ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதன் இ கிளாஸ் கார்களை பிஎஸ்-6 மாசு உழிழ்வு தரத்திற்கேற்ப ட்யூன் அப் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்!

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், அதன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திலான நீளமான வீல் பேஸைக் கொண்ட இ-கிளாஸ் செடான் ரக கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்!

புதிய மாசு உமிழ்வு தரத்திற்கேற்ப உருவாகியுள்ள இந்த இ-கிளாஸ் கார்கள், ரூ. 57.5 லட்சம் என்ற ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கின்றது. இதன் ஹை வேரியண்டான டாப்-என்ட் டீசல் எஞ்ஜின் ரூ. 62.5 லட்சம் என்ற விலையைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.

ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்!

இந்த செடான் ரக சொகுசு காரில் மிகப் பெரிய மாற்றமாக, அதன் எஞ்ஜின் லைன் அப், மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், இ 200 மற்றும் இ 220டி மாடலில் உள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு ஏற்ப ட்யூன் அப் செய்யப்பட்டுள்ளது.

ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்!

இதில், 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் 194 எச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வழங்கும். அதேபோன்று, 2.0 பெட்ரோல் எஞ்ஜின் 197 எச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைப் பெற்றுள்ளது. தற்போதைய பெட்ரோல் எஞ்ஜினின் எச்பி-ஆனது முந்தைய மாடலைக் காட்டிலும் 13 எச்பி அதிகமாகும். இந்த எஞ்ஜின்கள் 9 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்கும்.

ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்!

ஆனால், இ 350டி மாடிலில் பொருத்தப்பட்டுள்ள வி6 டீசல் எஞ்ஜினை அந்த நிறுவனம் பிஎஸ்-6 தரத்திற்கு ஏற்ப ட்யூன் அப் செய்யவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம், மெர்சிடிஸ் இ-கிளாஸ் எல்டபிள்யூ வெர்ஷனில் பிஎஸ்-6 தரம் கிடைக்கின்றது. அவை, எக்ஸ்பிரஷன் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய இரண்டு ட்ரிம் லெவல்களில் கிடைக்கின்றன.

ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்!

இதில் ஹை வேரியண்டான இ-கிளாஸ் எக்ஸ்கிளுசியூவில் புதிய தொழில்நுட்பமாக வையர்லெஸ் சார்ஜிங் பேட்கள் பின்பக்க இருக்கையில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், சவுண்ட் சிஸ்டம், ஏசி, லைட் உள்ளிட்டவற்றை கன்ட்ரோல் செய்யும் வகையிலான டச் ஸ்கிரீன் பின்பக்க இருக்கையின் ஆர்ம் ரெஸ்டில் கொடுக்கப்பட்டுள்ளன.

ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்!

மேலும், 12.3 இன்ச் கொண்ட டிஸ்பிளே உடன் கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் பாதுகாப்பு அம்சங்களாக, காருக்குள் மொத்தம் ஏழு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்பி மற்றும் பிராண்ட் ப்ரீ சேப்டி சிஸ்டம் உள்ளிட்டவை கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன.

ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய ரகத்திலான அனைத்து இ-கிளாஸ் கார்களும், இந்தியாவில் ஆடி ஏ6, பிஎம்டபிள்யூ 5 செரீஸ் மற்றும் ஜிடி 6 செரீஸ் கார்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.

Most Read Articles
English summary
Mercedes-Benz E-Class Long Wheelbase Launched In India — Prices, Specs, Features & Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X