கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா?

இந்தியாவில் கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக வெளியானத் தகவலில் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.

 கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா?

கேடிஎம் நிறுவனம் புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், அடுத்த மாதம் தனது சக்திவாய்ந்த 790 ட்யூக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த பைக் டீலர்ஷிப்புகளை வந்தடைந்தது குறித்த பிரத்யேக படங்களையும் அண்மையில் பகிரந்து கொண்டோம்.

 கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா?

இந்த நிலையில், 790 ட்யூக் பைக்கின் அடிப்படையிலான அட்வென்ச்சர் பைக் மாடலையும் இந்தியாவில் கேடிஎம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

 கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா?

இந்த நிலையில், சில இணையதளங்களில் கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் மாடல் இந்தியாவில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

 கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா?

ஸ்பை படங்களில் இருக்கும் கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கான பதிவு எண் பலகை பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்படவில்லை.

 கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா?

மாறாக, ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரை சேர்ந்த ஃப்ளோரன் மற்றும் ரோஹன் என்ற இரு இளைஞர்கள் கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கில் சிங்கப்பூருக்கு சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளனர். மொத்தம் 245 நாட்கள் பயணத் திட்டத்துடன் 20 நாடுகளை கடந்து 30,000 கிலோமீட்டர் தூரம் வரை பயண இலக்காக கொண்டு பயணித்து வருகின்றனர்.

 கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா?

இவர்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் வழியாக, பாகிஸ்தான், இந்தியா வழியாக சிங்கப்பூர் செல்கின்றனர். இந்தியா வழியாக அவர்கள் செல்லும்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் தற்போது அந்த பைக் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக தவறாக வெளியாகி இருக்கிறது.

 கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா?

கேடிஎம் 790 பைக் இந்திய இளைஞர்களால் அதிகம் எதிர்பார்க்கும் மாடல்தான். மிக அட்டகாசமான ஸ்டைலில் இந்திய இளைஞர்களை கவரும் அத்துனை அம்சங்களையும் பெற்றிருக்கிறது.கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில்தான் இந்த புதிய 790 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

 கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா?

வெளிநாடுகளில் இந்த புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் ஸ்டான்டர்டு, 790 அட்வென்ச்சர் ஆர் மற்றும் ஆர் ராலி ஆகிய மூன்று விதமான வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

 கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா?

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 799 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 88 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது.

 கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா?

இந்த பைக் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டான்டர்டு மாடலில் சாதாரண முன்புற ஃபென்டர் மற்றும் ஸ்பிளிட் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆர் வேரியண்ட்டில் ராலி பந்நதயங்களுக்கு ஏற்ற உயர்த்தப்பட்ட ஃபென்டர் அமைப்பு, ஒற்றை இருக்கை அமைப்பை பெற்றிருக்கும். டக்கார் ராலி பந்தயங்களில் பயன்படுத்தப்படும் பைக் மாடல்களை போன்று இந்த பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
A fake news has been surfaces online regarding KTM 790 adventure bike is testing in India. Here is the truth behind that story.
Story first published: Thursday, August 29, 2019, 19:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X