முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்.. அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்?

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கேடிஎம் ட்யூக் 790 பைக்கிற்கான புக்கிங்கை அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள் தொடங்கியுள்ளனர். இதற்கு எவ்வளவு முன் தொகை வசூலிக்கப்படுகின்றது. பைக்கில் என்னவெல்லாம் சிறப்பம்சம் உள்ளது என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்... அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்...?

குறைந்த விலையில் ஸ்போர்ட்ஸ் ரக இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்வதில் கேடிஎம் நிறுவனம், முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிகம் ஆவலை ஏற்படுத்தி வரும் மாடலாக, கேடிஎம் ட்யூக் 790 பைக் தற்போது மாறியுள்ளது.

முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்... அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்...?

இந்த நிலையில், ட்யூக் 790 பைக்கினை ஸ்பை செய்யப்பட்டதாக சில புகைப்படங்கள் அண்மையில் கசிந்தன. அவை, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் எடுக்கப்பட்டவை. அவை, டீலர்கள் ஷோரூமிற்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்... அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்...?

மேலும், கேடிஎம் ட்யூக் 790 பைக்கை கேடிஎம் டீலர்கள் சிலர் வருகின்ற செப்டம்பர் மாதம் 5ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை கேடிஎம் நிறுவனத்தின்மூலம் வெளியிடப்படவில்லை.

முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்... அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்...?

இதைத்தொடர்ந்து, ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் கேடிஎம் ட்யூக் 790 பைக்குகளுக்கான புக்கிங் நடைபெற்று வருவதாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதுவும், கேடிஎம் நிறுவனத்தின்மூலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்... அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்...?

அவசர அவசரமாக இந்த பைக்கின் அறிமுகம் மற்றும் புக்கிங் தொடங்கப்படுவதற்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வரும் எதிர்பார்ப்பே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அத்துடன், கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் 100 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவில் முதற்கட்டமாக களமிறக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இது குறைவான எண்ணிக்கையில் (லிமிடெட் எடிசன்) மட்டுமே விற்பனைச் செய்யப்பட உள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் எதுவும் இல்லை.

முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்... அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்...?

இருப்பினும், ட்யூக் 790 பைக்கின் உற்பத்தியை விரைவில் நிறுத்திவிட்டு, ட்யூக் 890 பைக் தயாரிப்பில் இறங்கவிருப்பதாக கேடிஎம் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கேடிஎம் 790 ட்யூக், நடுத்தர எடைக்கொண்ட ஸ்போர்ட்ஸ் நேக்கட் ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகையில், குறைந்த எடைக் கொண்ட சேஸிஸ் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்... அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்...?

மேலும், இதன் ஒல்லியான தோற்றம், பைக்கை எளிதில் கட்டுபடுத்துவதற்கும், அதிக திறனில் இயக்குவதற்கும் ஏதுவாக இருக்கின்றது.

இத்துடன் சிறப்பு வசதிகளாக, எல்இடி தரத்திலான ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சற்று உயர்த்தப்பட்ட எக்சாஸ்ட் சிஸ்டம் ஸ்போர்ட்டி லுக்கினை சற்று தூக்கலாக காட்டும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்... அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்...?

இவற்றுடன், சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக 43 மிமீ அளவு கொண்ட நான் அட்ஜெஸ்டபிள் யுஎஸ்டி ஃபோர்க் முன்பக்கத்திற்கும், ப்ரீ லோட் மோனோ ஷாக் பின் புறத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்... அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்...?

மேலும், தொழில்நுட்ப வசதிகளாக பன்திறன் கொண்ட டிஎஃப்டி ஸ்கிரீன் மற்றும் சிறப்பான ரைடிங் மோட்கள் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், ட்ராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் ப்ளஸ், மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், சூப்பர் மோட்டோ மற்றும் மோட்டார்சைக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் கொண்ட ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவை இதில் இடம் பெற்றிருக்கின்றது.

முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்... அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்...?

கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் புத்தம் புதிய 790 சிசி திறன் கொண்ட பேரலல் ட்வின் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. லிக்யூடு கூல்டு எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 86 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்... அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்...?

இந்த பைக் இந்தியாவில் ரூ. 8.5 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த பைக் இந்தியாவில் அனைத்து கேடிஎம் ஷோரூம் வாயிலாக விற்பனைச் செய்யப்படப்போவதில்லை. அவை, குறிப்பிட்ட நகரங்களில் செயல்பட்டு வரும் டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனைக்கு வர இருக்கின்றது.

Source: rushlane

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Duke 790 Bookings Open. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X