மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா?

மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா?

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவன மோட்டார்சைக்கிள்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தியாவும் இதற்கு விதி விலக்கு அல்ல. பெர்ஃபார்மென்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களை எதிர்பார்க்கும் இந்திய இளைஞர்களின் முதல் சாய்ஸ் கேடிஎம்தான். ஆனால் கேடிஎம் நிறுவன பைக்குகளின் விலை சற்று அதிகம்.

மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா?

எனவே இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற விலை குறைவான அதே சமயம் சிறிய இன்ஜின் பொருத்தப்பட்ட ட்யூக் 125 பைக்கை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கேடிஎம் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுவதால், கேடிஎம் ட்யூக் 125 மோட்டார்சைக்கிளின் விற்பனை சிறப்பாக உள்ளது.

மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா?

இந்த வரிசையில் கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 125 பைக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கேடிஎம் ஆர்சி 125 பைக் ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஆர்சி 125 பைக்கை கேடிஎம் நிறுவனம் இந்திய மார்க்கெட்டிலும் அறிமுகம் செய்யவுள்ளதாக வெளியான தகவல் இளைஞர்களின் ஆர்வத்தை தூண்டியது.

மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா?

இதன்படி கேடிஎம் ஆர்சி 125 மோட்டார்சைக்கிள் இந்திய மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மாடலுடன் ஒப்பிடுகையில் இந்திய மார்க்கெட்டிற்கான மாடலில் கேடிஎம் நிறுவனம் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளது.

மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா?

கேடிஎம் ஆர்சி 125 பைக்கிற்கு 1.47 லட்ச ரூபாய் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே இந்தியாவில் மிக அதிக விலை கொண்ட 125 சிசி பைக்குகளில் ஒன்றாக கேடிஎம் ஆர்சி 125 உருவெடுத்துள்ளது. அதிகப்படியான விலை என்றபோதும் கூட, கேடிஎம் ஆர்சி 125 பைக்கை தொடர்ந்து பலர் புக்கிங் செய்து கொண்டுதான் உள்ளனர்.

மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா?

இந்த சூழலில் கேடிஎம் ஆர்சி 125 பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை, ஏராளமான டீலர்ஷிப்கள் தொடங்கி விட்டன. இந்த வரிசையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு கேடிஎம் ஆர்சி 125 பைக் டெலிவரி செய்யப்படும் இன்ஸ்டாகிராம் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

கேடிஎம் ஆர்சி 125 பைக்கில், 125 சிசி, சிங்கிள் சிலிண்டர், ப்யூயல் இன்ஜெக்ஸன், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 9,250 ஆர்பிஎம்மில் 14.5 பிஎஸ் பவரையும், 8,000 ஆர்பிஎம்மில் 12 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. ட்யூக் 125 பைக்குடன் ஆர்சி 125 இன்ஜினை பகிர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா?

இன்ஜின் மட்டுமல்லாது பிரேக் செட் அப்பையும் ட்யூக் 125 பைக்கிடம் இருந்துதான் ஆர்சி 125 பெற்றுள்ளது. இந்த பைக்கின் முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதல் பாதுகாப்பிற்காக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா?

யமஹா YZF-R15 மற்றும் பஜாஜ் பல்சர் 200 ஆர்எஸ் உள்ளிட்ட மாடல்களுடன் கேடிஎம் ஆர்சி 125 போட்டியிடுகிறது. இவை இரண்டும் கேடிஎம் ஆர்சி 125 பைக்கை விட பெரிய இன்ஜினை கொண்டவை மட்டும் அல்ல. கேடிஎம் ஆர்சி 125 பைக்கை விட மலிவான விலையிலும் கிடைக்கின்றன. எனவே கேடிஎம் ஆர்சி 125 பைக்கிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது? என்பது வரும் மாதங்களில்தான் தெரியும்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM RC 125 Delivery Begins. Read in Tamil
Story first published: Monday, June 24, 2019, 18:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X