எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்: ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு

இளைஞர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் இந்திய வருகை குறித்த தகவல் கசிந்துள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்... ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு!

இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்திய கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்த பிரத்யேக தகவலின்படி, "இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் பவுண்டேஷன் (ARAI) கேடிஎம் ட்யூக்790 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்... ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு!

இதனால், கேடிஎம் ட்யூக் 790 பைக் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்நிறுவனம், ஏற்கனவே இந்த பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் நிறைவு செய்தநிலையில், அராய் அமைப்பின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இதன்காரணமாக, அது களமிறங்குவதில் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.

எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்... ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு!

ஆனால், தற்போது இந்த சூழ்நிலை விளகியுள்ளதால், இன்னும் ஒரு சில வாரங்களிலேயே இந்த பைக்கை கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், அது எப்போது என்ற அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

கேடிஎம் ட்யூக் வரிசையில் 125சிசி முதல் 390சிசி வரையிலான திறன் கொண்ட பைக்குகள் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

இவையனைத்தைக் காட்டிலும் அதிக சக்தி கொண்ட மாடலாக ட்யூக் 790 பைக் இந்தியாவில் களமிறங்க உள்ளது. இதுமட்டுமின்றி, அதீத திறன் மற்றும் பிரிமியம் தரத்திலும் இந்த பைக் தயாராகி வருகின்றது. இதன்காரணமாகவே, இளைஞர்கள் மத்தியில் அதிக ஆவலை அது தூண்டியுள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்... ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு!

இதுகுறித்து நமக்கு மேலும் கிடைத்த தகவலின்படி, தற்போது நாட்டில் 200க்கும் மேற்பட்ட 790 பைக்குகள் இருப்பதாகவும், அதன் உற்பத்தியை விரைவில் நிறுத்திவிட்டு ட்யூக் 890 பைக்குகளை அடுத்த வருடத்தில் இருந்து உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.

ஆகையால், ட்யூக் 790 பைக் இந்தியாவில் குறைவான எண்ணிக்கையில் (லிமிடெட் எடிசன்) விற்பனைச் செய்யப்பட இருப்பது தெரிய வருகின்றது.

எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்... ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு!

கேடிஎம் ட்யூக் 790 பைக்கில் புத்தம் புதிய எல்சி8 799சிசி திறன் கொண்ட லிக்யூட் கூல்ட், பேரல்லல் ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக, 102.5 பிஎச்பி பவரையும், 87 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜினில் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்... ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு!

இத்துடன், இந்த பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக 43 மிமீ அளவுகொண்ட அப்சைட் டவுண் ஃபோர்க் முன் பக்கத்திலும், டபிள்யூபி அட்ஜெஸ்டபிள் மோனோ-ஷாக் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் பாதுகாப்பான பிரேக்கிங் வசதிக்காக 300மிமீ அளவுள்ள டிஸ்க் முன்பக்கத்திலும், 240 மிமீ டிஸ்க் பின்பக்க வீலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்... ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு!

அதேசமயம், கேடிஎம் ட்யூக் 890 பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் எங்களிடம் இல்லை. ஆனால், 790 மாடலைக் காட்டிலும் கூடுதலாக 15 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையிலான பைக்கை அறிமகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், பிரேக்கிங் காலிபர் மற்றும் அட்ஜெஸ்டபிள் லிவர் உள்ளிட்டவற்றையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்... ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு!

கூடுதலாக, புதிதாக இந்தியாவில் களமிறங்க உள்ள இந்த 890 மற்றும் 790 பைக்குகளில் டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர்கள், கார்னரிங் ஏபிஎஸ், லான்ச் கன்ட்ரோல், மல்டிபிள் ரைடிங் மோட்கள் மற்றும் வீலி கன்ட்ரோல் உள்ளிட்டவை இடம் பெற உள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்... ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு!

லிமிடெட் எடிசனாக களம்காணும் ட்யூக் 790 பைக் இந்தியாவில் ரூ. 7.5 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலும் கிடைக்கவில்லை.

கேடிஎம் நிறுவனத்தின் இந்த பைக்கிற்கு போட்டியாக களத்தில் யாரும் இல்லை. இருப்பினும், கவாஸாகி இசட்800 மாடல் மட்டும் சற்று டஃப் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்... ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு!

இதேபோன்று, கேடிஎம் நிறுவனம், கூடுதலாக சில மாடல்களை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், வருகின்ற 2020ம் ஆண்டில் ஆர்சி 390, கேடிஎம் 390 அட்வென்சர் மற்றும் கேடிஎம் 790 அட்வென்சர் உள்ளிட்ட பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Duke 790 India Launch Confirmed Ahead Of Duke 890 Launch Next Year. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X