தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு, மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து, கண்ணீருடன் புல்லட்டை பரிசாக வழங்கினர். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால், நீங்கள் நெகிழ்ச்சியடைய கூடும்.

மதுரை மாவட்டம் கோட்டக்குடி பகுதியில் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி செயல்பட்டு கொண்டுள்ளது. இங்கு வேதமுத்து என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி ஊர் மக்கள் மத்தியிலும் வேதமுத்து மிகவும் பிரபலமான நபர்.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

தலைமை ஆசிரியர் வேதமுத்து, கடந்த 1996ம் ஆண்டு, இப்பள்ளியில் பணிக்கு சேர்ந்தார். தன்னிடம் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளிடம், எவ்விதமான பாகுபாடும் காட்டாமல், மிகவும் அன்பாகவும், அக்கறையுடனும் பழகி வந்தவர்தான் தலைமை ஆசிரியர் வேதமுத்து.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

படிப்புடன் சேர்த்து, மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கத்தையும் அவர் கற்று கொடுத்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் தற்போது வரை, ஒருவரை கூட அவர் அடித்ததே கிடையாது என மாணவ, மாணவிகள் பெருமிதம் பொங்க தெரிவிக்கின்றனர்.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

அன்பு என்ற ஆயுதம் மூலமே அவர் அனைத்தையும் சாத்தியப்படுத்தினார். மாணவ, மாணவிகள் தவறு செய்தால் உடனடியாக அவர்களது பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைப்பது தலைமை ஆசிரியர் வேதமுத்துவின் வழக்கம்.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

பின்னர் தவறை எவ்வாறு திருத்துவது? என்பதையும் அன்பாக எடுத்துரைத்து, மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியவர் தலைமை ஆசிரியர் வேதமுத்து. எனவேதான் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது ஊர் மக்கள் மத்தியிலும் அவர் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ளார்.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

இந்த சூழலில், சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு, நேற்று (ஜனவரி 8) தலைமை ஆசிரியர் வேதமுத்து ஓய்வு பெற்றார். மாணவ, மாணவிகளுக்கு மிகவும் கசப்பான நாள் இது. ஏனெனில் தலைமை ஆசிரியர் வேதமுத்து தங்களை விட்டு பிரிவதை ஏற்று கொள்ள மாணவ, மாணவிகளின் மனம் தயாராக இல்லை.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

இருந்தாலும் அவருக்கு பிரியாவிடை கொடுக்க அவர்கள் கண்ணீருடன் தயாராகினர். முன்னதாக தலைமை ஆசிரியர் வேதமுத்து பணி ஓய்வு பெறுவதை அறிந்து கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள், அவரை கௌரவிக்கும் வகையில் விழா ஒன்றை நடத்த முடிவு செய்தனர்.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

மிகவும் உணர்ச்சிகரமான அந்த விழா நேற்று நடைபெற்றது. அப்போது ''எங்களை விட்டு போகதீங்க சார்'' என மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு கதறியழுதனர். இதனை கண்ட கிராம மக்களின் கண்களிலும் கண்ணீர் துளிகளை பார்க்க முடிந்தது.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

சாட்டை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், சமுத்திரக்கனி கிளம்பி செல்லும்போது மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுவார்கள். அக்காட்சியை நினைவு படுத்துவதுபோல் இருந்தது இச்சம்பவம். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி கொண்டுள்ளன.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

முன்னதாக தலைமை ஆசிரியர் வேதமுத்துவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில்தான் காணப்பட்டார். ஏனெனில் சுமார் 23 ஆண்டு காலமாக பணியாற்றிய பள்ளியையும், அன்பாக பழகிய மாணவ, மாணவிகளையும் பிரிந்து செல்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

இருந்தாலும் மனதை திடப்படுத்தி கொண்ட அவர், மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். தற்போது பள்ளியில் படித்து கொண்டிருப்பவர்கள் மட்டுமின்றி முன்னாள் மாணவ, மாணவிகளும், பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

இந்த விழாவில் மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள், ஊர் மக்கள் சார்பில், தலைமை ஆசிரியர் வேதமுத்துவிற்கு புல்லட் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இதில், தலைமை ஆசிரியர் வேதமுத்துவை அமர வைத்து அழகு பார்த்த அவர்கள், அந்த பைக்கிலேயே அவரை வழியனுப்பி வைத்தனர்.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

தலைமை ஆசிரியர் வேதமுத்துவிற்கு புல்லட் என்றால் கொள்ளை பிரியம் என கூறப்படுகிறது. எனவேதான் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றாக சேர்ந்து, அவருக்கு புல்லட்டை பரிசாக வழங்கி கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

தலைமை ஆசிரியர் வேதமுத்துவிற்கு மட்டுமல்ல. நம்மில் பலருக்கும் புல்லட் என்றால் கொள்ளை பிரியம் இருக்கவே செய்கிறது. ஏனென்றால் உலகில் மிக நீண்ட காலமாக உற்பத்தியில் இருக்கும் மோட்டார் சைக்கிள் என்ற பெருமை புல்லட்டிற்கு உள்ளது.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற புல்லட் 350 மோட்டார் சைக்கிள், 88 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 1931ம் ஆண்டில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதன் முதலில் இங்கிலாந்து மார்க்கெட்டில்தான் (1931ம் ஆண்டு) புல்லட் லான்ச் ஆனது.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

அதன்பின் 20 ஆண்டுகள் கழித்து, அதாவது கடந்த 1951ம் ஆண்டில்தான், இந்திய மார்க்கெட்டில் புல்லட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்தியாவில் புல்லட் கம்பீர நடை போட்டு கொண்டிருக்கிறது.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

புல்லட் தவிர, உலகில் வேறு எந்த மோட்டார் சைக்கிளும், மார்க்கெட்டில் இவ்வளவு காலம் நீடித்து நிலைத்து நின்றது கிடையாது. எனவேதான் உலகில் மிக நீண்ட காலமாக உற்பத்தியில் இருக்கும் மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை புல்லட் தன் கைவசம் வைத்துள்ளது.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

இன்றும் கூட புல்லட்டிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து கொண்டு, அப்படியே புல்லட்டில் ஒய்யாரமாக ஊருக்குள் பவனி வந்தால் தனி கெத்துதான். அப்போது அனைவரின் கண்களும் உங்களையே கவனிக்க கூடும்.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

ஆனால் புல்லட் என்பது தனி நிறுவனம் என பலர் நினைத்து கொண்டுள்ளனர். அப்படி கிடையாது. புல்லட் என்பது இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றாகும்.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க ராயல் என்பீல்டு நிறுவனம், முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்த பைக்குகளில் ஒன்று புல்லட். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புல்லட், வாடிக்கையாளர்கள் இடையே மட்டுமின்றி, ராணுவ வீரர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம்.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

நாட்டின் எல்லை பகுதிகளில் ராணுவ வீரர்கள் ரோந்து செல்ல பொருத்தமான மோட்டார் சைக்கிள் புல்லட்தான் என கடந்த 1965ம் ஆண்டில் இந்திய அரசு முடிவு செய்தது. இதன்பின் நமது நாட்டின் எல்லைகளையும், நம்மையும் காக்கும் ராணுவ வீரர்களுக்கு புல்லட்கள் வழங்கப்பட்டன.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

அந்த சமயத்தில் மொத்தம் 800 புல்லட்களுக்கு (350 சிசி) மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது. அதன்பின் புல்லட் உள்பட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதை இந்திய ராணுவம் அதிகரிக்க தொடங்கியது.

தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

நாட்டின் வடக்கு மற்றும் வட மேற்கு எல்லைகளில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் இன்றளவும் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: Tamil Asianet News

Most Read Articles
English summary
Madurai School Students And Public Gifted Royal Enfield Bullet To Headmaster. Read in Tamil
Story first published: Wednesday, January 9, 2019, 13:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X