விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...

கேடிஎம் ட்யூக்கின் பிரபலமான மாடல் பைக்குகளின் விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேடிஎம் 790 ட்யூக் மாடல் வெளியான பத்து நாட்களில் மட்டும் 41 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...

இதில் அதிகப்பட்சமாக கேடிஎம் 125 (ட்யூக்+ஆர்சி) மாடல் கடந்த மாதத்தில் 2,648 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இந்த லிஸ்ட்டில் கேடிம் 200, 250, 390 (ட்யூக்+ஆர்சி) மற்றும் சமீபத்திய அறிமுகம் ட்யூக் 790 பைக்கும் உள்ளன.

விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...

மொத்தமாக இந்நிறுவனம் 5,805 யூனிட் பைக்குகளை 39.28 சதவீத வளர்ச்சியுடன் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 4,168 யூனிட்கள் விற்பனையான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 1,637 யூனிட்கள் அதிகமாகும். ஆனால் 5,832 யூனிட்கள் விற்பனையான 2019 ஆகஸ்ட்டை விட 27 யூனிட்கள் குறைவாகும்.

விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...

கேடிஎம் நிறுவனத்தின் இந்த முன்னேற்றத்திற்கு 125சிசி எண்ட்ரி லெவலில் அறிமுகப்படுத்தப்பட்ட கேடிஎம் பைக்குகள் தான் மிக முக்கிய காரணம். 2018 நவம்பரில் கேடிஎம் ட்யூக் 125 வெளியானது. அதனை தொடர்ந்து இந்த வருடத்தின் துவக்கத்தில் இப்பைக்கின் ஆர்சி மாடல் அறிமுகமானது. இவை இரண்டும் தான் தற்சமயம் இந்திய மார்கெட்டில் மிக சிறப்பான முறையில் விற்பனையாகி கொண்டிருக்கும் பைக்குகளாகும்.

விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...

ஆனால் இந்த 125 ட்யூக்கின் அபரிதமான வளர்ச்சியால் கேடிஎம்மின் மற்ற மாடல்களான 200, 250, 390 போன்ற பைக்குகள் கடந்த ஆண்டை காட்டிலும் சிறிது வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக 200 மாடலின் விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 26.85 சதவீதமும், கடந்த ஆகஸ்ட்டை விட 39 யூனிட்களும் குறைந்துள்ளது. இதை தான் கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.

Models Sep-19 Sep-18 Diff %
KTM 125 Duke 2,648 0 -
KTM 200 Duke 2,095 2,864 -26.85
KTM 250 Duke 623 629 -0.95
KTM 390 Duke 398 675 -14.04
KTM 790 Duke 41 0 -
விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...

200 மாடலை போலவே கேடிஎம் 250 மாடலும் சிறிது சரிவை கண்டுள்ளது. 629 யூனிட்கள் 2018 செப்டம்பர் மாதத்தில் விற்பனையான இப்பைக் கடந்த மாதத்தில் 6 யூனிட்கள் குறைவாக 623 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதேசமயம் 592 யூனிட்கள் மட்டுமே விற்பனையான 2019 ஆகஸ்ட்டை விட இந்த எண்ணிக்கை 5.24 சதவீதம் கூடுதலாகும்.

விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...

கேடிஎம்390 மாடலை பொறுத்த வரை சென்ற செப்டம்பர் மாதத்தில் 398 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்திருந்தது. இந்த எண்ணிக்கை 675 யூனிட்கள் விற்பனையான கடந்த ஆண்டு செப்டம்பரை விட 41.04 சதவீதமும், கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 2.69 சதவீதமும் குறைவாகும்.

விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...

கேடிஎம் 790 கடந்த மாதம் 23ஆம் தேதியில் தான் ரூ.8.64 லட்சம் விலையுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் புனேவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகின்ற இப்பைக், சிகேடி வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...

அறிமுகமான 10 நாட்களிலேயே 41 யூனிட்கள் விற்பனையாகியுள்ள 790 பைக் இந்த வகையில், தனது போட்டி மாடல்களான சுசுகி சிஎஸ்எக்ஸ்-எஸ்750, டுகாட்டி மான்ஸ்டர் 797, டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள், யமஹா எம்டி-09 மற்றும் கவாஸாகி இசட்900 போன்ற பைக்குகளை பின்னுக்கு தள்ளியுள்ளது.

விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...

799சிசி லிக்யூடு கூல்டு ட்வின் என்ஜினுடன் வெளியாகி வரும் 790 பைக் 104 பிஎச்பி பவரையும் 87 என்எம் டார்க் திறனை ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய டிரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளிப்படுத்துகிறது. சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்பாக முன் சக்கரத்தில் 43 மிமீ தலைக்கீழான ஃபோர்க் மற்றும் ட்யூல் 300 மிமீ டிஸ்க்கும் பின் சக்கரத்தில் முழுவதும் சரி செய்யும் வகையிலான மோனோ-ஷாக் மற்றும் சிங்கிள் 240 மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...

கேடிஎம் தனது அடுத்த தயாரிப்பு வாகனமான 390 அட்வென்ஜர் பைக்கை வருகிற டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. இதனை தொடர்ந்து கேடிஎம் அட்வென்ஜர் 250 வெளியாகவுள்ளது. இந்த இரு அட்வென்ஜர் பைக்குகளும் கேடிஎம் நிறுவனத்தின் விற்பனை சதவீதத்தை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
In Sep 2019KTM Duke 125, 200 help increase sales by 39 percentage
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X