புதிய செய்தி வெளியாகி இருக்கிறது.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்திய அறிமுக விபரம்!

கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் மற்றும் ஆர்சி வரிசை மாடல்களுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், கேடிஎம் நிறுவனத்தின் சாகசப் பயண வகையை சேர்ந்த அட்வென்ச்சர் வரிசை மாடல்கள் இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்திய அறிமுக விபரம்!

அந்த வகையில், கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடல் வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த நிலையில், அதன் சக்திவாய்ந்தா 790 அட்வென்ச்சர் மாடலானது அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்திய அறிமுக விபரம்!

அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் அடிப்படையிலான சாகசப் பயணத்திற்கான சிறப்பம்சங்களுடன் மாறுதல்கள் செய்யப்பட்ட மாடலாக 790 அட்வென்ச்சர் இருக்கும்.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்திய அறிமுக விபரம்!

கேடிஎம் 790 ட்யூக் பைக் போட்டியாளர்களைவிட விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்கு ஈடான தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. மேலும், கேடிஎம் 790 ட்யூக் பைக்கைவிட அதன் அட்வென்ச்சர் மாடலின் விலையானது 20 சதவீதம் வரை கூடுதலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. இதனால், ரூ.10 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்திய அறிமுக விபரம்!

இந்த பைக்கில் 799 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 94 எச்பி பவரையும், 88 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கின் முன்புறத்தில் 21 அங்குல சக்கரம் பொருத்தப்பட்டு இருக்கும்.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்திய அறிமுக விபரம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 48 மிமீ லாங் டிரால் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷன் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று, முன்புறத்தில் 320 மிமீ விட்டமுடைய டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றிருக்கும்.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்திய அறிமுக விபரம்!

இந்த பைக்கில் 20 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேஙஹ்க் இடம்பெற்றுள்ளது. 189 கிலோ எடை கொண்டது. இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 263 மிமீ ஆக உள்ளது. இருக்கை உயரம், 880 மிமீ என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கேடிஎம் 790 அட்வென்ச்சர் ஆர் என்ற அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்ரபார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Austrian premium bike manufacturer, KTM is planning to launch the 790 Adventure in India by next year.
Story first published: Tuesday, October 8, 2019, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X