மலிவான விலையில் களமிறங்கும் கேடிஎம் புதிய மாடல்: அறிமுகம் எப்போது...?

கேடிஎம் நிறுவனம், அதன் புதிய மாடலான ஆர்சி 125 மாடலின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மலிவான விலையில் களமிறங்கும் கேடிஎம் புதிய மாடல்: அறிமுகம் எப்போது...?

ஆஸ்திரியன் நாட்டைச் சேர்ந்த கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து பைக்குகளை விற்பனைச் செய்து வருகிறது. இந்தநிறுவனம், ஆர்சி 125 மாடலை அண்மையில் இந்தியச் சாலைகளில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தியது.

மலிவான விலையில் களமிறங்கும் கேடிஎம் புதிய மாடல்: அறிமுகம் எப்போது...?

இந்த நிலையில், இந்த பைக்கினை வருகின்ற ஜீன் மாதத்தில் இந்த நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த, செய்தியை பைக்டெக்கோ ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

மலிவான விலையில் களமிறங்கும் கேடிஎம் புதிய மாடல்: அறிமுகம் எப்போது...?

பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கும் ஆர்சி125 மாடலை, ட்யூக் 125 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால், ட்யூக் 125 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே எஞ்ஜின்தான் ஆர்சி 125-லும் பொருத்தப்பட்டுள்ளது.

மலிவான விலையில் களமிறங்கும் கேடிஎம் புதிய மாடல்: அறிமுகம் எப்போது...?

அந்தவகையில், இந்த பைக்கில் 124.7சிசி கொண்ட லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 14.3 பிஎச்பி பவரை 9,250 ஆர்பிஎம்-லும், 12 என்எம் டார்க்கை 8,000 ஆர்பிஎம்-லும் வெளிப்படுத்தும். மேலும், இந்த எஞ்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இயங்கும்.

மலிவான விலையில் களமிறங்கும் கேடிஎம் புதிய மாடல்: அறிமுகம் எப்போது...?

ட்யூக் 125 மாடலுக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கேடிஎம் ஆர்சி 125 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. மேலும், இதனை லிட்டில் ட்யூக் என்றும் அழைக்கின்றனர். இந்நிலையில், இந்த புதிய மாடல் பைக்கை அந்த நிறுவனம் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் காட்சிகள் தற்போது இணையத்தில் உலா வருகின்றது.

மலிவான விலையில் களமிறங்கும் கேடிஎம் புதிய மாடல்: அறிமுகம் எப்போது...?

தற்போது காட்சிக்குள்ளாகி இருக்கும் இந்த மோட்டார்சைக்கிள், சர்வதேச அளவில் கிடைக்கும் ஆர்சி 125 மாடலைக் காட்டிலும் சில மாற்றங்களைப் பெற்றுள்ளது. அவ்வாறு, இதில் எக்சாஸ்ட் சிஸ்டம் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இது, விலைக் குறைப்பிற்கான நடவடிக்கையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், சர்வதேச அளவில் கிடைக்கும் ட்யூக்125 மாடல் இந்திய மாடலைக் காட்டிலும் 0.4 பிஎச்பி அதிகம் என கூறப்படுகிறது.

மலிவான விலையில் களமிறங்கும் கேடிஎம் புதிய மாடல்: அறிமுகம் எப்போது...?

இந்த புதிய மாடல் கேடிஎம் ஆர்சி 125 பைக்கில் டபிள்யூபி அப்சைட்-டவுண் ஃபோர்க் முன்பக்கத்திலும், மோனோ-சாக் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், 4-பிஸ்டன் காலிபர் கொண்ட 300mm டிஸ்க் பிரேக் முன்பக்கத்திலும், 200mm டிஸ்க் பிரேக் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

மலிவான விலையில் களமிறங்கும் கேடிஎம் புதிய மாடல்: அறிமுகம் எப்போது...?

யமஹா நிறுவனத்தின் ஆர்15 வி3 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் இந்த கேடிஎம்ம ஆர்சி 125 பைக் இந்திய மதிப்பில் ரூ. 1.4 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM RC 125 Launching In June 2019 — The Little Hooligan Is On Its Way. Read In Tamil.
Story first published: Monday, April 29, 2019, 19:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X