கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல்முறையாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிரத்யேக படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்

கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் மற்றும் ஆர்சி ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அட்வென்ச்சர் டூரர் எனப்படும் நீண்ட தூர பிரயாணத்திற்கு ஏற்ற சாகச ரக பைக்குகளை இந்தியாவில் களமிறக்க கேடிஎம் திட்டமிட்டுள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் 250, 390 ஆகிய இரண்டு அட்வென்ச்சர் ரக மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்

இந்த நிலையில், கோவாவில் நடந்து வரும் இந்திய பைக் வீக் திருவிழாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகமாகவில்லை. எனினும், அட்வெந்ச்சர் வரிசையில் 790 பைக் மாடலை கேடிஎம் காட்சிப்படுத்தி இருக்கிறது.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்

இதனால், இந்த பைக் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற ஆவல் எழுந்துள்ளது. அண்மையில் ட்யூக் 790 பைக் மாடலை இந்தியாவில் கேடிஎம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதே மார்க்கெட்டில் இந்த புதிய பைக் மாடலுடன் கூடுதல் தேர்வை வாடிக்கையாளர்களுக்கு கேடிஎம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்

கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் இருக்கும் அதே பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 799 சிசி எஞ்சின்தான் இந்த புதிய பைக்கிலும் பயன்படுத்தப்படும். கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் இருக்கும் இந்த எஞ்சின் 103 பிஎச்பி பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்

ஆனால், புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு, இந்த எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 88 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் 189 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கில் டபிள்யூபி நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் மாடலானது ஸ்டான்டர்டு மற்றும் ஆர் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கும். அதாவது, கூடுதல் ஆக்சஸெரீகள், தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்து இந்த பைக் இரண்டு வகைகளில் வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு வழங்கப்படும் வாய்ப்புள்ளது. டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்ட்ரீட், ஆஃப்ரோடு, ரெயின் மற்றும் ராலி ஆகிய ரைடிங் மோடுகள் உள்ளன.

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் மாடலானது முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.11 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய பைக் மாடலை கேடிஎம் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM India has showcased the 790 Adventure at India Bike Week 2019. The 790 Adventure is one of the most-awaited KTM models in India. It is a mid-weight adventure-tourer that is capable of munching miles and crossing states and countries without bothering about the road conditions.
Story first published: Saturday, December 7, 2019, 17:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X