ஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கை வாங்கினால் என்னென்ன செய்யலாம்? இந்த பைக் பயணங்களுக்கு எவ்வாறு எல்லாம் பயன்படும் என்பதை விளக்கும் விதமாக அருமையான வீடியோ ஒன்றை கேடிஎம் நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது. சாகச பைக் பிரியர்களை சுண்டி இழுக்கும் விதத்தில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

ஆஃப்ரோடு சாகசங்களில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு

அண்மையில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக, இந்தியர்கள் மத்தியில் இந்த பைக் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

ஆஃப்ரோடு சாகசங்களில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு

அடுத்த மாதம் 6ந் தேதி கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய பைக் வீக் திருவிழாவின் மூலமாக இந்தியாவில் இந்த புதிய அட்வென்ச்சர் பைக் அறிமுகம் செய்யப்பட இருப்பதே, இந்தியர்கள் இந்த பைக்கின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆஃப்ரோடு சாகசங்களில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு

ஏற்கனவே சில அட்வென்ச்சர் டூரர் பைக் மாடல்கள் இருந்தாலும், கேடிஎம் நிறுவனத்தின் அதிசிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் நம்பகமான எஞ்சினுடன் வரும் அட்வென்ச்சர் வகை பைக் என்பதால் இந்த பைக்கை வாங்க பல இந்திய இளைஞர்கள் கனவுகளுடன் காத்துக் கிடக்கின்றனர்.

ஆஃப்ரோடு சாகசங்களில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு

இந்த நிலையில், இந்த பைக்கின் ஆஃப்ரோடு பயன்பாடு குறித்த பல சந்தேகங்கள் எழுந்தன. இவற்றை எல்லாம் போக்கும் விதமாக, இந்த பைக்கை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை காட்டும் விதத்தில் புதிய வீடியோவை கேடிஎம் வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்த பைக் நீண்ட தூர பயணங்களுக்கும், சாகசப் பயண விரும்பிகளுக்கும் மிக பொருத்தமாக அமையும் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.

நீண்ட தூர பயணங்கள், கரடுமுரடான சாலைகள், ஏன் ஒழுங்கற்ற சாலைகளில் கூட இந்த பைக்கை அனாயசமாக ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் சிறப்பு அம்சங்களை இந்த பைக் பெற்றிருப்பதை வீடியோ மூலமாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஆஃப்ரோடு சாகசங்களில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு

கேடிஎம் 390 ட்யூக் அடிப்படையிலான பைக் என்றாலும், கரடு முரடான சாலைகளை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கின் முன்புறத்தில் லாங் டிராவல் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷன் அமைப்பு முக்கிய மாற்றமாக கூறலாம். பின்புறத்திலும், சக்கரத்திற்கும், இருக்கைக்கு அதிக இடைவெளியுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆஃப்ரோடு சாகசங்களில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு

இது மாதிரியான அட்வென்ச்சர் டூரர் வகை பைக்குகளில் பொதுவாக ஸ்போக்ஸ் சக்கரங்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த பைக்கில் அலாய் வீல்களுடன் வர இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது சிறிய கற்கள், தடைகளால் எஞ்சின் பகுதி பாதிக்காதவாறு பேஷ் பிளேடு எனப்படும் எஞ்சின் பாதுகாப்பு தகடும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டேங்க் டிசைனும் மிகவும் அரக்கத்தனமாக இருக்கிறது.

ஆஃப்ரோடு சாகசங்களில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புளூடூத் இணைப்பு வசதி, விண்ட்ஸ்க்ரீன் வசதி ஆகியவை உள்ளன.

ஆஃப்ரோடு சாகசங்களில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு

இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் ஃபிக்ஸ்டு காலிபர் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு உகந்த பாஷ் 9M டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் மிக முக்கிய தொழில்நுட்பமாக அம்சமாக கூறலாம்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM has released official video for 390 Adventure bike to show off its capabilities in rough terrains.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X