13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

டூவீலர் உற்பத்தியாளர்கள், டீலர்கள், ஆர்டிஓக்கள் ஆகிய 3 தரப்பினரும் இணைந்து, இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் செய்து வந்த மெகா மோசடி ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான், சாலை விபத்துக்களில் அதிகம் உயிரிழக்கின்றனர்.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதே இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும், கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் இந்தியா முழுக்க நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

இதுதவிர ஹெல்மெட் தொடர்பாக மற்றொரு முக்கியமான சட்டமும் இந்தியாவில் தற்போது அமலில் உள்ளது. ஆனால் இந்த சட்டம் குறித்து நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அறிந்திருந்தாலும், அது தொடர்பாக எவ்விதமான கேள்வியையும் எழுப்பியிருக்க மாட்டோம்.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

இதனை பயன்படுத்தி கொண்டு, கடந்த 13 ஆண்டுகளாக மெகா மோசடி ஒன்று நடைபெற்றுள்ளது. இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள், டீலர்கள் மற்றும் ஆர்டிஓ எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகிய 3 தரப்பினரும் கூட்டாக இணைந்து அரங்கேற்றிய இந்த மெகா மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

ஓரியண்டல் மனித உரிமைகள் பாதுகாப்பு மன்றம் என்ற (Oriental Human Rights Protection Forum) அமைப்பை சேர்ந்த சவுரப் பரத்வாஜ் மற்றும் மனிஷ் சிங் சவுகான் ஆகியோர்தான், 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த மோசடியை தற்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

1989 மத்திய மோட்டார் வாகன விதிகள் 138 (4)(எப்)-ன் படி, புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச ஹெல்மெட்கள் வழங்கப்பட வேண்டும். அதுவும் ஒன்றல்ல. இரண்டு ஹெல்மெட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

அத்துடன் இந்திய தர நிலைகள் பணியகத்திற்கு உட்பட்ட, 1986 இந்திய தர நிர்ணய சட்டம் பரிந்துரைத்துள்ள விதிகளின்படி ஹெல்மெட் தரமானதாகவும் இருக்க வேண்டும். புதிய இரு சக்கர வாகனம் வாங்கும்போது, டீலர்கள் மூலமாக இரண்டு ஹெல்மெட்களையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

வாடிக்கையாளர்களுக்கு 2 இலவச ஹெல்மெட்களும் வழங்கப்பட்டு விட்டதா? என்பதை ஆர்டிஓ சரிபார்க்க வேண்டும். இரண்டு ஹெல்மெட்களும் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு வந்து விட்டதை உறுதி செய்த பின்பே இரு சக்கர வாகனத்தை ஆர்டிஓ பதிவு செய்ய வேண்டும். அதுவரை பதிவு செய்யக்கூடாது.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

புதிதாக சேர்க்கப்பட்ட இந்த விதியானது, கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் 13 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் இலவச ஹெல்மெட் சட்டம் சரியாக அமல்படுத்தப்படவில்லை.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

இந்த சூழலில், கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 6 மற்றும் 2018ம் ஆண்டு ஜனவரி 10 ஆகிய இரண்டு தேதிகளில் போக்குவரத்து துறை கமிஷனரின் அலுவலகத்தில் இருந்து, ஆர்டிஓக்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

இதில், ''ஒவ்வொரு புதிய இரு சக்கர வாகனத்திற்கும் 2 இலவச ஹெல்மெட்களை வழங்கும்படி டீலர்களுக்கு உத்தரவிடுங்கள். 2 ஹெல்மெட்கள் வழங்கப்பட்டு விட்டதை உறுதி செய்யாமல், புதிய வாகனத்தை பதிவு செய்ய வேண்டாம். இந்த விதிக்கு உட்படாத டீலர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்'' என கூறப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

ஆனால் அதன்பின்பும் கூட, இலவச ஹெல்மெட் உத்தரவு சரியாக அமல்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. எனவே இது தொடர்பாக, சவுரப் பரத்வாஜ் மற்றும் மனிஷ் சிங் சவுகான் ஆகிய இருவரும், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச்சில் தற்போது பொது நல வழக்கு தொடர்ந்துள்ளனர்.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

இதில், ''இலவசமாக கிடைக்க வேண்டிய 2 ஹெல்மெட்களை, கடந்த 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் இழந்து வருகின்றனர். இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள், டீலர்கள் மற்றும் ஆர்டிஓக்கள் கூட்டணி அமைத்து வாடிக்கையாளர்களுக்கு இந்த மோசடியை செய்துள்ளனர்'' என கூறியுள்ளனர்.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

வழக்கறிஞர் அவ்தேஷ் கேசரி என்பவர் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொது நல வழக்கு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

புதிதாக இரு சக்கர வாகனங்களை வாங்கிய 15 பேரிடம் எழுத்து பூர்வமாக பெற்ற கடிதமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ''எங்களுக்கு இரண்டு இலவச ஹெல்மெட்கள் வழங்கப்படவில்லை'' என அவர்கள் இந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

இந்த சூழலில், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் நீதிபதிகள் ஆர்கே தேஷ்பாண்டே மற்றும் வினய் ஜோஷி ஆகியோர் முன்னிலையில், சவுரப் பரத்வாஜ் மற்றும் மனிஷ் சிங் சவுகான் ஆகியோர் தாக்கல் செய்த இலவச ஹெல்மெட் மனு விசாரணைக்கு வந்தது.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து, மாநிலங்களின் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறைகள், ஆர்டிஓ மற்றும் நாக்பூரை சேர்ந்த 17 இரு சக்கர வாகன டீலர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

புதிதாக டூவீலர் வாங்கும் சிலர், தனியாக செலவழிக்க வேண்டும் என்பதற்காகவே ஹெல்மெட் வாங்குவதை தவிர்க்கின்றனர். ஆனால் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும்போது, சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

இதன் காரணமாகதான் இலவச ஹெல்மெட் சட்டமே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்களின் அறியாமையை பயன்படுத்தி நடைபெற்றுள்ள இந்த மெகா மோசடி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

மஹாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2017ம் ஆண்டு டிசம்பர் 31 வரை, இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த 4,140 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மோசடி... டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் முறைகேடு அம்பலம்

இலவச ஹெல்மெட் சட்டம் உரிய முறையில் அமல்படுத்தப்பட்டிருந்தால், இவர்கள் அனைவரின் உயிரும் காப்பாற்றப்பட்டிருக்குமே? எனவும் சவுரப் பரத்வாஜ், மனிஷ் சிங் சவுகான் ஆகிய இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Law Not Implemented Effectively: PIL Seeks Free Helmets For Two-wheeler Buyers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X