நாளை புதிய பைக்கை களமிறக்கிறது கேடிஎம்... இது எந்த பைக்கிற்கெல்லாம் டஃப் கொடுக்க போகுது தெரியுமா..?

கேடிஎம் நிறுவனம், அதன் புத்தம் புதிய மாடல் ஒன்றை இந்தியாவில் நாளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை புதிய பைக்கை களமிறக்கிறது கேடிஎம்... இது எந்த பைக்கிற்கெல்லாம் டஃப் கொடுக்க போகுது தெரியுமா..?

இந்திய இருசக்கர வாகன உலகில் மிகவும் பிரபலமான ஓர் நிறுவனமாக கேடிஎம் இருக்கின்றது. இந்நிறுவனம், அதன் புத்தம் புதிய மாடலான 390 அட்வென்சர் என்ற பைக்கை கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 2019 இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது.

தற்போது இந்த மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் அந்நிறுவனம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை புதிய பைக்கை களமிறக்கிறது கேடிஎம்... இது எந்த பைக்கிற்கெல்லாம் டஃப் கொடுக்க போகுது தெரியுமா..?

அதேசமயம், நாளைய தினமே (டிசம்பர் 6) அந்த புத்தம் புதிய மாடலை கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலை பைக்வேல் என்ற ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

மேலும், இதற்காக நாளை கோவா மாநிலத்தில் நடைபெற உள்ள இந்தியா பைக் வாரத்தை அது தேர்ந்தெடுத்திருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளை புதிய பைக்கை களமிறக்கிறது கேடிஎம்... இது எந்த பைக்கிற்கெல்லாம் டஃப் கொடுக்க போகுது தெரியுமா..?

இந்நிலையில், புதிய 390 அட்வென்சர் பைக்கிற்கான புக்கிங்கை குறிப்பிட்ட கேடிஎம் டீலர்கள் முன்னதாகவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

ஆனால், இந்த முன்பதிவுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் கேடிஎம் நிறுவனம் சார்வில் எதுவும் வெளியடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், ரூ. 10 ஆயிரம் என்ற தொகையின்கீழ் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கிற்கான புக்கிங்கை டீலர்கள் செய்து வருகின்றனர்.

நாளை புதிய பைக்கை களமிறக்கிறது கேடிஎம்... இது எந்த பைக்கிற்கெல்லாம் டஃப் கொடுக்க போகுது தெரியுமா..?

இந்த பைக் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 3.2 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

நாளை புதிய பைக்கை களமிறக்கிறது கேடிஎம்... இது எந்த பைக்கிற்கெல்லாம் டஃப் கொடுக்க போகுது தெரியுமா..?

கேடிஎம் நிறுவனம் இந்த புத்தம் புதிய அட்வென்சர் பைக்கிற்கான எஞ்ஜினை 390 ட்யூக் பைக்கிடம் பெற்று பகிர்ந்துள்ளது. இது 373 சிசி திறனை வெளிப்படுத்தும் சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டார் ஆகும். மேலும், அதிகபட்சமாக 43 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க்கையும் இது வெளிப்படுத்தும்.

இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சிறப்பம்சமாக ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை புதிய பைக்கை களமிறக்கிறது கேடிஎம்... இது எந்த பைக்கிற்கெல்லாம் டஃப் கொடுக்க போகுது தெரியுமா..?

இத்துடன், உரிமையாளர்களுக்கு மிகவும் ஃபிரண்டிலியான ரைடிங் அனுபவத்தை வழங்குகின்ற வகையில் கூடுதல் சிறப்பு வசதிகளை கேடிஎம் நிறுவனம் அட்வென்சர் 390 மேற்கொள்ள இருக்கின்றது.

அந்தவகையில், பைக்கின் முன் பக்கத்தில் 19 இன்ச் மற்றும் பின்பக்கத்தில் 17 இன்ச் அளவு கொண்ட வீல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன் ஆஃப் மற்றும் ஆன் ரோடு என இரு விதமான சாலைகளிலும் பயன்படுகின்ற வகையிலான டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

MOST READ: "இனி ஹெல்மெட் கட்டாயம் இல்லை" நகரவாசிகளுக்கு மட்டும் விலக்களித்த மாநிலம்.. எது தெரியுமா?

நாளை புதிய பைக்கை களமிறக்கிறது கேடிஎம்... இது எந்த பைக்கிற்கெல்லாம் டஃப் கொடுக்க போகுது தெரியுமா..?

தொடர்ந்து, அனைத்து விதமான சாலைகளிலும் பயன்படுகின்ற வகையில் பைக்கிற்கு கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எத்தகைய சாலைகளில் செல்லும்கின்ற வகையில் முன்பக்கத்தில் இன்வெர்டட் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது.

MOST READ: முகேஷ் அம்பானியின் கான்வாயில் இணைந்த புதிய சொகுசு கார்... அடேங்கப்பா, இந்த காரோட விலை இத்தனை கோடியா!

நாளை புதிய பைக்கை களமிறக்கிறது கேடிஎம்... இது எந்த பைக்கிற்கெல்லாம் டஃப் கொடுக்க போகுது தெரியுமா..?

இதுமட்டுமின்றி, பைக்கை கூடுதல் பிரிமியம் லுக்கில் காட்டும் விதமாக ப்ளூடூத் வசதிகொண்ட டிஎஃப்டி வண்ணத் திரை, எல்இடி மின் விளக்குகள், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன், டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டமும் இதில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், சற்று உயரமான வின்ட்ஸ்கிரீன், சம்ப் குவார்ட் மற்றும் 14.5 லிட்டர் ப்யூவல் டேங்க் உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

MOST READ: தமிழகத்தில்தான் இந்த கூத்து... பாட்டிலில் பெட்ரோல் விற்க தடை... காரணம் தெரிந்தால் கோவப்படுவீங்க...

நாளை புதிய பைக்கை களமிறக்கிறது கேடிஎம்... இது எந்த பைக்கிற்கெல்லாம் டஃப் கொடுக்க போகுது தெரியுமா..?

இந்த பைக் இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் ஜி310 ஜிஎஸ் மற்றும் கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 மாடல் பைக்குகளுடன் போட்டியிட இருக்கின்றது.

மேலும், மற்ற என்ட்ரீ லெவல் அட்வென்சர் ரக பைக்குகளுடன் அது கடுமையான போட்டியைச் சந்திக்க உள்ளது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Unveils 390 Adventure In India Tomorrow. Read In Tamil.
Story first published: Thursday, December 5, 2019, 17:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X