இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

கேடிஎம் நிறுவனம் இந்திய இளைஞர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இருசக்கர வாகனங்களில், கேடிஎம் நிறுவனத்தின் பைக்குகளும் ஒன்றாக இருக்கின்றது. இந்நிறுவனம், பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் ரக பைக் பிரியர்களைக் கவரும் வகையிலேயே அதன் பைக்குகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

அந்த வகையில், இதுவரை 125 சிசி முதல் 373 சிசி வரையிலான எஞ்ஜின் திறனைக் கொண்ட பைக்குகளை அந்தநிறுவனம் களமிறக்கி வருகின்றது. இந்நிலையில், கேடிஎம் நிறுவனம் அதன் பவர்ஃபுல் பைக்கான கேடிஎம் 790 ட்யூக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வமாக பைக் குறித்த டீசர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. ஆகையால், இந்த பைக் மிக விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் அறிமுகத்தை ஒத்தி வைத்திருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், இதன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தன இந்திய இளைஞர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இவ்வாறு, கேடிஎம் நிறுவனம், 790 ட்யூக்கின் அறிமுகத்தை தள்ளி வைப்பது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

இதேபோன்று, இரண்டு முறைக்கும் மேலாக அந்த நிறுவனம் அறிமுகத்தை மாற்றி அறிவித்து உள்ளது. கேடிஎம் அதிக சக்தி வாய்ந்த இந்த பைக்கிற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஆனால், இதன்மீது பெருத்த எதிர்பார்ப்பை வைத்திருக்கும் இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில், கேடிஎம் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

இதுகுறித்த ஆட்டோகார் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கேடிஎம் நிறுவனத்தின் நடுத்தர எடைக் கொண்ட ஸ்ட்ரீட்ஃபைட்டர் மோட்டார்சைக்கிளின் அறிமுகம் வருகின்ற 2020ம் ஆண்டிற்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

790 ட்யூக் பைக் இந்தியச் சாலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்காத காரணத்தினாலயே, இவ்வாறு தடையைச் சந்தித்து வருவாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இந்தியச் சந்தைக்கு ஏற்றவாறு கேடிஎம் 790 ட்யூக் மாற்றியமைத்த பின்னரே அறிமுகம் செய்யப்படும் சூழலக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் 2020ம் ஆண்டில்தான் களமிறக்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

அதேசமயம், கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது. மேலும், அங்கு நல்ல வரவேற்பை அந்த பைக்குச் சந்தித்து வருகின்றது. இருப்பினும், இந்தியர்கள் இந்த பைக்கைப் பெற இன்னும் நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியுள்ளது.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

நேக்கட் ரகத்தில் இருக்கும் இந்த ஸ்ட்ரீட்பைட்டர் மாடல் மோட்டார்சைக்கிளை அந்த நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்திருந்தது. இந்த மோட்டார்சைக்கிளின் ஸ்டைல் மற்றும் தோற்றம் உள்பட பல்வேறு சிறப்பம்சங்கள் 1290 சூப்பர் ட்யூக் ஆர் பைக்கினை ஒத்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

அவ்வாறு, ஹெட்லைட் மற்றும் டெயில் உள்ளிட்டவை எல்இடி தரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் மற்றும் டிஜிட்டலைஸ்ட் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது, வாகனம் குறித்த பல்வேறு தகவல்களை ரைடருக்கு வழங்கும்.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

இந்த பைக்கில் அதீத திறனை வெளிப்படுத்தும் வகையில், பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 799சிசி லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 87 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இத்துடன் இந்த பைக்கில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

மேலும், மதிப்புகூட்டப்பட்ட வசதிகளாக, குயிக் ஷிஃப்ட் வசதி, டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், பின்னிருக்கை பயணிக்கான ஃபுட் ரெஸ்ட், டிரைவிங் மோடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், பைக்கின் சிறப்பான கட்டுமானத்திற்காக, க்ரோமியம் மற்றும் மாலிபிடினம் உலோகங்களின் கலப்பினாலான ட்யூபிலர் ஃப்ரேமைக் கொண்டு 790 ட்யூக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

கூடுதலாக, பைக்கின் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக, முன்புறத்தில் 43mm அளவு கொண்ட WP அப்சைடு டவுன் ஃபோர்க்கு, பின்புறத்தில் மோனோ சாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பான பிரேகே்கிங் வசதிக்கா, முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் கேலிபர் வசதி கொண்ட 300mm டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் சிங்கிள் பிஸ்டன் ப்ளோடிங் காலிபர் வசதி கொண்ட 240mm டிஸ்க் பிரேக்கும் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன், டியூவல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

இத்தகைய சிறப்பு வசதிகளைக் கொண்ட பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் உள்ள சில கேடிஎம் டீலர்கள் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும், அதற்காக முன் பணமாக ரூ. 30 ஆயிரம் வரை பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, முன் பணம் செலுத்திய அனைவருக்கும் தற்போது அதிர்ச்சி தகவலே காத்திருக்கின்றன.

இந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...!

இந்த புத்தம் புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இந்த பைக் கவாஸாகி இசட்900, டுகாட்டி மான்ஸ்ட்டர் 797, ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் எஸ் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்க இருப்பதால், அதற்கேற்ப விலையிலேயே அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 790 Duke India Launch Postponed To 2020: KTM Cites Homologation Delays. Read In Tamil.
Story first published: Sunday, June 9, 2019, 15:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X